சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

திருவாரூர் இடைத் தேர்தல் சுறுசுறுப்பு.. திமுக விருப்ப மனு வினியோகம் ஆரம்பம்.. 4ம் தேதி நேர்காணல்

Google Oneindia Tamil News

Recommended Video

    விருப்ப மனு வினியோகம் ஆரம்பம்... திருவாரூரை குறிவைக்கும் திமுக- வீடியோ

    சென்னை: திருவாரூர் சட்டசபை இடைத் தேர்தலுக்காக திமுக விருப்ப மனு வினியோகம் ஆரம்பித்துள்ளது. வரும் 4ம் தேதி சென்னையில் நேர்காணல் நடைபெற உள்ளது.

    கருணாநிதி மறைவால் காலியாக உள்ள திருவாரூர் சட்டசபை தொகுதிக்கு வரும் 28ம் தேதி இடைத் தேர்தல் நடைபெற உள்ளது. இதில் திமுக வேட்பாளராக போட்டியிட விரும்புவோர்கள் விருப்பமனுவை தாக்கல் செய்யலாம். விருப்ப மனு வழங்குதல் இன்று முதல் ஆரம்பித்துள்ளது.

    DMK start to issue application for Thiruvarur by election

    விண்ணப்ப படிவத்தை பூர்த்தி செய்து 2ம் தேதி காலை 10 மணியிலிருந்து 3ம் தேதி மாலை 6 மணிக்குள் அண்ணா அறிவாலயத்தில் ஒப்படைக்கலாம். வேட்பாளர் விண்ணப்பக் கட்டணம் 25 ஆயிரம் ரூபாய் ஆகும்.

    இதேபோல, ஆளும் அதிமுகவும், வேட்பாளர் தேர்வு குறித்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

    இடைத்தேர்தலுக்கான விருப்பமனு தாக்கல் ஜனவரி 2 மற்றும் 3ம் தேதிகளில் நடைபெறும் என்றும், ரூ.25000 செலுத்தி விண்ணப்பப் படிவங்களை பெற்றுக் கொள்ளலாம் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. விண்ணப்பங்களை வேட்பாளா்கள் 3ம் தேதி மாலைக்குள் சமர்பிக்க வேண்டும் என அதிமுக அறிவித்துள்ளது. மனுக்கள் மீதான பரிசீலனை ஜனவரி 4ம் தேதி நடைபெறும்.

    English summary
    DMK start to issue application for Thiruvarur by election to the willing full candidates.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X