சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

80 வயசிலும்.. ஒரு அளவு இல்லையா.. இவ்வளவு ஆசையா.. மூத்த தலைவரை வறுத்தெடுக்கும் நெட்டிசன்கள்!

துரைமுருகன் மீது திமுகவினர் அதிருப்தியில் உள்ளதாக கூறப்படுகிறது

Google Oneindia Tamil News

சென்னை: எதுக்கும் ஒரு அளவு இல்லையா? துரைமுருகனே இப்படி பேசினால் எப்படி? என்று திமுகவின் பொதுச்செயலாளரும் மூத்த தலைவருமான துரைமுருகனை நெட்டிசன்கள் வறுத்தெடுக்க தொடங்கிவிட்டனர்.

திமுகவில் அப்போதிருந்தே முன்வைக்கப்படும் பிரச்சனை, வாரிசு அரசியல் மற்றும் இளைஞர்களுக்கு வழிவிடாத தலைவர்களின் பதவி பேராசைகள்தான்.

கலைஞர் இருந்தபோதே இருந்த பிரச்சனை இது என்றாலும், இப்போது தலைதூக்கி விட்டது.. பேராசிரியர் அன்பழகன், துரைமுருகன், ஆற்காடு வீராசாமி போன்ற தலைவர்களுக்கு முன்னுரிமை என்பது அப்போதிருந்தே இருந்து வருகிறது..

கரைந்த காலங்கள்.. கரையாத நினைவுகள்... எப்படி இருக்கிறார் கருணாநிதியின் ''நிழல்'' ஆற்காடு வீராசாமி ? கரைந்த காலங்கள்.. கரையாத நினைவுகள்... எப்படி இருக்கிறார் கருணாநிதியின் ''நிழல்'' ஆற்காடு வீராசாமி ?

 வாரிசு அரசியல்

வாரிசு அரசியல்

இதுபோக வாரிசு அடிப்படையில் குடும்ப உறுப்பினர்களை டெல்லிக்கும், கோட்டைக்கும் அனுப்பி மனசார மகிழ்ந்தார் கலைஞர். ஆனால் அதேசமயம், உழைக்கும் இளைஞர்களுக்கான முக்கியத்துவத்தையும் தராமல் இருந்ததில்லை.. அவர்களின் அதிருப்தியை சம்பாதித்து கொள்ளாமல் இருந்தார்.. கிட்டத்தட்ட முக அழகிரியும் இப்படித்தான்.. அடிமட்ட தொண்டன் மேலே முன்னுக்கு வர வேண்டும் என்று விரும்புவார்.

 சீட் டிமாண்ட்

சீட் டிமாண்ட்

ஆனால் நிலைமை தலைகீழாகி விட்டது.. கலைஞர் இருந்தபோது பதவியில் இருந்தவர்கள் இன்னமும் இருக்கிறார்கள். அப்போது போட்டியிட்டவர்கள், இந்த முறையும் போட்டியிட போகிறார்கள்.. இதில் ஜீரணிக்க முடியாதவர் துரைமுருகன்தான்.. 50 வருஷமாக கட்சியில் இருக்கிறார்.. 8 முறை எம்எல்ஏ, சட்டத்துறை அமைச்சர், பொதுப்பணித்துறை அமைச்சர், இப்போது பொதுச்செயலாளர் பொறுப்பில் உள்ளார். ஆனால், மறுபடியும் சீட் கேட்டு கொண்டிருக்கிறாராம்.

துரைமுருகன்

துரைமுருகன்

ஒரு பேட்டியில் துரைமுருகன் பேசுகிறார், "கலைஞர் மந்திரி சபையிலும் இருப்பேன், ஸ்டாலின் மந்திரி சபையிலும் இருப்பேன், உதயநிதி மந்திரி சபையிலும் இருப்பேன்" என்று சொல்லி உள்ளார்.இதுதான் சர்ச்சையை கிளப்பி உள்ளது.. துரைமுருகன் போன்ற சீனியர்களே இளைஞர்களுக்கு வழிவிடாமல் போட்டியிட்டால் எப்படி என்றும், உதயநிதிக்கு பல்லக்கு தூக்குபவராக துரைமுருகன் மாறிவிட்டாரே என்றும் வருத்தத்துடன் சில திமுகவினரே புலம்ப ஆரம்பித்துள்ளனர். உதயநிதிக்கு இளைஞரணி செயலாளர் பதவி கொடுத்தபோதே திமுகவில் சலசலப்பு வந்தது..

உதயநிதி

உதயநிதி

இப்போது அவரது உதயநிதி அமைச்சரவையில் இருப்பேன் என்று கூறியுள்ளது பெரும் அதிர்ச்சியை மட்டுமல்ல, கொந்தளிப்பையும் சேர்த்து தந்து வருவதாக கூறப்படுகிறது.. சீட்டுக்காகவும், பதவிக்காகவும் திராவிட அரசியலின் மூத்த தலைவரே இப்படி பேசுவது காலத்தின் கொடுமை என்றும், குடும்ப அரசியலை பறைசாற்றும் ஒரு கட்சியாக திமுக இருகிறது என்பதற்கு இதைவிட வேறு என்ன உதாரணம் வேண்டும்? என்றும் காரசார விமர்சனங்கள் சோஷியல் மீடியாவில் எழுந்து வருகிறது..!

English summary
DMK Senior Leader Duraimurugan contest again in Vellore Constitution
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X