• search
சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  

"தங்கம்".. ஒரே நாளில் தட்டி தூக்கிய ஸ்டாலின்.. 10 வருடமாக திணறிய அதிமுக.. சக்ஸஸ் செய்த திமுக

Google Oneindia Tamil News

சென்னை: அதிமுக அரசு ஆட்சியில் இருந்தபோது 10 வருடம் செய்யாததை, முதல்வர் ஸ்டாலினின் திமுக அரசு ஒரே நாளில் செய்து முடித்துள்ளது.. இதனால் அதிமுக மேலிடம் அதிர்ந்து போயுள்ளதாம்..!
ஒவ்வொரு துறையிலும் ஒவ்வொரு அதிரடியை கிளப்பி கொண்டிருக்கிறது திமுக அரசு.. 2 மாதமாக கொரோனா தடுப்பு பணியில் எல்லா அமைச்சர்களுமே ஈடுபட்டு கொண்டிருந்தனர். அனைவருமே தங்கள் தொகுதியில் வட்டமடித்து, தொற்று தடுப்பு பணியில் ஈடுபட்டு, இறுதியில் கட்டுக்குள்ளும் கொண்டு வந்துவிட்டனர்.

 மோடி அமைச்சரவையில் 4 இடங்கள்- சாதித்தது ஜேடியூ.. கர்நாடகா பாஜக எம்.பி ஷோபா உட்பட 4 பேருக்கும் இடம்! மோடி அமைச்சரவையில் 4 இடங்கள்- சாதித்தது ஜேடியூ.. கர்நாடகா பாஜக எம்.பி ஷோபா உட்பட 4 பேருக்கும் இடம்!

அதேசமயம், துறைவாரியாகவும் தங்கள் நலத்திட்டங்களையும், மக்கள் நலன் சார்ந்த அறிவிப்புகளையும் வெளியிட்டு வருகின்றனர்.. இப்படிப்பட்ட சூழலில்தான் அமைச்சர் பொறுப்பில் இல்லாத தங்க தமிழ்செல்வன் சத்தமே இல்லாத ஒரு காரியத்தை செய்து முடித்துள்ளார்.

 எம்எல்ஏ

எம்எல்ஏ

ஓபிஎஸ் தொகுதியான போடிநாயக்கனூர் தொகுதிக்கு உட்பட்டது கொப்புரெங்கன் பட்டி.. இங்கு தனியார் வசமிருந்த அரசு நிலம் சிக்கி கொண்டிருந்தது.. இதை மீட்க இந்த 10 வருடமாகவே ஓபிஎஸ் முயற்சித்து கொண்டிருந்தார்.. அதிமுகவின் ஒருங்கிணைப்பாளராக இருந்தும், சொந்த தொகுதி எம்எல்ஏவாக இருந்தும், மகன் அந்த தொகுதியின் எம்பியாக இருந்தும், 10 வருட ஆட்சியில் இந்த தனியார் வசம் இருந்த நிலத்தை மீட்க முடியவில்லை.

 ஆக்கிரமிப்பு

ஆக்கிரமிப்பு

இதைதான் ஒரே நாளில் மீட்டுள்ளார் தங்க தமிழ்செல்வன்.. இதை பற்றி அவரே செய்தியாளர்களிடமும் பேசினார்.. அப்போது, "கலெக்டர் உள்ளிட்ட உயர் அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு அழைத்துச் சென்று ஆக்கிரமிப்பு நிலத்தை மக்களுக்காக ஒரே நாளில் மீட்டுள்ளேன்... ஓபிஎஸ் 10 வருடத்தில் செய்ய முடியாததை ஒரே நாளில் செய்து முடித்துள்ளேன்" என்று பெருமிதத்துடன் சொல்லி உள்ளார்.

 கோரிக்கை

கோரிக்கை

அதுமட்டுமல்ல, அடுத்த வேலையிலும் தொகுதிக்குள் இறங்கிவிட்டார்.. மதுரை - போடி அகல ரயில் பாதை வழித்தடத்தில் கட்டப்படும் பாலம் குறுகியதாக இருப்பதால் அதனைக் கைவிட்டு புதிதாகப் பாலம் கட்டப்பட வேண்டும் என்பது அப்பகுதி விவசாயிகள் கோரிக்கையாகும். அதனைச் செயல்படுத்த மாவட்ட ஆட்சியர் வாயிலாக ரயில்வே துறைக்குப் பரிந்துரை கடிதம் எழுத வேண்டும் என்பதால் கலெக்டரை சந்தித்து மனு தந்துள்ளார்.

 தொகுதி

தொகுதி

அதேபோல் இடவசதியின்றி வசிக்கும் ஆதிதிராவிடர் மக்களுக்குக் குடிசை மாற்று வாரியத்தின் கீழ் வீடுகள் வழங்கிட வேண்டும் என்ற கோரிக்கை மனுவையும் கலெக்டரிடம் தந்துள்ளார்.. இதையடுத்து தங்கதமிழ்செல்வனின் மதிப்பு தொகுதிக்குள் எகிறி கொண்டிருக்கிறது.. இந்த இடத்தில் நாம் இன்னொன்றையும் சொல்ல வேண்டி உள்ளது.. தங்கதமிழ்செல்வனை பொறுத்தவரை, திமுகவுக்கு விசுவாசமாக இருப்பவர்.. இந்த முறை தேர்தலில் எப்படியும் இவர் வெற்றிபெற்றுவிடுவார் என்றே கணிக்கப்பட்டது.

ஓபிஎஸ்

ஓபிஎஸ்

ஆனால், கடைசி நேரத்தில் மிஸ் ஆகிவிட்டது.. அதிமுக மாவட்ட தலைவர்களை தோற்கடித்தால், நிச்சயம் அமைச்சர் பதவி அல்லது முக்கிய பதவி உண்டு என்று ஏற்கனவே திமுக மேலிடம் தெரிவித்திருந்தது. ஆனாலும், தங்க தமிழ்செல்வன், ஓபிஎஸ்ஸுக்கு இறுதிவரை நெருக்கடி தந்தால், இவருக்கு விரைவில் முக்கிய பதவி வழங்கப்படலாம் என்றும் ஒரு பேச்சு இருந்து வருகிறது.. இப்படிப்பட்ட சூழலில், தங்கதமிழ்செல்வன் செய்து வரும் காரியங்கள் திமுக தலைமையை மகிழ்ச்சி அடைய வைத்து வருகிறது.. பார்ப்போம்..!

English summary
DMK Thanga Thamizhselvan recovered govt land from pvt in Bodi
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X