சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

பொறாமை பட வேண்டும்.. ஸ்டாலின் பேச்சால் தகிக்கும் சீனியர்கள்.. உதயநிதிக்கு இவ்வளவு மவுசா!?

நேற்று அண்ணா அறிவாலயத்தில் நடந்த கூட்டத்தில் திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலினை திமுக தலைவர் ஸ்டாலின் புகழ்ந்து பேசியது பெரிய வைரலாகி உள்ளது.

Google Oneindia Tamil News

சென்னை: நேற்று அண்ணா அறிவாலயத்தில் நடந்த கூட்டத்தில் திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலினை திமுக தலைவர் ஸ்டாலின் புகழ்ந்து பேசியது பெரிய வைரலாகி உள்ளது.

திமுக இளைஞரணி செயலாளராக சில மாதங்களுக்கு முன் உதயநிதி ஸ்டாலின் பொறுப்பேற்றார். அப்போது அவர் 10 திட்டங்களை இளைஞரணி உறுப்பினர்கள் முன்னிலையில் பேசினார். அதில் மிக முக்கியமாக திமுகவின் இளைஞரணியில் 30 லட்சம் இளைஞர்களை சேர்க்க வேண்டும் என்று கூறினார்.

இதற்காக அவர் இளைஞரணி உறுப்பினர்களை நேரில் சந்தித்து அறிவுரைகளை வழங்கினார். ஒவ்வொரு மாவட்டத்திற்கும் இவர் தனி தனியாக டாக்கெட்டுகளை அளித்து இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் சென்னை தெற்கு 1.20 இளைஞர்கள் உறுப்பினர்களால் கட்சியில் சேர்க்கப்பட்டு இருக்கிறார்கள். இதற்காக சென்னை தெற்கு மாவட்ட செயலாளர் ப. சுப்பிரமணியத்திற்கு நேற்று பாராட்டு விழா நடந்தது.

என்ன பேசினார்

என்ன பேசினார்

இதில் திமுக தலைவர் ஸ்டாலின் பேசியதுதான் தற்போது சர்ச்சையாகி உள்ளது. அதன்படி நேற்று பாராட்டு விழா நடந்தது சென்னை தெற்கு மாவட்ட செயலாளர் ப. சுப்பிரமணியத்திற்குதான். ஆனால் ஸ்டாலின் இதில் பெரிய அளவில் ம. சுப்பிரமணியம் குறித்து பேசவில்லை. அவரை பெரிதாக பாராட்டவில்லை.

ஆனால் ஸ்டாலின்

ஆனால் ஸ்டாலின்

ஆனால் ஸ்டாலின் தன்னுடைய மகன் உதயநிதி குறித்து நீண்ட நேரம் பேசினார். உதயநிதி மீது நான் பொறாமைபடும் அளவிற்கு வளர வேண்டும். அவரின் செயல்பாடுகள் எனக்கு நம்பிக்கை தருகிறது. நான் வைக்கும் தேர்வுகளில் உதயநிதி வென்று என் பெயரை காப்பார் என்று நினைக்கிறேன்.

அப்பா மகன் உறவு

அப்பா மகன் உறவு

என்ன அப்பா கருணாநிதி எனக்கு நிறைய தேர்வுகளை வைத்தார். அனைத்தையும் நான் சரியாக செய்து முடித்தேன். அதேபோல் உதயநிதியும் செயல்படுவார் என்று எதிர்பார்க்கிறேன் என்று ஸ்டாலின் குறிப்பிட்டுள்ளார்.

என்ன கோபம்

என்ன கோபம்

ஸ்டாலினின் இந்த பேச்சு கட்சியில் இருக்கும் சில சீனியர்களை கோபத்திற்கு உள்ளாக்கி உள்ளது என்கிறார்கள். கட்சியின் உதயநிதி உழைக்கிறார். ஆனால் அவர் மட்டுமே உழைக்கிறார் என்று சொல்ல முடியாது. கட்சியில் பலர் இந்த உறுப்பினர் சேர்க்கைக்காக வேலை பார்த்தனர்.

அங்கீகாரம் இல்லை

அங்கீகாரம் இல்லை

ஆனால் அவர்களுக்கு சரியான அங்கீகாரம் கிடைக்கவில்லை என்று சிலர் புலம்பி உள்ளனர். இன்னொரு பக்கம் இது முழுக்க முழுக்க உதயநிதி ஸ்டாலினின் பிளான். அவரின் செயலால்தான் உறுப்பினர் சேர்க்கை இவ்வளவு நடந்தது. அதனால் அவர் பாராட்டுக்கு தகுதியானவர் என்றும் சிலர் கூறியுள்ளனர்.

English summary
DMK senior members get angry with M K Stalin for his speech on Udhayanidhi Stalin.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X