சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

ஸ்டாலின் குறித்து அவதூறு.. மாஃபா பாண்டியராஜனுக்கு வலுக்கும் எதிர்ப்பு.. உருவ பொம்மை எரிப்பு!

திமுக தலைவர் ஸ்டாலின் குறித்து அவதூறு பரப்பியதற்கு எதிராக அமைச்சர் மாஃபா பாண்டியராஜனுக்கு எதிர்ப்பு தெரிவித்து சென்னையில் போராட்டம் நடந்து வருகிறது.

Google Oneindia Tamil News

Recommended Video

    அமைச்சர் மாஃபா பாண்டியராஜனுக்கு திமுக கண்டனம்... தங்கம் தென்னரசு எம்.எல்.ஏ

    சென்னை: திமுக தலைவர் ஸ்டாலின் குறித்து அவதூறு பரப்பியதற்கு எதிராக அமைச்சர் மாஃபா பாண்டியராஜனுக்கு எதிர்ப்பு தெரிவித்து சென்னையில் போராட்டம் நடந்து வருகிறது.

    இந்தியாவில் மிசா சட்டம் அமலில் இருந்த காலத்தில் அப்போதைய பிரதமர் இந்திரா காந்தி உத்தரவின் பெயரில் பலர் கைது செய்யப்பட்டனர். தமிழகத்தில் திமுக தலைவர்கள் பலர் கைது செய்யப்பட்டனர். தற்போதைய திமுக தலைவர் ஸ்டாலினும் இதில் கைதானார். இந்த நிலையில் இது தொடர்பாக தமிழக அமைச்சர் மாஃபா பாண்டியராஜன் கருத்து தெரிவித்தார்.

    மாஃபா பாண்டியராஜன் தனது பேச்சில், ஸ்டாலின் மிசாவில் கைதாகவில்லை. மிசா இருந்த நேரத்தில் கைதானார். அவரை அடித்ததாக கூறுகிறார்கள். ஆனால் அவரை மிசாவிற்காக அடிக்கவில்லை. அவர் மோசமான வழக்கில் சிறைக்கு சென்று இருந்தார். அதனால் அடித்தார்கள்.

    முதல் நாளில் இருந்தே சொன்னேன்.. கேட்டீங்களா.. பெரிய சதிங்க இது.. அம்ரிந்தர் சிங் காட்டம்முதல் நாளில் இருந்தே சொன்னேன்.. கேட்டீங்களா.. பெரிய சதிங்க இது.. அம்ரிந்தர் சிங் காட்டம்

    ஸ்டாலின் இல்லை

    ஸ்டாலின் இல்லை

    அவருக்கும் மிசாவிற்கும் தொடர்பு கிடையாது. அவர் மிசாவில் சென்றதாக மக்களை ஏமாற்றுகிறார். அவர் பாலியல் வழக்கில்தான் சிறை சென்றார். அதை மக்களுக்கு தெரியாமல் மறைகிறார், என்று மாஃபா பாண்டியராஜன் குறிப்பிட்டு இருந்தார்.

    பெரிய சர்ச்சை

    பெரிய சர்ச்சை

    மாஃபா பாண்டியராஜன் அளித்த இந்த பேட்டி திமுகவினர் மத்தியில் பெரிய பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. ஸ்டாலினின் அரசியல் பணிகளை, தியாகத்தை மாஃபா பாண்டியராஜன் கொச்சைப்படுத்திவிட்டார். அவருக்கு மக்கள் கடுமையான பாடம் புகட்டுவார்கள் என்று மாஃபா பாண்டியராஜன் தெரிவித்துள்ளார்.

    நாளை போராட்டம்

    நாளை போராட்டம்

    இந்த நிலையில் நாளை சென்னையில் மாஃபா பாண்டியராஜனுக்கு எதிராக திமுக கட்சியினர் போராட்டம் நடத்த உள்ளனர். சென்னை மற்றும் திருவள்ளுவர் மாவட்ட திமுகவினர் நாளை சென்னையில் பல இடங்களில் போராட்டம் நடத்த இருக்கிறார்கள். அதேபோல் ஆவடி மாநகராட்சி அலுவலகத்திற்கு எதிராகவும் போராட்டம் செய்ய இருக்கிறார்கள்.

    சென்னையில் இன்று

    சென்னையில் இன்று

    இன்றும் சென்னையில் பல இடங்களில் அமைச்சர் மாஃபா பாண்டியராஜனுக்கு எதிராக திமுகவினர் போராட்டம் செய்தனர். அவரின் உருவ பொம்மையை எரித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். திமுக தலைவர் ஸ்டாலின் மிசாவில் கைதானது குறித்த மாஃபா பாண்டியராஜன் விமர்சனம் தற்போது விஸ்வரூபம் எடுத்துள்ளது.

    English summary
    DMK starts protest against Mafoi Pandiyarajan for his comment on Stalin's Misa arrest.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X