சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

எதை பத்தியும் கவலையே இல்லை.. சரக்குடன் பார்ட்டி.. திருவள்ளூர் திமுக தந்த ஷாக்... 50 பேருக்கு தொற்று

திருவள்ளூர் திமுக பிரமுகர் கொண்டாடிய விழாவினால் 50 பேருக்கு தொற்று ஏற்பட்டுள்ளது

Google Oneindia Tamil News

சென்னை: எதை பற்றியும் இந்த திமுகவினர் கவலைப்படவே இல்லை.. திருவள்ளூர் மாவட்ட பிரமுகர் வைத்த பர்த்டே பார்ட்டியில் 500 பேர் கலந்து கொண்ட நிலையில், அதில் 50 பேருக்கு கொரோனா தொற்று வந்துள்ளதாம்.. இது திமுக தலைமைக்கு கடுமையான அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளதாக கூறப்படுகிறது.

தற்போதைக்கு தொற்று பாதித்த தமிழக மாவட்டங்களில் முதன்மையாக உள்ளது தலைநகரம்.. இது அண்டை மாவட்டங்களிலும் பரவி, அங்கேயும் பாதிப்பை தினம் தினம் ஏற்படுத்தி வருகிறது. அதனால்தான் 4 மாவட்டங்களுக்கும் லாக்டவுனுக்குள் லாக்டவுன் போடப்பட்டுள்ளது.

இந்நிலையில் திமுக மீது ஒரு பகீர் புகார் எழுந்துள்ளது.. கும்மிடிப்பூண்டியை சேர்ந்த திமுகபிரமுகர் குணசேகரன் மீதுதான் ஒரு குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

திமுக இனி கதம் கதம்தான்.. ஸ்டாலின் போக்கு யாருக்கும் பிடிக்கலை.. வெளுத்து வாங்கிய ராஜேந்திர பாலாஜி திமுக இனி கதம் கதம்தான்.. ஸ்டாலின் போக்கு யாருக்கும் பிடிக்கலை.. வெளுத்து வாங்கிய ராஜேந்திர பாலாஜி

குணசேகரன்

குணசேகரன்

மாவட்ட செயலாளர் வேணுவுக்கு நம்பிக்கைக்குரியவர்தான் குணசேகரன்.. கட்சியின் பொதுக்குழு உறுப்பினர்.. கும்மிடிப்பூண்டி ஒன்றிய குழு துணை தலைவர்.. இவரது 50வது பிறந்த நாள் என்பதால், தடபுடலாக 2 நாளைக்கு முன்பு தன்னுடைய தோட்டத்தில் பிறந்த நாள் விழாவை குணசேகரன் கொண்டாடினார்.

 பார்ட்டி

பார்ட்டி

இந்த விழாவில் செம்மரக் கடத்தல் கும்பலை சேர்ந்த ரவுடிகள் உட்பட பலர் கலந்து கொண்டதாக கூறப்படுகிறது.. கறி, மீன் என அசைவ அயிட்டங்கள் என வெளுத்துகட்ட, சரக்கடித்து மூழ்கி திளைத்து இந்த பார்ட்டியை உற்சாகமாக கொண்டாடியதாகவும் கூறப்படுகிறது. எப்படியோ 500-க்கும் மேற்பட்டோர் இதில் கலந்து கொண்டிருப்பார்கள் என்கிறார்கள். குறிப்பாக வேணுவின் மகனும் இதில் கலந்து கொண்டாராம்.
அவர் மட்டுமல்ல... அதிமுக சேர்மன் சிவக்குமாரும் பங்கேற்றுள்ளார்.. இப்படி திமுக, அதிமுக என பிரமுகர்கள் கலந்து விழாவை சிறப்பித்திருக்கிறார்கள்.

 2 விதமான பிரச்சனை

2 விதமான பிரச்சனை

இப்போது 2 சிக்கல் எழுந்துள்ளது... இந்த பார்ட்டி நடந்தது திருவள்ளூர் மாவட்டத்தில்.. அங்கும்தான் தற்போது லாக்டவுன் போடப்பட்டுள்ளது.. ஆனால் இதை பற்றி கொஞ்சமும் கவலைப்படாமல் குணசேகர் ஊரையே அழைத்து பார்ட்டி வைத்ததுதான் விவகாரமாக வெடித்துள்ளது.. மற்றொரு பிரச்சனை, பர்த்டே பேபி குணசேகருக்கு தொற்று உறுதி ஆகி உள்ளதாம்.. இதனால் அந்த பார்ட்டியில் கலந்து கொண்ட திமுக நிர்வாகிகள் உட்பட 15 பேருக்கும் தொற்று தாக்கியிருப்பது அடுத்தக்கட்டமாக உறுதி செய்யப்பட்டுள்ளது.

 அறைகூவல்

அறைகூவல்

இப்போது திருவள்ளூர் மாவட்ட திமுக கதி கலங்கி போயுள்ளது.. தலைமைக்கு தெரிந்தால் அவ்வளவுதான் என்று நடுங்கி போயுள்ளனராம். காரணம், "ஒன்றிணைவோம் வா" என்று அறைகூவல் விடுத்து கொரோனாவுக்கு எதிராக ஒவ்வொரு நாளும் திமுக தலைவர் போராடி வருகிறார்.. இதற்காகவே மெனக்கெட்டு சீரிய முயற்சிகளை மேற்கொண்டு வருகிறார்.. தமிழக அரசுக்கு தினமும் அறிக்கைகள் மூலம் கருத்துக்களையும், கண்டனங்களையும் ஒருசேர வெளியிட்டும் வருகிறார்.

 திமுக தலைமை

திமுக தலைமை

ஏற்கனவே தொற்று பாதித்து திமுக தரப்பில் உயிர் பலியும் வாங்கப்பட்டுள்ள நிலையில் சிலர் பாதிப்பிலும் உள்ளனர்.. இவ்வளவு தெரிந்தும் திருவள்ளூர் மாவட்ட நிர்வாகிகள் பொறுப்பில்லாமல் நடந்து கொண்டுள்ளது உண்மையிலேயே திமுக தலைமைக்கு அதிர்ச்சியையே கண்டிப்பா தரும் என்றே தெரிகிறது.. தன் மாவட்டம் எப்பேர் பட்ட பாதிப்பில் உள்ளது என்ற அபாயம் தெரிந்தும்கூட, ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ளது என்று தெரிந்தும்கூட, இத்தனை பேரை கூப்பிட்டு குணசேகர் இப்படி ஒரு பர்த்டே பார்ட்டியை வைக்க வேண்டுமா என்ற கேள்வி நமக்கு இயல்பாகவே எழுகிறது.

 தொற்று

தொற்று

அது மட்டுமல்ல.. இப்போதைக்கு அந்த பார்ட்டியில் கலந்து கொண்ட 50 பேருக்கு தொற்று பாதிப்பு உறுதியான நிலையில், அவர்கள் மூலம் இன்னும் எத்தனை பேருக்கு இது பரவியிருக்குமோ என்ற கலக்கத்தையும், அச்சத்தையும் ஏற்படுத்தி உள்ளது.. தற்போது குணசேகர் உள்பட 50 திமுகவினர் மீது வழக்கு பதிவு செய்துள்ளது ஆரம்பாக்கம் போலீசார் என்றாலும், இதன் விளைவு எப்படி போய் முடியுமோ தெரியவில்லை.

Recommended Video

    AIADMK vs DMK : கார்ப்பரேட்களை நம்பி களமிறங்கும் எதிர் எதிர் கட்சிகள்...என்ன ஆகப்போகிறது?
     கடிவாளம்

    கடிவாளம்

    முதலில் தன் கட்சிக்காரர்களுக்கு திமுக தலைமை கண்டிப்பான அறிவுரைகளை வழங்கி ஒரு கடிவாளத்தை போட வேண்டியது உடனடி அவசியமாகிறது.. இல்லையென்றால் இத்தனை மாதமாக, வைரஸ் தொற்றை பாடுபட்டு ஒழிக்க போராடி வரும் திமுக தலைமைக்கு இவர்களால் நிச்சயம் களங்கம் ஏற்படவே செய்யும்!

    English summary
    DMK: thiruvallur dmk execute celebrates his birthday party and affects corona
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X