சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

திமுக பிரசாரம்- 1500 பொது கூட்டங்கள்- 15 பிரச்சாரகர்கள்- 75 நாட்கள்- இன்று தொடங்கி வைத்தார் உதயநிதி

Google Oneindia Tamil News

சென்னை: தமிழக சட்டசபை தேர்தலுக்கான பிரசாரத்தை விடியலை நோக்கி ஸ்டாலினின் குரல் என்ற பெயரில் இன்று முதல் திமுக தொடங்குகிறது. தமிழகம் முழுவதும் 15 நட்சத்திர பிரச்சாரகர்கள் பங்கேற்கும் 1,500 பொதுக்கூட்டங்களை 75 நாட்கள் நடத்துகிறது திமுக.

இது தொடர்பாக திமுக தலைமை கழகம் இன்று வெளியிட்ட அறிக்கை:

DMK to kick start campaign for TN Assembly Election from today

மு.க. ஸ்டாலினின் செய்தியை தமிழகத்தின் மூலை முடுக்கெங்கும் கொண்டு சேர்க்கும் முயற்சி 75 நாட்கள், 15 கழக முன்னணியினர், 1,500 கூட்டங்கள், 15,000 கி.மீ 234 தொகுதிகள், 500 + உள்ளூர் நிகழ்வுகள், 10 இலட்சம் + நேரடி கலந்துரையாடல்கள் "விடியலை நோக்கி ஸ்டாலினின் குரல்" என்னும் பரப்புரையை திராவிட முன்னேற்றக் கழகம் அறிவித்துள்ளது.

இப்பரப்புரையின் வழியாக, திமுகவின் 15 கழக முன்னணியினர், மு.க.ஸ்டாலினின் தூதுவர்களாக தமிழகத்தின் 234 தொகுதிகளுக்கும் பயணித்து மக்களைச் சந்தித்துக் கலந்துரையாட உள்ளனர்.

இந்த பரப்புரைப் பயணத்தின் நோக்கம்: அதிமுக அரசாங்கத்தின் கடந்த 10 ஆண்டு கால முறையற்ற நிர்வாகம் குறித்து மக்களிடம் சுட்டிக்காட்டுவதுடன் அவர்களின் குறைகளையும் துன்பங்களையும் பற்றி நேரடியாகக் கேட்டறிவது; அடுத்து ஆட்சி அமைக்கப்போகும் அரசின் மீதான மக்களின் கருத்துகளையும் ஆலோசனைகளையும் எதிர்பார்ப்புகளையும் திமுகவின் உயர்மட்டத் தலைவர்கள் கேட்டறிவது.

DMK to kick start campaign for TN Assembly Election from today
DMK to kick start campaign for TN Assembly Election from today

இச்செயல்பாட்டின்போது, "ஆளும் அதிமுக அரசின் அட்டூழியங்களையும் நிர்வாகச் சீர்கேடுகளையும் நிராகரித்து, புதிய விடியலை நோக்கி நடைபோடுவோம்" என்னும் மு.க.ஸ்டாலினின் முழக்கத்தை மக்களிடம் இத்தலைவர்கள் எதிரொலிப்பர்.

நாகப்பட்டினம் மாவட்டம் திருக்குவளையில் இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலினால் துவக்கிவைக்கப்படுகிறது. இப்பரப்புரைப் பயணத்தில் முதற்கட்டமாக உதயநிதி ஸ்டாலின். கனிமொழி கருணாநிதி, திருச்சி சிவா, திண்டுக்கல் ஐ. லியோனி, சபாபதி மோகன் ஆகியோரும் 2-ம் கட்டமாக ஐ. பெரியசாமி, க. பொன்முடி, சுப்புலட்சுமி ஜெகதீசன், அந்தியூர் செல்வராஜ், ராஜ கண்ணப்பன் ஆகியோரும் பிரசாரம் செய்வர்.

3 வருட போராட்டத்துக்கு பின் கோமதி முகத்தில் மகிழ்ச்சி.. எடப்பாடியார், ஸ்டாலின் செய்த பேருதவி3 வருட போராட்டத்துக்கு பின் கோமதி முகத்தில் மகிழ்ச்சி.. எடப்பாடியார், ஸ்டாலின் செய்த பேருதவி

3-வது கட்டமாக டிசம்பர் 11-ந் தேதி முதல் ஏ. கே. எஸ். விஜயன், தமிழச்சி தங்கபாண்டியன், எஸ். ஆர். பார்த்திபன், மருத்துவர் எஸ். செந்தில்குமார், கார்த்திகேய சிவசேனாபதி ஆகியோரும் பிரசாரம் மேற்கொள்வர். இவ்வாறு திமுக தலைமை கழக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

English summary
DMK will kick start campaign for the Tamilnadu Assembly Election 2021 from today.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X