• search
சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  

"camera set பண்ணாங்க.. துணி மாத்த சொன்னாங்க.. வெறும் நாலே மணி நேரத்துல" .. செந்தில்குமார் நக்கல்!

Google Oneindia Tamil News

சென்னை: "நான் பாட்டுக்கு வீட்ல அமைதியா இருந்தேன்... Boss உங்கள உடனே video போட சொன்னாருனு இவனுங்களா camera set பன்னானுங்க, துணி மாத்த சொன்னாங்க.. 12 மணி நேரத்துல அழிந்து விடும் nu சொல்ல சொன்னாங்க...இவனுங்கள நம்பி சொன்னதுக்கு 4ay மணி நேரத்துல என் புகழ அழிச்சிட்டானுங்க" என்று ரஜினியின் ட்விட்டர் பதிவை நீக்கியதற்கு திமுக எம்பி செந்தில்குமார் மறைமுகமாக நக்கல் அடித்துள்ளார்!

  யார் ரிப்போர்ட் செய்தது? டிவிட்டரில் ரஜினி வீடியோ நீக்கப்பட்டது இப்படி தான்

  நடிகர் ரஜினிகாந்த் கொரோனா குறித்த விழிப்புணர்வு வீடியோவை வெளியிட்டார்... அதில் பிரதமர் அறிவித்த சுய ஊரடங்கு உத்தரவுக்கு அனைவரும் ஆதரவு கொடுக்க வேண்டும் என்றும் தெரிவித்தார்.. மேலும் வைரஸை 12 முதல் 14 மணி நேரம் கடந்துவிட்டால் 3-வது நிலையில் இருந்து இந்தியா தப்பி விடும் என்றும் கூறியிருந்தார்.

  ரஜினியின் இந்த கருத்துக்கு எதிர்ப்பு கிளம்பியதை தொடர்ந்து அவரது வீடியோவை டுவிட்டர் இந்தியா நீக்கி உள்ளது இதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.. ரஜினியின் ட்விட்டரை நீக்கியதற்கு ஏராளமானோர் கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

  திமுக எம்பி

  திமுக எம்பி

  அந்த வகையில் திமுக எம்பி செந்தில்குமாரும் ஒரு ட்விட் போட்டுள்ளார்.. ரஜினி என்றாலே கொதித்துவிடுபவர் தருமபுரி திமுக எம்பி செந்தில்குமார். "வீதிக்கு வாங்க" என்ற ஹேஷ்டேக்கை உருவாக்க காரணமாக இருந்தார் என்றே சொல்லலாம்.. இவர் பதிவிட்ட கேட்டை திறந்து உள்ளே விட்ட தமிழகம் ட்வீட் அரசியல் அதிர்வுகளை ஏற்படுத்தியது என்பதை மறுக்க முடியாது.. தற்போது ரஜினி ட்வீட்டை நீக்கியதற்கும் ரியாக்ட் செய்துள்ளார்.

  கேள்வி

  கேள்வி

  ரஜினியின் ட்விட்டர் பதிவு நீக்குவதற்கு முன்பு அந்த வீடியோவிலேயே "Janata - அதை தமிழ் அல்லது ஆங்கிலத்தில் சொன்ன Owner கோவித்து கொள்வாரா Boss" என்று டாக்டர் செந்தில்குமார் கேள்வி எழுப்பியிருந்தார்.. ட்விட்டரை நீக்கிய பிறகும் ஒரு பதிவு போட்டுள்ளார் எம்பி செந்தில்குமார்.

  மைன்ட் வாய்ஸ்

  மைன்ட் வாய்ஸ்

  அந்த பதிவில், "ஒருவரின் #Mindvoice.. 'நான் பாட்டுக்கு வீட்ல அமைதியா இருந்தேன்... Boss உங்கள உடனே video போட சொன்னாருனு இவனுங்களா camera set பன்னானுங்க, துணி மாத்த சொன்னாங்க.. 12 மணி நேரத்துல அழிந்து விடும் nu சொல்ல சொன்னாங்க...இவனுங்கள நம்பி சொன்னதுக்கு 4ay மணி நேரத்துல என் புகழ அழிச்சிட்டானுங்க" என்று மறைமுகமாக கிண்டல் செய்துள்ளார். வழக்கம்போல ஏராளமானோர் இந்த ட்வீட்டை வரவேற்று வருகின்றனர்

  உளற வேண்டாம்

  உளற வேண்டாம்

  என்றாலும், "பூனை கண்ணை மூடிக்கிட்டா பூலோகம் இருண்டுடுமாம்! இந்த பழமொழி உங்களுக்கு கன கச்சிதமா பொருந்துது டாக்டர்! இந்த பழமொழியை உங்க முதலாளியை படிக்க சொல்லி கேளுங்க!" உங்கள் தளபதியை ஒழுங்காக துண்டு சீட்டு இல்லாமால், உளராமல் தமிழ் பேச சொல்லுங்கள்.. அதே போல் சுதந்திர தினம் , குடியரசு தினம் தேதி கூட தெரியாதவரை எப்படி தலைவர் என்று அழைக்கிறீர்கள் முதலில் நீங்கள் திருந்துங்கள், இவரை எப்படி முதல்வராக ஏற்று கொள்ள முடியும்? கலைஞர் போல் அறிவுள்ளவரே தேவை" என்று பதிவுகள் விழுகின்றன.

  சர்ச்சை

  சர்ச்சை

  மேலும் "ஒரு mp ஆக மக்களுக்கு பணி செய்வதில் கவனம் செலுத்தாமல் எப்போதும் ரஜினியை வைத்து அரசியல் ஆதாயம் தேடவா மக்கள் உங்களை டெல்லிக்கு அனுப்பினாங்க?" என்றும் ரஜினி ரசிகர்கள் கேள்வியை முன் வைத்து வருகின்றனர்.. என்னவோ போங்கப்பா.. ரஜினி வாயைத் திறந்தாலே.. சர்ச்சைதான் பிறக்குது!

  English summary
  dmk senthil kumar comment about rajinikanths twitter removing issue
   
   
   
  உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
  Enable
  x
  Notification Settings X
  Time Settings
  Done
  Clear Notification X
  Do you want to clear all the notifications from your inbox?
  Settings X