சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

சென்னை திமுக பிரமுகர் கே.கே.நகர் தனசேகரனுக்கு பட்டப்பகலில் அரிவாள் வெட்டு

Google Oneindia Tamil News

சென்னை: சென்னை திமுக பிரமுகரும் திமுக தலைமை செயற்குழு உறுப்பினருமான கே.கே. நகர் தனசேகரன் பட்டப்பகலில் திமுக அலுவலகத்தில் அரிவாளால் வெட்டப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தென்சென்னை திமுகவின் முக்கிய பிரமுகராக இருப்பவர் கே.கே.நகர் தனசேகர். சென்னையில் பல்வேறு சர்ச்சைகளிலும் சிக்கியவர். திமுக கவுன்சிலராக இருந்த தனசேகரன் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டவர்.

DMKs KK Nagar Dhanasekaran attacked by sickle

சென்னை கே.கே.நகர் திமுக மகளிரணி பிரமுகர் பால்மலர் கொலை வழக்கில் தனசேகரனுக்கும் தொடர்பிருப்பதாகவும் குற்றச்சாட்டுகள் எழுந்தன. அண்மையில் சென்னை மேற்கு மாவட்ட திமுக செயலாளராக தனசேகரன் நியமிக்கப்படலாம் எனவும் செய்திகள் வெளியாகி இருந்தன. இந்த நிலையில் சென்னையில் கே.கே.நகர் பகுதி திமுக அலுவலகத்தில் இன்று தனசேகரன் அமர்ந்திருந்தார்.

யானை மேல் உட்கார்ந்து யோகா செய்த பாபா ராம்தேவ்-பொத்தென கீழே விழுந்த பரிதாபம்- வைரல் வீடியோ யானை மேல் உட்கார்ந்து யோகா செய்த பாபா ராம்தேவ்-பொத்தென கீழே விழுந்த பரிதாபம்- வைரல் வீடியோ

அப்போது அரிவாள் சகிதமாக உள்ளே நுழைந்த மர்ம நபர் அமுதா என்ற பணிப்பெண்ணை சரமாரியாக வெட்டி இருக்கிறார். இதை தடுக்க முயன்ற தனசேகரனுக்கும் அரிவாள் வெட்டு விழுந்தது. இதில் பலத்த காயமடைந்த தனசேகரன் சென்னை தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இதனை கேள்விபட்ட தனசேகரன் ஆதரவாளர்கள் அந்த தனியார் மருத்துவமனை முன்பு குவிந்ததால் பதற்றம் ஏற்பட்டது.,

2 பேர் கைது

இதனிடையே கே.கே.நகர் தனசேகரனை அரிவாளால் வெட்டியதாக 2 பேரை சென்னை போலீசார் கைது செய்துள்ளனர்.

English summary
DMK's KK Nagar Dhanasekaran attacked by sickle on Today.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X