சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

மத்திய அரசுக்கு எதிராக தர்ணாவில் இறங்கிய மமதா... டுவிட்டரில் செய்தி வெளியிட்டு ஸ்டாலின் ஆதரவு

Google Oneindia Tamil News

சென்னை:மேற்கு வங்க முதல்வர் மமதா பானர்ஜியின் தர்ணா போராட்டத்துக்கு திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் ஆதரவு தெரிவித்துள்ளார்.

சாரதா நிதி நிறுவன மோசடி மற்றும் ரோஸ் வேலி ஆகிய வழக்குகளில் கொல் கத்தா காவல்துறை தலைவர் ராஜீவ் குமாரிடம் விசாரணை மேற்கொள்ள 5 பேர் கொண்ட சிபிஐ அதிகாரிகள் அவரது இல்லத்துக்கு வந்தனர். ஆனால், அவர்கள் தடுத்து நிறுத்தப்பட்டு போலீஸாரால் கைது செய்யப்பட்டனர்.

Dmk stalin supports mamatas protest against central government

மேற்கு வங்க மாநிலம் மட்டுமல்ல... நாடு முழுவதும் இந்த விவகாரம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. சிபிஐயின் நடவடிக்கை.. மத்தியில் ஆளும் பாஜக அரசின் தூண்டுதலால் நடைபெறுவதாக மேற்கு வங்க முதல்வர் மமதா பானர்ஜி குற்றம்சாட்டினார்.

ராஜீவ் குமாருக்கு ஆதரவு தெரிவித்தும், மத்திய அரசின் நடவடிக்கையை கண்டித்தும் அவர் தர்ணா போராட்டத்தில் இறங்கியுள்ளார். அவரது இந்த போராட்டத்துக்கு டெல்லி முதல்வர் அர்விந்த் கெஜ்ரிவால், ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு, காங்கிரசின் மூத்த தலைவர் அகமது படேல்,உமர் அப்துல்லா உள்ளிட்ட பல தலைவர்கள் ஆதரவு தெரிவித்துள்ளனர்.

தமிழகத்தில் இருந்து மமதாவின் போராட்டத்துக்கு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் ஆதரவு தெரிவித்துள்ளார். இது தொடர்பாக டுவிட்டரில் அவர் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் ஸ்டாலின் கூறியிருப்பதாவது:

நாட்டில் உள்ள ஒவ்வொரு சுதந்திரமான அமைப்பும், பாசிச பாஜக அரசுடன் சமரசம் செய்யும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது. ஜனநாயகத்தையும், நாட்டின் கூட்டாட்சி தத்துவத்தையும் காப்பாற்ற போராடி வரும் மமதாவுக்கு ஆதரவு தெரிவிக்கிறேன் என்று அவர் கூறியுள்ளார்.

English summary
DMK President M.K.Stalin tweets that he stand with Mamata banerjees fight against to protect the federal structure.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X