சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

அவருக்கு "ஆண்மை" இல்லை.. முதல் ஆளா போய் காலில் விழுவார்.. தங்கம் தமிழ்ச்செல்வன் பரபரப்பு பேச்சு!

ஓபிஎஸ்ஸை கடுமையாக விமர்சித்துள்ளார் தங்க தமிழ்செல்வன்

Google Oneindia Tamil News

சென்னை: "இதே ஓபிஎஸ்.. இதே வாயில.. இதே போடி டவுனில் அன்னைக்கு என்ன சொன்னாரு? சசிகலாவை சேர்த்துப்பீங்களான்னு செய்தியாளர்கள் கேட்டதுக்கு, பொதுக்குழுதான் கூடி முடிவு பண்ணும்னு சொன்னாரா இல்லையா? இவருக்கு தாட்டியம் இருந்திருந்தால், ஆண்மை இருந்திருந்தால், சசிகலாவை நான் கட்சிக்குள் சேர்க்கவே முடியாதுன்னு பேட்டி தந்திருக்க வேண்டியதுதானே? ஏன் சொல்லலல? இவருக்கு ஆண்மை இல்லை.." என்று கோபம் கொப்பளிக்க விமர்சித்துள்ளார் தேனி வடக்கு மாவட்ட திமுக பொறுப்பாளர் தங்கதமிழ்செல்வன்!

கடந்த எம்பி தேர்தலின்போதே அமமுகவை கடுமையாக சாடிதான் பிரச்சாரம் மேற்கொண்டார்.. அமமுகவில் இருந்து திமுகவுக்கு சென்ற சமயம் அது..

பிரதமர் படைத்துள்ள மற்றொரு சாதனை.. உலகளவில் மோடி தான் டாப்.. 7 கோடியை தாண்டிய ட்விட்டர் ஃபாலோயர்ஸ்பிரதமர் படைத்துள்ள மற்றொரு சாதனை.. உலகளவில் மோடி தான் டாப்.. 7 கோடியை தாண்டிய ட்விட்டர் ஃபாலோயர்ஸ்

அப்போது தங்க தமிழ்செல்வன் பேசும்போது, "உதய சூரியன் சின்னம் மக்கள் மத்தியில் பிரபலம்... அதனால் என்னுடைய வெற்றி வாய்ப்பு உறுதியாகிவிட்டது... அமமுக மக்கள் மத்தியில் பிரபலமாக இல்லை...

சசிகலா

சசிகலா

நான் அதிமுகவில் இருந்த போதும் சசிகலாவுடன் நேரடி தொடர்பில் இல்லை . என்னை கேட்டால் சசிகலா ஒரு பலிகடா என்றுதான் சொல்வேன்.. தினகரன் செய்த சதியின் பலிகடாதான் சசிகலா. இந்த தேர்தலில் அமமுக எப்படி செயல்படுகிறது என்பதை பொறுத்து சசிகலாவின் கம்பேக்கும் அமையும் என்று எதிர்பார்க்கிறேன். சசிகலாவிற்கு எதிராக தர்மயுத்தம் நடத்தியவர்தான் பன்னீர்செல்வம்...

ஜெயலலிதா

ஜெயலலிதா

ஜெயலலிதாவை சசிகலாதான் கொன்றார் என்றும் கூட குற்றஞ்சாட்டியவர்தான் பன்னீர்செல்வம்... இதற்காக விசாரணை கமிஷன் அமைக்க வேண்டும் என்றும் கூட சொன்னார்.. இத்தனை வருடம் ஆகிவிட்டது. இன்னும் விசாரணை முடியவில்லை. விசாரணை கமிஷன் முன்பும் கூட பன்னீர்செல்வம் ஆஜராகவில்லை.. சசிகலா மூலம்தான் பன்னீர்செல்வம் முதல்வர் ஆனார். ஆனால் அதே சசிகலாவிற்கு பன்னீர்செல்வம் துரோகம் செய்தார். இவரை எல்லாம் எப்படி நம்ப முடியும்? என்று தங்க தமிழ்ச்செல்வன் கோபமாக கேள்வி எழுப்பியிருந்தார்.

பேட்டி

பேட்டி

இப்போதும் அதே கேள்வியைதான் தங்க தமிழ்செல்வன் எழுப்பி உள்ளார்.. தேனி மாவட்டம் போடியில் புதிதாக கட்டப்பட்டு வரும் மீன் மார்க்கெட் மற்றும் அம்மா உணவகம் உள்ளிட்ட பகுதிகளில் நடைபெறும் திட்ட பணிகளை தேனி வடக்கு மாவட்ட திமுக பொறுப்பாளர் தங்க தமிழ்செல்வன் ஆய்வு செய்தார்... பிறகு செய்தியாளர்களிடம் பேசும்போது சொன்னதாவது: "அதிமுக வை வழிநடத்த தெரியாமல் ஓபிஎஸ். எடப்பாடி பழனிசாமியும் தத்தளித்து வருகின்றனர்..

சண்டைகள்

சண்டைகள்

இவர்கள் தங்களது சண்டை சச்சரவுகளை தீர்த்து கொள்ளத்தான் டெல்லி சென்று பிரதமர் மோடியை சந்தித்து உள்ளனர்... ஓ.பன்னீர்செல்வம் கடந்த 10 ஆண்டு காலமாக போடி தொகுதிக்கு செய்யாத திட்டங்களை தற்போது பொதுமக்கள் என்னிடம் கோரிக்கையாக வைக்கின்றனர்... இதனால் நான் நேரில் சென்று அவர்களது கோரிக்கைகளை நிறைவேற்றி வருகிறேன். நான் அதிகார துஷ்பிரயோகம் செய்வதாக ஓபிஎஸ் சொல்வதற்கு எந்த தகுதியும் இல்லை.. இன்றைக்கு சசிகலா, தனிப்பட்ட குடும்பம் அதிமுகவை கைப்பற்ற முடியாது என்று ஓபிஎஸ் சொல்லி வருகிறார். ஆனால் விரைவில் சசிகலா அதிமுகவை கைப்பற்றுவார்.

சசிகலா

சசிகலா

இதே ஓபிஎஸ்.. இதே வாயில.. இதே போடி டவுனில் அன்னைக்கு பேசும்போது, சசிகலாவை சேர்த்துப்பீங்களான்னு செய்தியாளர்கள் கேட்டதுக்கு, பொதுக்குழுதான் கூடி முடிவு பண்ணும்னு சொன்னாரா இல்லையா? இவருக்கு தாட்டியம் இருந்திருந்தால், ஆண்மை இருந்திருந்தால், சசிகலாவை நான் கட்சிக்குள் சேர்க்கவே முடியாதுன்னு பேட்டி தந்திருக்க வேண்டியதுதானே? ஏன் சொல்லலல? இவருக்கு ஆண்மை இல்லை..

ஆதரவாளன்

ஆதரவாளன்

நான் சொல்றேன்.. ஆரம்பத்தில் இருந்தே ஓபிஎஸ் டிடிவி தினகரன் ஆதரவாளர் தான்... சட்டமன்ற தேர்தல் நேரத்தில் கூட எந்தவொரு பிரச்சாரத்திலும் ஓபிஎஸ், சசிகலா குறித்து விமர்சிக்கவில்லை... டிடிவி தினகரனுடன் கூட்டு சேர்ந்துதான் என்னை தோற்கடித்தனர்... இன்றைக்கும் ஓபிஎஸ் சசிகலாவின் விஸ்வாசிதான், சசிகலா சுற்றுப்பயணம் செய்தால் ஓபிஎஸ் குடும்பமே போய், அவரது காலில் விழுந்து தஞ்சமாவது உறுதி" என்றார்.

தங்க தமிழ்செல்வன் இப்படி பேசியுள்ளது, அதிமுக, அமமுக என 2 கட்சிகளிலும் புயலை கிளப்பி வருகிறது.. வரப்போகும் எம்பி தேர்தலில், திமுகதான் அபார வெற்றி பெறும் என்று நேற்றைய தினம் தன்னுடைய பேட்டியில் உறுதியாக தங்க தமிழ்செல்வன் கூறியிருந்தாலும், ஓபிஎஸ் மீதான அவரது கோபம் தணியவில்லை என்றே தெரிகிறது.. அத்துடன் சசிகலா மீதான கோபமும் அவருக்கு பெரிதாக இல்லை என்றும் கணிக்கப்படுகிறது.

சசிகலா

சசிகலா

நேற்று மட்டுமில்லை.. எப்போது இவர் பேட்டி தந்தாலும், சசிகலாவை சாடியதில்லை.. சசிகலா ஜெயிலில் இருக்கும்போதே, அவர் விடுதலையானால் அரசியலில் ஒன்றும் மாற்றம் இருக்க போவதில்லை என்பதை தெள்ளத் தெளிவாக எடுத்து சொன்னவர்.. இப்போதும் அதே மனநிலையில்தான் இருக்கிறார் என்றாலும், ஓபிஎஸ்ஸை, தங்கம் விடுவதாக தெரிவதில்லை.. இந்த கோபம் வரப்போகும் எம்பி தேர்தலில் இன்னும் அதிகமாகவே தேனயில் கொப்பளிக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

ராஜேந்திர பாலாஜி

ராஜேந்திர பாலாஜி

அதேசமயம், தங்கதமிழ்செல்வன் இந்த அளவுக்கு கடுமையான வார்த்தைகளை உபயோகித்திருக்க கூடாது.. என்ன இருந்தாலும் ஓபிஎஸ் சீனியர்.. வயதில் மூத்தவர்.. அரசியல் காழ்ப்புணர்ச்சிகள் இருக்கலாமே தவிர, இப்படி தடித்த வார்த்தைகளை தங்க தமிழ்செல்வன் பயன்படுத்தியிருக்க கூடாது.. இது அவருக்கு மட்டுமல்ல, கட்சி தலைவரான முதல்வர் ஸ்டாலினுக்கும் கெட்ட பெயரை ஏற்படுத்தி தந்துவிடும்.. இப்படித்தான் ராஜேந்திர பாலாஜியும், ஸ்டாலினை அன்று பேசியிருந்தார்.. இப்போது தங்க தமிழ்செல்வனும் அப்படியே பேசினால், அவருக்கும், இவருக்கும் வித்தியாசம் இல்லையா? அரசியல் நாகரீகத்துடன் முதல்வர் ஒவ்வொன்றையும் பார்த்து பார்த்து செய்து வரும்நிலையில், இதுபோன்ற அநாகரீக வார்த்தைகளை தங்க தமிழ்செல்வன் போன்ற சீனியர்கள் தவிர்த்தால் நல்லா இருக்கும்..!

English summary
DMK Thanga Tamilselvan speaks about ADMK OPS and Sasikala
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X