• search
சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  

அதான் சரி.. லெட்டர் போட போகிறார் மு.க.ஸ்டாலின்.. அதிரடியில் குதிக்கிறார்.. இதுதான் நடக்க போகிறது

|

சென்னை: "விடியும் வா" என்ற அமைப்பை கையில் எடுத்துள்ளார் திமுக தலைவர் மு.க. ஸ்டாலின்.. அதன்மூலம் தமிழக மக்களுக்கு லெட்டர் எழுதவும் போகிறாராம்.. "தமிழகத்துக்கான புதிய விடியலை நோக்கி நானும் நீங்களும் ஒன்றிணைந்து பயணிக்க, என் கடிதங்கள் உங்களைத் தேடி வந்தடையும் ஒரு பெரும் முன்னெடுப்பை நான் கையிலெடுக்கிறேன்" என்று குறிப்பிட்டு ட்வீட் ஒன்றினை ஸ்டாலின் பதிவிட்டுள்ளார்.

தமிழகத்தில் விரைவில் தேர்தல் வரப்போகிறது.. இதற்கான வேலைகளில் அனைத்து கட்சிகளும் தீவிரமாக இறங்கி உள்ளன.. வியூகங்களும், யோசனைகளும் பலமாக நடந்து வருகின்றன.

இதில் அதிமுகவின் அதிருப்திகள் எல்லாமே வெளிப்படையாக தெரிந்து வருகிறது.. இது அவ்வளவும் திமுகவுக்கு சாதகமாக உருமாறும் என்று ஏற்கனவே அரசியல் வல்லுநர்கள் ஆரூடம் சொல்லி வந்தனர்.

"டேய்.. யார்ரா அவன்.. அந்த நாயை வெளிய தூக்கிட்டு போங்கப்பா".. ஆ ராசாவா இது.. ரொம்ப கேவலமான பேச்சு!

 வேளாண் மசோதா

வேளாண் மசோதா

இதனிடையே மத்திய அரசின் வேளாண் மசோதாக்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து திமுக நடத்திய மாபெரும் கண்டன போராட்டம் விவசாயிகளை ஈர்த்துள்ளது.. இதனால் திமுக மீதான செல்வாக்கு விவசாயிகள் மத்தியில் கூடியும் வருகிறது. அதேபோல, கொரோனா சமயத்தில் ஒன்றிணைவோம் வா என்ற திட்டம், பரவலாகவே பொதுமக்களை கவர்ந்தது.. அனைத்து தரப்புக்கும் இந்த திட்டம் போய் சேர்ந்தது.. ஒருசில சர்ச்சைகள், அதையொட்டி சில தலைவர்களின் மரணங்கள் எழுந்தாலும், திட்டம் வெற்றிபெறவே செய்தது.

 விடியும் வா

விடியும் வா

இப்போது இன்னொரு திட்டத்தை திமுக கையில் எடுத்துள்ளது.. அதன் பெயர் "விடியும் வா" என்பதாகும்.. இது தொடர்பாக அக்கட்சி தலைவர் தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளதாவது: "எழுச்சி மிகுந்த தமிழ் உள்ளங்களால்தான் நம் தமிழகமே கட்டமைக்கப்பட்டுள்ளது... உங்களின் எண்ணங்களுக்கு செயலூட்டி, தமிழகத்துக்கான புதிய விடியலை நோக்கி நானும் நீங்களும் ஒன்றிணைந்து பயணிக்க, என் கடிதங்கள் உங்களைத் தேடி வந்தடையும் ஒரு பெரும் முன்னெடுப்பை நான் கையிலெடுக்கிறேன். விடியும் வா!" என்று பதிவிட்டுள்ளார்.

கடிதங்கள்

அந்த ட்வீட்டுடன் ஒரு வீடியோவும் பதிவிட்டுள்ளார்.. அதில் ஸ்டாலின் பேசும்போது, "அன்பார்ந்த தமிழ்நாட்டு மக்களே! நம் ‘தமிழ்நாடு', உங்களால் கட்டமைக்கப்பட்டது... அன்பும் - அறிவும் - திறமையும் கொண்ட உங்களுடன் கடிதங்கள் மூலமாக ஒன்றிணைகிறேன். உங்கள் தேவைகளை, எண்ணங்களை, விருப்பங்களை அறிய விரும்புகிறேன்... அனைவரையும் உள்ளடக்கிய வளர்ச்சிமிகு தமிழகம் அமைப்போம்! புதிய விடியலுக்குத் தயாராவோம். ‘விடியும் வா'!" என்ற குரல் ஒலிப்பதை கேட்க முடிகிறது.

நெருக்கடி

நெருக்கடி

இந்த "விடியும் வா" என்ற பெயர் திமுக தொண்டர்களை குஷியில் ஆழ்த்தி வருகிறது.. காரணம், கொரோனா உச்சத்தில் இருந்த சமயம், எடப்பாடி அரசுக்கு மிகப்பெரிய நெருக்கடி ஒன்று எழுந்தது.. அப்போது, ஸ்டாலின் ஒரு அறிக்கை வெளியிட்டிருந்தார்.. அதில், "ஆவேசக் குரல் எழுப்பி, அட்டைக்கத்தி சுழற்றும் நாடகம் அதிக காலம் நீடிக்காது... ஆட்டம் முடியும்.. ஆறுமாதத்தில் விடியும்.." என்று தெரிவித்திருந்தார்.. அப்போதே விடியலுக்கான தொடக்கம் தொடங்கிவிட்டது என்று உடன்பிறப்புகள் முணுமுணுத்தனர்.

உற்சாகம்

உற்சாகம்

இப்போது, விடியும் வா என்ற இந்த ஒத்த வார்த்தையை கேட்டதும், "வா தலைவா.. வா தலைவா.. விடியலுக்காக தமிழகமே காத்துக்கொண்டு இருக்கிறது தலைவா" என்று தெம்புடன் ட்வீட்களை பதிவிட்டு வரவேற்று வருகின்றனர்.

வரன் தேடுகிறீர்களா? தமிழ் மேட்ரிமோனியில் இன்றே பதிவு செய்யுங்கள் - பதிவு இலவசம்!

 
 
 
English summary
DMK take Vidiyum Vaa slogan to reach out the cadres
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X