சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

மற்றவர்களின் சட்டையை கிழிக்க வைப்பவர்தான் மூன்றாம் பிறை கமல்.. முரசொலியில் கழுவி ஊற்றிய திமுக

Google Oneindia Tamil News

சென்னை:கமலஹாசன்.. மற்றவர் சட்டையை தான் கிழிக்க வைப்பாரே தவிர... அவர் சட்டையைக் கிழித்துக் கொள்ள மாட்டார் என்பதை நாடு நன்கறியும் என்று திமுக கடுமையாக விமர்சித்துள்ளது.

திமுக கூட்டணியில் இணையும் என்று எதிர்பார்க்கப்பட்ட கமலின் மக்கள் நீதி மய்யம்... தற்போது அக்கட்சியை கடுமையாக விமர்சித்து வருகிறது. குறிப்பாக கமலஹாசன் அக்கட்சியின் தலைவர் ஸ்டாலினின் கிராம சபை கூட்டங்களை கடுமையாக விமர்சித்து வருகிறார்.

அதிலும், சென்னையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பேசிய கமல்... சட்ட சபையில் ஸ்டாலின் சட்டை கிழிந்தது, திமுக கிராம சபை கூட்டங்களை நடத்தி வருவது ஆகியவற்றை கடுமையாக விமர்சித்திருந்தார். அவரின் இந்த கருத்துகளுக்கு உதயநிதி ஸ்டாலினும் பதிலடி கொடுத்துள்ளார்.

முரசொலியில் கட்டுரை

முரசொலியில் கட்டுரை

இந் நிலையில் கமலை கடுமையாக விமர்சித்து திமுகவின் அதிகாரப்பூர்வ நாளேடான முரசொலியில் அரைப்பக்க அளவில் கமலின் அரசியல் அரைவேக்காட்டுத்தனம் என்ற தலைப்பில் கட்டுரை வெளியாகி உள்ளது. சிலந்தி என்பவர் எழுதியுள்ள அந்த கட்டுரையில் கமலின் அரசியல் செயல் பாடுகளை... விமர்சித்து கடுமையாக எழுதப்பட்டுள்ளது.

பிதற்றுகிறார் கமல்

பிதற்றுகிறார் கமல்

கடை விரித்தும் கொள்வாரில்லை என்ற நிலையில் கலைஞானி கமலஹாசன் நிதானமற்று பிதற்ற தொடங்கி விட்டார் என்று தொடங்கி பல கடுமையான விமர்சனங்களை முன்வைத்துள்ளது. திராவிட முன்னேற்ற கழக வரலாற்றை கமலஹாசன் படித்தறிய வேண்டும், விரக்தியின் விளிம்பில்.. உச்ச கட்டத்தில் சென்று புலம்ப தொடங்கி உள்ளார்.

சட்டையை கிழிப்பார்

சட்டையை கிழிப்பார்

வெட்கம் என்ற பொருளறியாது...வெட்கங்கெட்ட செயல்களை வெளிப்படையாக செய்து கொண்டிருப்பவர், மூன்றாம் பிறை படத்தில் ரயில் நிலையத்தில் தலைமுடியை பிய்த்துக் கொண்டு சட்டையை கிழித்து கொண்டு ஓடுவாரே.. அந்த காட்சிகள் நிஜத்தில் நடந்துவிடுமோ என்று அஞ்சுவதாக அந்த கட்டுரை எழுதப்பட்டுள்ளது.

கமலின் கேலிக்கூத்து

கமலின் கேலிக்கூத்து

அரசியல் கட்சி துவங்கி, எதனை நோக்கி செல்கிறோம். பின்னால் வருபவர்களை எங்கே அழைத்துச் செல்லப் போகிறோம் என்று தெளிவற்று திரியும் கமலஹாசன், மற்றவர்களைப் பார்த்து வெட்கமில்லையா எனக் கேட்பது கேலிக் கூத்தல்லவா என்றும் கமலை கடுமையாக விமர்சித்திருக்கிறது அந்த கட்டுரை.

 ஸ்மிருதி ராணியுடன் விவாதம்

ஸ்மிருதி ராணியுடன் விவாதம்

இந்த கட்டுரை வெளியான அதே நேரத்தில்... வட இந்தியாவில் நடைபெற்ற ஒரு நிகழ்ச்சியில் ஸ்மிருதி ராணியுடனான விவாத மேடை நிகழ்ச்சியில் கமல ஹாசன் பதிலளிக்க முடியாமல் மென்று முழங்கியது எங்களுக்கும் தெரியும் என்று திமுகவினர் கருத்து தெரிவித்துள்ளனர்.

English summary
The DMK has strongly criticized Kamal Haasan to tear off the shirt of the other, the country knows that he will not tear off his shirt.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X