சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

திமுக-வின் தேர்தல் வியூகம்.. 1,000 மகளிர் குழுக்கள் அமைப்பு... வீடு, வீடாக சென்று வாக்கு சேகரிப்பு

Google Oneindia Tamil News

சென்னை: நடக்கவுள்ள நாடாளுமன்றத் தேர்தலில் பெண் வாக்காளர்களை கவருவதற்காக திமுக சார்பில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட மகளிர் குழுக்கள் அமைக்கப்பட்டு உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

தமிழகத்தில் பெண் வாக்காளர்கள் அதிகம் உள்ளனர் என்பதால் வெற்றிக்கனியைப் பறித்துத் தருவதில் பெண்களின் பங்கு அதிகம் உள்ளது.

இதை கருத்தில் கொண்டு, பெண் வாக்காளர்களை கவரும் வகையில் புதிய பிரச்சார வியூகங்களை வகுத்துள்ளது திமுக.

திமுகவின் வியூகங்கள்

திமுகவின் வியூகங்கள்

திமுக ஆட்சியில் மகளிர் நலனுக்காக கொண்டுவரப்பட்ட நலத் திட்டங்கள், தற்போது அறிவிக்கப்பட்டுள்ள தேர்தல் வாக்குறுதிகள் ஆகியவற்றை பெண்களிடம் கொண்டு சேர்க்க மாநிலம் முழுவதும் 1,000-க்கும் மேற்பட்ட மகளிர் குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன என்று அக்கட்சியின் முக்கிய நிர்வாகிகள் தெரிவித்துள்ளனர்.

போட்டா போட்டியில் திருமாவின் சிதம்பரம்.. ஜெயிக்க போவது யாரு.. கணிக்க முடியாத அளவுக்கு கடும் மோதல்போட்டா போட்டியில் திருமாவின் சிதம்பரம்.. ஜெயிக்க போவது யாரு.. கணிக்க முடியாத அளவுக்கு கடும் மோதல்

5 பெண்கள் கொண்ட குழு

5 பெண்கள் கொண்ட குழு

மத்திய, மாநில அரசுகளால் தமிழகத்தில் ஏற்பட்டுள்ள பாதிப்புகளை முன்வைத்து தேர்தல் பிரச்சாரம் செய்யப்பட்டு வருகிறது. ஒவ்வொரு பூத் கமிட்டியிலும் 5 பெண்கள் கொண்ட குழு அமைக்கப்பட்டுள்ளன.

சுயஉதவிக் குழுக்கள் திட்டம்

சுயஉதவிக் குழுக்கள் திட்டம்

விலைவாசி உயர்வு குறித்தும், மகளிர் சுயஉதவிக் குழுக்கள் திட்டம் தற்போது முடங்கி இருப்பதை சுட்டிக்காட்டியும் அவர்கள் பிரச்சாரம் செய்து வருவதாக கூறப்படுகிறது.

பெண் வாக்காளர்கள் அதிகம்

பெண் வாக்காளர்கள் அதிகம்

ரேஷன் கடைகளில் பொருட்கள் குறைப்பு, மகளிர் குழுக்களுக்கு மானியக் கடன் தராதது போன்றவற்றை முன்வைத்து, பெண்களை கவரும் விதமாக பெண்களே வீடு, வீடாக சென்று நேரடியாக பிரச்சாரத்தில் ஈடுபடுவது அதிக வாக்குகள் கிடைப்பதற்கான வாய்ப்புகள் உள்ளதாக கட்சி நிர்வாகிகள் கூறுகின்றனர். இதனை தவிர மீம்ஸ்கள், எதிர்க்கட்சித் தலைவர்களின் முந்தைய பேச்சுகள் என சமூக வலைதளங்களில் பரப்பப்பட்டு வருகிறது.

பெண்களுக்கு முக்கியத்துவம்

பெண்களுக்கு முக்கியத்துவம்

சமீபத்தில், நடந்த 'கொலையுதிர் காலம்' திரைப்பட டிரெய்லர் வெளியிட்டு விழாவில் நடிகை நயன்தாராவை தவறாக பேசியதாக எழுந்த குற்றச்சாட்டை தொடர்ந்து, திமுகவில் இருந்து நடிகர் ராதாரவி தற்காலிகமாக நீக்கப்பட்டார். பெண்களுக்கு முன்னுரிமை கொடுத்து, திமுக எடுத்து வரும் நடவடிக்கைகள், புதிய வியூகங்கள் தேர்தலில் கை கொடுக்குமா?.. காத்திருப்போம்.

English summary
DMK's Election Strategy: 1,000 Women's Groups organised… Voting Collections Door To Door
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X