சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

பாஜகவின் நீண்டகால கனவு... 200 தொகுதி பார்முலா மூலம் நிறைவேற்றித் தரும் திமுக- காங்-க்கு பெப்பே!

Google Oneindia Tamil News

சென்னை: தமிழக சட்டசபை தேர்தலில் திமுக 200-க்கும் அதிகமான தொகுதிகளில் போட்டியிட முடிவு செய்திருப்பதால் காங்கிரஸ் உள்ளிட்ட பல கட்சிகள் அந்த அணியில் இருந்து வெளியேறும் சூழ்நிலை உருவாகி உள்ளது. இன்னொரு பக்கம் காங்கிரஸை கழற்றிவிடுவதன் மூலம் பாஜகவிடம் இருந்து வந்த மறைமுக நெருக்கடிகள் திமுகவுக்கு சற்று தணியவும் வாய்ப்பிருக்கிறது எனவும் கூறப்படுகிறது.

தமிழக சட்டசபை தேர்தல் கூட்டணி தொடர்பான விவாதங்கள் அரசியல் களத்தில் களைகட்டுகின்றன. திமுகவைப் பொறுத்தவரை உதயசூரியன் சின்னத்தில் 200க்கும் அதிகமான இடங்களில் போட்டியிடுவது என முடிவு செய்திருக்கிறது.

அதிமுக ஆலோசனைக் கூட்டமும்... பின்னணியும்... மனம் விட்டு பேசப்போவது இதைப்பற்றித்தான்..! அதிமுக ஆலோசனைக் கூட்டமும்... பின்னணியும்... மனம் விட்டு பேசப்போவது இதைப்பற்றித்தான்..!

திருமாவளவன் கருத்து

திருமாவளவன் கருத்து

இதனால் திமுக கூட்டணி கட்சிகள் கடந்த காலங்களைப் போல நினைத்த தொகுதிகளை இம்முறை கேட்டுப் பெற முடியாது என திட்டவட்டமாக தெரிந்துவிட்டது. இதனை சுட்டிகாட்டியிருக்கும் விசிக தலைவர் திருமாவளவன், திமுகவின் இம்முடிவு கூட்டணி கட்சிகளுக்கு நெருக்கடிதான் என ஒப்புக் கொண்டிருக்கிறார்.

திமுக நிம்மதி பெருமூச்சு

திமுக நிம்மதி பெருமூச்சு

குறிப்பாக எப்போதும் 60 தொகுதி கனவில் இருக்கும் காங்கிரஸ் கட்சிக்கு அதிர்ச்சி வைத்தியமாகத்தான் இது இருக்கும். இதனால் திமுகவை விட்டு காங்கிரஸ் வெளியேறி தனி அணி அமைக்கலாம் அல்லது வேறு ஒரு அணியில் இணையலாம். காங்கிரஸ் வெளியேறுவதை திமுகவை நிம்மதி பெருமூச்சுடன்தான் பார்க்கும் என்கின்றனர் அரசியல் பார்வையாளர்கள்.

தமிழக காங்கிரஸ்- பாஜக

தமிழக காங்கிரஸ்- பாஜக

இந்திய அளவில் காங்கிரஸுக்கு இன்னமும் வாழ்க்கை கொடுத்துக் கொண்டிருக்கிறது தமிழகம் மட்டும்தான். அதுவும் திமுக கூட்டணியின் தயவில்தான் காங்கிரஸ் உயிர்ப்போடு வலம் வந்து கொண்டிருக்கிறது. பல மாநிலங்களில் காங்கிரசை இல்லாது ஒழித்து அந்த இடத்துக்கு பாஜக வந்துவிட்டது. தமிழகத்தில் காங்கிரஸையும் ஒழிக்க முடியவில்லை. பாஜகவும் கால்பதிக்கவும் முடியவில்லை.

நிறைவேற்றப்படும் பாஜக விருப்பம்

நிறைவேற்றப்படும் பாஜக விருப்பம்

திராவிட அரசியலின் பலத்தில் நிற்கும் காங்கிரஸுக்கு முடிவு கட்டுவதில் பாஜக மேலிடம் நீண்டகாலமாக கவனம் செலுத்தி வருகிறது. பல அரசியல் கட்சிகளை பதம் பார்த்த பாஜக, திமுகவுக்கான நிபந்தனைகளில் ஒன்றாக காங்கிரஸை கழற்றிவிட வேண்டும் என்பதை முன்வைத்து அழுத்தம் கொடுப்பதாகவும் செய்திகள் அவ்வப்போது வருவது உண்டு. பாஜகவின் இந்த விருப்பத்தை நிறைவேற்றுகிற தருணமாக திமுக இதனைப் பார்க்கிறது.

திமுக மத்திய அரசில் இடம்பெறுமா?

திமுக மத்திய அரசில் இடம்பெறுமா?

அப்படி காங்கிரஸ், விடுதலை சிறுத்தைகள், இடதுசாரிகள் உள்ளிட்ட கட்சிகள் வெளியேறும் நிலையில் பாமக, தேமுதிக போன்றவை திமுக அணிக்கு வரக் கூடும். அப்படி காலச் சூழல் மாறினால் பாஜகவுடன் இன்னமும் திமுக நெருக்கமாகவும் வாய்ப்பிருக்கிறது. அத்துடன் டெல்லியில் பாஜக தலைவர்களுடன் வலம் வருகிற சில மூத்த திமுக தலைவர்களின் விருப்பப்படி தமிழர் நலன் கருதி என்ற சப்பை காரணத்தை சொல்லி மத்திய அரசில் திமுக பங்கேற்கவும் செய்யலாம் எனவும் சுட்டிக்காட்டப்படுகிறது.

English summary
Sources said that If DMK follw its 200 seats Formula Congress may break its allinace.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X