சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

அண்ணா நினைவு தினம்.. மெரினா நினைவிடம் நோக்கி ஸ்டாலின் தலைமையில் திமுக பேரணி.. திரண்ட தொண்டர்கள்

Google Oneindia Tamil News

Recommended Video

    செய்தி தெரியுமா | 03-02-2020 | oneindia tamil Morning news

    சென்னை: திமுக சார்பில் சென்னையில் அண்ணா நினைவிடம் நோக்கி அமைதி பேரணி நடைபெற்றது. அண்ணா நினைவு தினத்தை முன்னிட்டு இன்று பேரணி நடந்தது.

    தமிழகத்தின் முன்னாள் முதல்வரும், திமுகவின் முன்னாள் தலைவருமான அண்ணாவின் நினைவு தினம் இன்று அனுசரிக்கப்படுகிறது. தமிழக அரசியலில் மிக முக்கியமான தலைவர் அறிஞர் அண்ணா என்பது குறிப்பிடத்தக்கது. தற்போது திராவிட அரசியலின் வழிக்காட்டியாக இவர் பார்க்கப்படுகிறார்.

    DMK to hold a silent march toward ANNA memorial on his death anniversary

    இந்த நிலையில் அவரின் நினைவு தினத்தை முன்னிட்டு திமுக அமைதி பேரணி நடந்தது. திமுக தலைவர் ஸ்டாலின் தலைமையில், காலை 8 மணியளவில் அமைதி பேரணி நடந்தது. வாலாஜா சாலையில் உள்ள விருந்தினர் இல்லம் அருகே தொடங்கும் இந்த அமைதி பேரணி, அண்ணா நினைவிடத்தை சென்றது.

    அங்கு ஸ்டாலின் உள்ளிட்ட திமுக தலைவர்கள் அஞ்சலி செலுத்தினார்கள். மேலும் அமைதிப் பேரணியில் திமுக-வினர், பொதுமக்கள் திரளாக பங்கேற்க சென்னை மாவட்ட திமுக அழைப்பு விடுத்தது. இதனால் பலர் இந்த பேரணியில் கலந்து கொண்டனர். 4 ஆயிரத்திற்கும் அதிகமாக மக்கள் இந்த பேரணியில் கலந்து கொண்டனர்.

    இதற்காக அண்ணா சமாதி பெரிய அளவில் அலங்காரம் செய்யப்பட்டது. தலைவர்கள் வரிசையாக திமுக சார்பாக சமாதியில் அஞ்சலி செலுத்தினார்கள். அதிமுக சார்பாகவும் தமிழகம் முழுக்க பல இடங்களில் இந்த அண்ணாவிற்கு நினைவஞ்சலி செலுத்த ஏற்பாடு செய்யப்பட்டது.

    English summary
    DMK to hold a silent march toward ANNA memorial on his death anniversary today.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X