சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

பாஜக தலைவர்களை விட்ருங்க.. பிரச்சினையை மட்டும் பேசுங்க.. இதைத்தான் செய்யப் போகிறது திமுக?

Google Oneindia Tamil News

Recommended Video

    அதிமுக அரசை விமர்சிக்கும் பாஜக | தண்ணீர் பிரச்சினைக்கு என்ன தீர்வு தமிழிசை கேள்வி

    சென்னை: நாடாளுமன்றத்தில் பாஜக தலைவர்கள் மீது தனிப்பட்ட விமர்சனங்கள் இல்லாமல் பிரச்சனைகள் அடிப்ப்டையில் மட்டுமே பேசுவோம் என்று வாக்குறுதி அளித்துள்ளதாம் திமுக.

    லோக்சபா தேர்தல் களத்தில் பாஜகவை பிரதான எதிரியாக முன்வைத்து வெற்றியை அறுவடை செய்தது பாஜக. ஆனால் தேர்தல் முடிவடைந்ததும் திமுக காட்டிய மவுனம் பெரும் சந்தேகங்களை எழுப்பியது.

    DMK to handle with soft on BJP?

    ஏனெனில் தேர்தலுக்கு முன்னரே பாஜகவுக்கு தனிப்பெரும்பான்மை கிடைக்காமல் போனால், நிதின் கட்காரியை பிரதமராக்குவதற்கு ஆதரவு என்கிற முடிவை எடுத்திருந்தது திமுக. இதனால் பாஜக அரசுக்கு திமுக ஆதரவு தருமோ என்கிற சந்தேகம் கிளம்பியது.

    ஆனால் தேர்தல் முடிவுகளில் பாஜக தனிப்பெரும்பான்மை பெற்று மோடியே மீண்டும் பிரதமர் ஆனார். இதனால் திமுகவின் ஊசலாட்டமும் முடிவுக்கு வந்தது.

    இந்நிலையில் நாடாளுமன்றத்தை சுமூகமாக நடத்துவது தொடர்பான அனைத்துக் கட்சிக் கூட்டம் டெல்லியில் நடைபெற்றது. இதில் திமுகவின் டி.ஆர். பாலு எம்.பி.யும் பங்கேற்றார். அப்போதே மத்திய அமைச்சரவையில் சேரப் போகிறது என செய்திகள் வெளியாகின.

    கனிமொழி எம்பி ஏன் இப்படி சொல்லி இருக்கிறார்.. அப்பா ஞாபகமா? கனிமொழி எம்பி ஏன் இப்படி சொல்லி இருக்கிறார்.. அப்பா ஞாபகமா?

    ஆனால் திமுக இதை திட்டவட்டமாக மறுத்தது. இது தொடர்பாக நம்மிடம் பேசிய டெல்லி வட்டாரங்கள், மத்திய அமைச்சரவையில் திமுக சேரவில்லை என்பது உண்மை. அதே நேரத்தில் திமுகவின் டெல்லி முகம் தரப்பில் பாஜகவுக்கு ஒரு உறுதி மொழி தரப்பட்டுள்ளது.

    அதாவது தேர்தல் களத்தைப் போல இல்லாமல் தனிநபர் தாக்குதல்களைத் தவிர்த்து, பிரச்சனைகள் அடிப்படையில் மட்டும் நாங்கள் நாடாளுமன்றத்தில் பேசுகிறோம். கடுமையன தாக்குதல்கள் தொடுக்கமாட்டோம் என உறுதி கொடுத்துள்ளனராம். அதாவது வலிக்காமலேயே பாஜகவை நாங்களும் அடித்தோம் என்கிற நிலைப்பாடுடன் உள்ளதாம் திமுக.

    English summary
    Sources said that DMK will handle with soft on BJP in the Parliament.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X