சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

தோனியை பிடிக்கும்..பினிஷிங் ஸ்டார்.. ட்விட்டரில் கடைசியில் பேச வைத்த டிஆர்பி ராஜா - ஸ்டாலின் கலகல

Google Oneindia Tamil News

சென்னை: திராவிட அரசு பற்றி முதல்நாளில் என்னை பேச சொல்லாமல் கடைசி நாளில் பேச வைத்து விட்டார் டிஆர்பி ராஜா என்று ட்விட்டர் ஸ்பேசஸில் பேசிய முதல்வர் ஸ்டாலின் கூறியுள்ளார். தோனியை பிடிக்கும் என்பதற்காக என்னை பினிஷ் செய்ய வைத்து விட்டார் என்றும் கலகலப்பாக பேசினார் முதல்வர் ஸ்டாலின்.

செப்டம்பர் மாதத்தை "திராவிட மாதம்" என்று கொண்டாட திமுக தகவல் தொழில்நுட்ப அணி முடிவு செய்தது. இதற்காக தினந்தோறும் ட்விட்டர் ஸ்பேசஸில் பல்வேறு தலைவர்கள் கலந்து கொண்டு உரையாற்றி வருகின்றனர்.
திமுக இளைஞரணியை கொள்கை ரீதியாக வலுப்படுத்தும் வகையில் இத்தகைய ஏற்பாடுகளை செய்துள்ளனர்.

இந்த சூழலில் செப்டம்பர் மாதத்தை திராவிட மாதம் என்று கொண்டாட திமுக தகவல் தொழில்நுட்ப அணி முடிவு செய்தது. இதற்காக தினந்தோறும் ட்விட்டர் ஸ்பேசஸில் பல்வேறு தலைவர்கள் கலந்து கொண்டு உரையாற்றி வருகின்றனர். திராவிட மாதக் கொண்டாட்டத்தின் கடைசி நாளான இன்று முதல்வரும், திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் ட்விட்டர் ஸ்பேசஸில் திராவிட அரசு என்ற தலைப்பில் பேசினார்.

வாட்ஸ் அப்பில் வருவதை படித்து வாந்தி எடுப்பவர்களை கண்டுகொள்ள வேண்டாம்! முதல்வர் ஸ்டாலின் அட்வைஸ்! வாட்ஸ் அப்பில் வருவதை படித்து வாந்தி எடுப்பவர்களை கண்டுகொள்ள வேண்டாம்! முதல்வர் ஸ்டாலின் அட்வைஸ்!

சமூக வலைத்தளங்கள்

சமூக வலைத்தளங்கள்

இன்றைக்கு சமூக வலைத்தளங்கள் ரீச் ஆகாத மக்களே இல்லை என்று சொல்லலாம். அந்த அளவிற்கு சோஷியல் மீடியா மக்கள் மத்தியில் பாதிப்பை ஏற்படுத்துகிறது. 73 சதவிகிதம் பேர் போனில்தான் செய்தி பார்க்கிறார்கள். சராசரியாக ஒவ்வொருத்தரும் 3 முதல் 4 மணி நேரத்தை சோஷியல் மீடியாவில் செலவு செய்கின்றனர். பலபேர் வாட்ஸ் அப் எடுத்து பார்ப்பதை வழக்கமாக வைத்திருக்கின்றனர்.

இணைய வளர்ச்சி

இணைய வளர்ச்சி

இணைய வளர்ச்சியை திமுகவினர் பயன்படுத்திக்கொள்ள வேண்டும். ட்விட்டர் ஸ்பேசை இன்றுடன் நிறுத்திக்கொள்ளாமல் ஆக்கப்பூர்வமான விவாதங்களை தொடர்ச்சியாக நடத்த வேண்டும். முக்கியமான நிகழ்வுகளுக்கு முன்பாக இதை நடத்தலாம்.

திராவிட கொள்கைகள்

திராவிட கொள்கைகள்

திராவிட இயக்கக் கொள்கைகள் போராட்டங்களை மக்களிடம் தெரிவிக்க வேண்டும். நம்முடைய சாதனைகளை கொண்டு சேர்க்க வேண்டும். இளைய தலைமுறையினர் கல்வி கற்க வேண்டும் என்று நான் ஊக்கப்படுத்துகிறேன். அதுபோல நீங்களும் அறிவார்ந்த புத்தகங்களை படியுங்கள். எழுத்தாற்றல் உள்ளவர்கள் நிறைய எழுதுங்கள் என்றும் முதல்வர் ஸ்டாலின் கூறினார். திமுகவினர் ஒருவரை ஒருவர் சந்திக்கும் போது புத்தகங்களை பரிமாறிக்கொள்ளுங்கள் என்றும் கேட்டுக்கொண்டார்.

 பினிஷிங் ஸ்டார்

பினிஷிங் ஸ்டார்

நம்முடைய கருத்துக்கள், கொள்கைகள் சாதனைகளை பொதுவெளியில் பரப்புங்கள். எதைப்பற்றியும் கவலைப்படாமல் உங்கள் பணிகளை தொடருங்கள். திராவிட மாதம் செப்டம்பர் 1ஆம் தேதி தொடங்கியது. பலரும் பேசியிருக்கின்றனர். திராவிட அரசு என்ற பெயரில் என்னை முதலிலேயே பேச சொல்லியிருந்தால் நிறைய விசயங்களை பேசியிருக்கலாம். நமது திராவிட செய்த சாதனைகளை 29 நாட்கள் எல்லோரையும் பேச வைத்து விட்டு என்னை கடைசியாக பேச வைத்திருக்கிறார் டிஆர்பி ராஜா. தோனியை எனக்கு பிடிக்கும் என்று தெரிந்து கொண்டு பினிஷ் பண்ணுங்க என்று சொல்லியிருக்கிறார்.

திராவிட அரசு

திராவிட அரசு

திராவிடம் தமிழர்களுக்கு கற்பித்தது..திராவிடம் தமிழர்களுக்கு தன்னம்பிக்கை ஊட்டியது. திராவிடம் சமூக நீதியை நிலைநாட்டியது. திராவிடம் பெண்களுக்கு சம உரிமையை பெற்றுத்தந்தது. திராவிடம் இந்தியாவின் தலை சிறந்த மாநிலமாக தமிழ்நாட்டை தலைநிமிர வைத்தது. திராவிடம் தேய்ந்து கிடந்த தெற்கை வளர்ச்சியடைந்த வைத்தது. இதுதான் திராவிட அரசின் இலக்கணம் என்றும் முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

English summary
Chief Minister Stalin said that TRB Raja did not ask me to speak about the Dravida Arasu on the first day but made him speak on the last day. Chief Minister Stalin said excitedly that he made me finish because he liked Dhoni.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X