சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

காங்கிரஸுக்கு 10 சீட்தானாம்.. கழற்றிவிட்டே தீருவது என முடிவோடுதான் இருக்கிறதா திமுக?

Google Oneindia Tamil News

சென்னை: தமிழகத்தில் காங்கிரஸ் கட்சிக்கு 10 தொகுதிகள் மட்டுமே ஒதுக்கலாம் என்கிற திடீர் முடிவில் இருக்கிறதாம் திமுக. கூட்டணியில் இருந்து கழுத்தை பிடித்து வெளியே தள்ளுவது போல 10 சீட் அளவுக்கு திமுக போய்விட்டதை அதிர்ச்சியுடன் பார்க்கின்றனராம் காங்கிரஸ் தலைவர்கள்.

தமிழக சட்டசபை தேர்தலில் திமுக கூட்டணியில் காங்கிரஸ் கட்சிக்கு 20 முதல் 25 இடங்கள் ஒதுக்கப்படலாம் என கூறப்பட்டது. ஆனால் களநிலவரங்களில் திமுக திட்டமிட்டதைவிட கூடுதல் இடங்களில் போட்டியிட்டாக வேண்டும் என கருதுகிறதாம்.

மஹாராஷ்டிரா மாநில பஞ்சாயத்து தேர்தல் முடிவுகள்... சமபலத்துடன் பாஜக -சிவசேனா -தேசியவாத காங்கிரஸ்..!மஹாராஷ்டிரா மாநில பஞ்சாயத்து தேர்தல் முடிவுகள்... சமபலத்துடன் பாஜக -சிவசேனா -தேசியவாத காங்கிரஸ்..!

காங்கிரஸுக்கு 10,11 சீட்டுகள்

காங்கிரஸுக்கு 10,11 சீட்டுகள்

இதனால் கூட்டணி கட்சிகளுக்கான ஒதுக்கீட்டில் கை வைப்பது என முடிவெடுத்திருக்கிறதாம் திமுக. தற்போதைய நிலவரப்படி காங்கிரஸுக்கு 10 அல்லது 11 தொகுதிகள் எனவும் இதர கூட்டணி கட்சிகள் அத்தனைக்கு சிங்கிள் டிஜிட் என சுருக்கிவிட்டதாகவும் கூறப்படுகிறது.

காங். அதிருப்தி

காங். அதிருப்தி

திமுகவின் இந்த திடீர் முடிவு காங்கிரஸ் கட்சிக்கு கடும் அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது. திமுக கூட்டணியில் இருந்து வெளியே போங்க என்று சொல்லுவதைப் போல 10,11 தொகுதிகளில் பேரம் பேசுகிறார்களே என கடும் அதிருப்தியை காட்டியிருக்கிறார்கள் காங்கிரஸ் தலைவர்கள். இது தொடர்பாக டெல்லி மேலிடத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளதாம்.

புதுச்சேரியிலும் டமால்

புதுச்சேரியிலும் டமால்

மேலும் புதுவையிலும் காங்கிரஸை கழற்றிவிடும் முடிவில் திமுக இருப்பது உறுதியாகிவிட்டது. புதுச்சேரியில் திமுக முதல்வர் வேட்பாளராக ஜெகத்ரட்சகன் களமிறக்கப்பட உள்ளார். காங்கிரஸை கழற்றிவிட்டு என்.ஆர். காங்கிரஸுடன் திமுக கூட்டணி அமைக்க பிரகாசமான வாய்ப்புகள் இருப்பதாகவும் கூறப்படுகிறது.

அதிர்ச்சியில் திமுக கூட்டணி கட்சிகள்

அதிர்ச்சியில் திமுக கூட்டணி கட்சிகள்

அதிமுக- பாஜக அணியில் என்.ஆர். காங்கிரஸ் இருக்கிறது. இப்போது என்.ஆர். காங்கிரஸை திமுக வளைக்கும் முயற்சிகளில் இறங்கி இருக்கிறது. தேர்தல் நெருங்கும் நிலையில் திமுகவின் இந்த திடீர் முடிவுகள் அதன் கூட்டணி கட்சிகளை அதிர வைத்திருக்கின்றன.

English summary
sources said that DMK will give only 10 seats to Congress for the Assembly Election.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X