சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

BREAKING NEWS: ராகுல் காந்தியே வருக.. பாசிச, நாசிச மோடி அரசை வீழ்த்துக- ஸ்டாலின் ஆவேச உரை

சென்னை அண்ணா அறிவாலயத்தில் அண்ணா மற்றும் மறைத்த திமுக முன்னாள் தலைவர் கருணாநிதியின் சிலை இன்று திறக்கப்பட உள்ளது.

Google Oneindia Tamil News

Recommended Video

    அறிவாலயத்தில் கருணாநிதி சிலையை திறந்து வைத்தார் சோனியா!

    சென்னை: அண்ணா அறிவாலயத்தில் மறைந்த திமுக தலைவர் கருணாநிதியின் சிலை இன்று திறந்து வைக்கப்பட்டது.

    திமுக தலைவர் கருணாநிதியின் சிலையை காங்கிரஸ் மூத்த தலைவர் சோனியா காந்தி திறந்து வைத்தார். ராகுல் காந்தி, சந்திரபாபு நாயுடு , பினராயி விஜயன், நடிகர் ரஜினிகாந்த் உள்ளிட்டோர் விழாவில் கலந்து கொண்டனர்.

    அதன் பின்னர் அண்ணா, கருணாநிதி நினைவிடம் சென்று சோனியா காந்தி அஞ்சலி செலுத்தினர்.

    DMK Supremo Karunanidhis statue opening ceremony in Chennai - LIVE UPDATES

    Newest First Oldest First
    7:43 PM, 16 Dec

    சோனியா காந்தி உரையுடன், கருணாநிதி சிலை திறப்பு விழா நிறைவு பெற்றது
    7:39 PM, 16 Dec

    எப்போதெல்லாம் தேசிய அரசியலில் பிரச்சினை வந்ததோ அப்போது கருணாநிதி ஆலோசனை கேட்பேன்

    ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சிக்கு கருணாநிதி அளித்த ஆதரவை மறைக்க மாட்டேன்

    7:37 PM, 16 Dec

    பெரியார், அண்ணா வழியில், கருணாநிதி சமூக நீதி போராளி- சோனியா காந்தி

    முதல்வராக இருந்தபோது கருணாநிதி கொண்டு வந்த சீர் திருத்தங்கள் ஏராளம்

    இட ஒதுக்கீடு, பிராமணரல்லாதோர் கோவில்களில் அர்ச்சகராக இருக்கலாம் என்று சட்டம் கொண்டு வந்தார்

    மாநில உரிமைகளுக்காக இறுதி வரை போராடிய மாபெரும் போராளி கருணாநிதி- சோனியா காந்தி

    7:33 PM, 16 Dec

    கருணாநிதி கையில் தமிழ் விளையாடியதை பார்த்து வியக்கிறேன்- சோனியா காந்தி

    தமிழ் மீது தனியாக தாகம் கொண்டவர் கருணாநிதி

    பல்லாயிரக்கணக்கான சிறு, குறு கதைகளை எழுதியவர் கருணாநிதி

    7000 கடிதங்களை கருணாநிதி தனது உடன்பிறப்புகளுக்கு எழுதினார்-சோனியா காந்தி

    7:32 PM, 16 Dec

    கருணாநிதிக்கு தமிழ் மீது பெரிய ஆசை இருந்தது - சோனியா காந்தி

    தமிழை வளர்க்க அவர் பெரிய பாடுபட்டார் - சோனியா காந்தி

    அவர் அற்புதமான பேச்சாளர் - சோனியா காந்தி

    அவரின் எழுத்திற்கு முன் எதுவும் சாத்தியமில்லை - சோனியா காந்தி

    தமிழ் மீதான ஆசையால் அவர் பல படைப்புகளை இயற்றி இருக்கிறார் - சோனியா காந்தி

    7:31 PM, 16 Dec

    தமிழகத்தின் முதல்வராக இருந்து அதன் வளர்ச்சிக்கு பாடுபட்டவர் கருணாநிதி - சோனியா காந்தி

    கருணாநிதி 5 முறை முதல்வராக இருந்து தமிழகத்தை மொத்தமாக மாற்றியவர் - சோனியா காந்தி

    அவர் இதுவரை ஒருமுறை கூட தேர்தலில் தோற்றது இல்லை - சோனியா காந்தி

    இந்த சாதனையை இனி யாரும் செய்ய முடியாது - சோனியா காந்தி

    7:31 PM, 16 Dec

    கருணாநிதி சிலை திறப்பு விழாவில் மகிழ்ச்சியடைகிறேன்- சோனியா காந்தி

    கருணாநிதி பொது வாழ்க்கை தமிழகத்தின் வரலாறாக உள்ளது- சோனியா காந்தி

    7:28 PM, 16 Dec

    சோனியா, ராகுல், சந்திரபாபு நாயுடு எல்லாரும் வந்திருக்கிறார்கள்- ஸ்டாலின்

    தலைவர் கலைஞர் அவர்களே எங்கே போய்விட்டீர்கள்- ஸ்டாலின் உருக்கம்

    மறைந்தும் எங்களை வழிநடத்திக் கொண்டிருக்கிறீர்கள்- ஸ்டாலின்

    7:23 PM, 16 Dec

    அமெரிக்காவில் நடந்த துப்பாக்கி சூடுக்கு மோடி இரங்கல் தெரிவிக்கிறார்

    போர்ச்சுக்கல் நாட்டு காட்டுத் தீ குறித்து மோடி ட்விட்டரில் இரங்கல் தெரிவிக்கிறார்

    நாகப்பட்டினம், புதுக்கோட்டை, தஞ்சையில் இறந்து போனவர்களுக்கு மோடி இரங்கல் தெரிவிக்க மறுக்கிறார்

    மோடி சேடிஸ்ட் மனப்பாங்கோடு உள்ளார் என்பதை பகிரங்கமாக சொல்கிறேன்-ஸ்டாலின்

    7:11 PM, 16 Dec

    கடந்த 1961- ஆம் ஆண்டு சென்னை மாநகராட்சியில் திமுக வெற்றி பெற்றது- ஸ்டாலின்

    ராயப்பேட்டை பொதுக் கூட்டத்தில் ஸ்டாலின் பேச்சு

    7:11 PM, 16 Dec

    வெற்றி பெற்றவுடன் காமராஜர் சிலையை திமுக திறந்து வைத்தது- ஸ்டாலின்

    காமராஜர் சிலையை அப்போதைய பிரதமர் ஜவஹர்லால் நேரு திறந்து வைத்தார்

    2018-இல் நேரு குடும்பத்தை சேர்ந்த சோனியா, கருணாநிதியின் சிலையை திறந்து வைத்துள்ளார்

    சோனியா சிலையை திறக்கும் போது என் மனதில் காமராஜர் சிலையை நேரு திறந்தது நினைவுக்கு வந்தது

    7:11 PM, 16 Dec

    நான் இன்று மிகுந்த மகிழ்ச்சியில் பூரித்து போய் இருக்கிறேன்- ஸ்டாலின்
    7:02 PM, 16 Dec

    பல வருடங்கள் பதவியில் இருந்தாலும் கருணாநிதியிடம் ஆணவம் இருந்ததில்லை-ராகுல் காந்தி

    கருணாநிதி வீடு மிகவும் எளிமையாக இருந்ததை பார்த்து ஆச்சரியமடைந்தேன்- ராகுல் காந்தி

    6:52 PM, 16 Dec

    கருணாநிதி சிலை திறப்பு விழாவில் காங். தலைவர் ராகுல் காந்தி உரை

    கருணாநிதி சாதாரண அரசியல்வாதி இல்லை- ராகுல் காந்தி

    கருணாநிதி தமிழ் மக்கள் குரலாக இருந்தார்- ராகுல் காந்தி

    6:37 PM, 16 Dec

    அனைவருக்கும் வணக்கம் என தமிழில் பேச்சை தொடர்ந்த சந்திரபாபு நாயுடு
    6:36 PM, 16 Dec

    இந்தியாவில் சமூக நீதி மலர்வதற்காக பாடுபட்டவர் கருணாநிதி - கேரளா முதல்வர்

    ஒடுக்கப்பட்டவர்களுக்காக சட்டங்களை இயற்றிவர் கருணாநிதி - கேரளா முதல்வர்

    பெண்கள் முன்னேற்றத்திற்கு கருணாநிதி ஆற்றிய பணிகள் காலத்திற்கும் நிலைக்கும் - கேரளா முதல்வர்

    திருநங்கைகளுக்காக பல முன்மாதிரி திட்டங்களை கருணாநிதி கொண்டு வந்துள்ளார் - கேரளா முதல்வர்

    6:36 PM, 16 Dec

    இந்தியா கண்ட சிறந்த அரசியல்வாதி, தலைவர் - கேரளா முதல்வர்

    கருணாநிதி எதிர்கட்சித் தலைவர்களை எப்போதும் மதிக்க கூடியவர்- கேரளா முதல்வர்

    பொருளாதார வளர்ச்சியுடன் சமூக வளர்ச்சிக்கும் பாடுபட்டவர் கருணாநிதி - கேரளா முதல்வர்

    6:32 PM, 16 Dec

    இந்திய அரசியலில் கருணாநிதி பெரிய புரட்சியாளர் - கேரளா முதல்வர் பினராயி விஜயன்

    தமிழ் மொழிக்காக கருணாநிதி ஆற்றிய சேவை எப்போதும் நிலைத்து நிற்கும் - கேரளா முதல்வர்

    கருணாநிதி அனைத்து துறைகளிலும் முத்திரை பதித்தவர் - கேரளா முதல்வர்

    தமிழ் இருக்கும் வரை கருணாநிதி இருப்பார் - கேரளா முதல்வர்

    6:17 PM, 16 Dec

    தண்ணீர் கொடுக்கும் சந்திரபாபு நாயுடுவுக்கு சென்னை என்றென்றும் கடன் பட்டிருக்கும் - துரைமுருகன்

    சந்திரபாபு நாயுடுவும் நம்ம ஊர்க்காரர் போலத்தான்- துரைமுருகன்

    பினராயி விஜயன் எளிமையும், தூய்மையும் கொண்ட அரசியல் புரிபவர் - துரைமுருகன்

    6:17 PM, 16 Dec

    சென்னைக்கு வந்து போனாலே பதவி தானாக வரும் - ராகுலுக்கு துரைமுருகன் வாழ்த்து
    6:17 PM, 16 Dec

    நேரு குடும்பத்தோடு கோபாலபுரம் குடும்பம் மீண்டும் இணைந்திருக்கிறது - துரைமுருகன்
    6:17 PM, 16 Dec

    இந்தியாவின் பிரதமராக இந்திரா காந்தியை முதன் முதலில் அறிவித்தவர் கருணாநிதிதான் - துரைமுருகன்

    பிரதமர் பதவியை வேண்டாம் என்று மறுத்த தியாக சொரூபி சோனியா காந்தி - துரைமுருகன்

    தியாகத்தின் திருவுருவம் என்று சோனியா காந்தியை புகழ்ந்தவர் கருணாநிதி - துரைமுருகன்

    6:10 PM, 16 Dec

    சோனியா காந்தியின் பிள்ளையாக திகழ்கிறார் ஸ்டாலின்- துரைமுருகன்

    பாஜக ஆட்சிக்கு சிம்ம சொப்பனமாக திகழ்கிறார் சோனியா காந்தி - துரைமுருகன்

    6:03 PM, 16 Dec

    சூரியன் மறைவதில்லை என்ற புத்தகத்தை சோனியா வெளியிட்டார்
    6:03 PM, 16 Dec

    சென்னை ஒய்எம்சிஏ மைதானத்தில் பொதுக் கூட்டம் தொடங்கியது

    சோனியா, ராகுல், ஸ்டாலின் ஆகியோருக்கு வெள்ளி வாள் பரிசாக அளிக்கப்பட்டது

    5:54 PM, 16 Dec

    கருணாநிதி சிலை திறப்பில் பங்கேற்றதை மிகப் பெரிய பெருமையாக கருதுகிறேன்- ரஜினிகாந்த்
    5:38 PM, 16 Dec

    சந்திரபாபு நாயுடு, பினராயி விஜயன் ஆகியோரும் அஞ்சலி செலுத்தினர்
    5:38 PM, 16 Dec

    கருணாநிதி நினைவிடத்தில் சோனியா காந்தி, ராகுல் காந்தி அஞ்சலி

    கருணாநிதி நினைவிடத்தைத் தொடர்ந்து அண்ணா நினைவிடத்திலும் அஞ்சலி

    5:38 PM, 16 Dec

    கருணாநிதி மற்றும் அண்ணா நினைவிடத்தில் சோனியா, ராகுல் அஞ்சலி

    அவர்களுடன் திமுக, காங்கிரஸ் தலைவர்கள் அஞ்சலி செலுத்தினர்

    5:35 PM, 16 Dec

    கருணாநிதி நினைவிடத்தில் சோனியா, ராகுல் அஞ்சலி
    READ MORE

    English summary
    Late DMK Supremo Karunanidhi's statue opening ceremony will be held today in Chennai.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X