"மோடி அவரின் டாடியாக" இருந்திருந்தால் ஜாமீன் வாங்க வேண்டியது தானே?.. தங்க தமிழ்செல்வன் நறுக்
சென்னை: ராஜேந்திர பாலாஜியை ஏன் மோடி காப்பாற்றவில்லை என்று தேனி திமுக மாவட்ட செயலாளர் தங்க தமிழ்ச்செல்வன் கேள்வி எழுப்பியுள்ளார்.
"ஸ்டாலின் நீ ஜெயிக்கவே முடியாது... உனக்கு ஜாதகத்தில் கட்டம் சரியில்லை" என்று கிண்டல் அடித்து வந்த மாஜி அமைச்சர் ராஜேந்திர பாலாஜியை காணவில்லை..
எச்சரிக்கை : இந்த APPலாம் உங்க மொபைல்ல இருக்கா?... உடனே அன்இன்ஸ்டால் பண்ணுங்க..?
ஆவின் நிறுவனத்தில் பல்வேறு துறைகளில் வேலை வாங்கி தருவதாக சொல்லி சுமார் 3 கோடி ரூபாய் பணம் பெற்று மோசடி செய்ததாக அவர் மீது நடந்து வந்த வழக்கில், முன்ஜாமீன் கேட்டு தாக்கல் செய்த மனுவையும் கோர்ட் ரத்து செய்துவிட்டது.

தலைமறைவு
தான் எந்நேரமும் கைது செய்யப்படக் கூடும் என்பதால் ராஜேந்திரபாலாஜி தலைமறைவாகியுள்ளார்... அவரை பிடிக்க 6 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளது.. அதனால் திருச்சி, சென்னை, தென்காசி, பெங்களூர் பல இடங்களுக்கு விரைந்துள்ளனர்... ஆனால் அவர் தலைமறைவாக இல்லை என்று மாஜி அமைச்சர் ஜெயக்குமார் முட்டு கொடுத்து வருகிறார்... எங்கிருக்கிறார் என்றே தெரியாத நிலையில், தலைமறைவாகி கொண்டே, மேல்முறையீடும் செய்துள்ளார்.

விமர்சனம்
இந்நிலையில் திமுக தேனி மாவட்ட செயலாளர் தங்க தமிழ்ச்செல்வன் ராஜேந்திர பாலாஜி குறித்து விமர்சித்துள்ளார்.. இது தொடர்பாக ஒரு யூடியூப் சேனலுக்கு அவர் தந்த பேட்டியில், "மோடி எங்கள் டாடின்னு சொன்ன ராஜேந்திரபாலாஜியை இன்னும் மோடி காப்பாற்றவில்லையே, ஏன்? உண்மையிலேயே தான் நிரபராதி என்றால் நேரடியாக ராஜேந்திரபாலாஜி விசாரணைக்கு ஆஜராகி இருக்க வேண்டும்... ஆனால் அவர் ஓடி மறைகிறார்.

ஜாமீன்
எதிர்க்கட்சியாக இருந்தபோது எங்களை மிகவும் மோசமாக விமர்சித்தார் என்பதற்காக அவரை பழிவாங்கும் நோக்கில் நாங்கள் செயல்படவில்லை... அவர் செய்த தவறுக்கு தான் இந்த நடவடிக்கை எடுக்கப்படுகிறது. யார் தவறு செய்திருந்தாலும் நடவடிக்கை எடுக்கப்படும்... ராஜேந்திரபாலாஜி பொறுத்தவரையில் அவர் தவறு செய்திருக்கிறார். ராஜேந்திர பாலாஜி "மோடி எங்கள் டாடி" என்று சொன்னவர். உண்மையிலேயே "மோடி அவரின் டாடியாக" இருந்திருந்தால் அவர்களிடம் சொல்லி ஜாமீன் வாங்க வேண்டியது தானே? ஏன் அவருக்கு ஜாமீன் கிடைக்கவில்லை?

பாஜக
ஏனென்றால், அவர் தவறு செய்திருக்கிறார், உண்மையிலேயே அவர் மீது தவறு இருக்கிறது என்பது தெரிந்ததால்தான் அவரின் ஜாமீன் மனுவை நீதிமன்றம் ரத்து செய்துள்ளது... இந்த விஷயத்தில் மொத்தத்தில் பாஜக தரப்பு கைவிட்டதா? அதிமுக தரப்பு கை விட்டதா? என்பதை விட அவர் தவறு செய்திருக்கிறார் என்பதே நிதர்சனமான உண்மை என்று கூறியுள்ளார்.