சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

பட்ஜெட் பஞ்சாயத்தால் திமுகவிடம் இருந்து கை நழுவிய பிரசாந்த் கிஷோர்.. தொடருமா பேச்சுவார்த்தை?

Google Oneindia Tamil News

Recommended Video

    Prasanth kishor | பிரஷாந்த் கிஷோர் விவகாரத்தில் பரிதவிக்கும் அதிமுக,வேடிக்கை பார்க்கும் திமுக-வீடியோ

    சென்னை: தேர்தல் வியூக வல்லுநர் பிரசாந்த் கிஷோர் முன்வைத்த பட்ஜெட் தொடர்பாக திமுக முடிவு எதுவும் கூறாத நிலையில்தான் அதிமுக, மநீம கட்சிகளை நோக்கி அவர் கரம் நீட்டியிருக்கிறார் என்கின்றன அரசியல் வட்டாரங்கள்.

    திமுகவின் முக்கிய முடிவுகளைத் தீர்மானிக்கும் கிச்சன் கேபினட்டுக்கு மிக நெருக்கமானவர்தான் பிரசாந்த் கிஷோர். அவரது ஆலோசனைப்படிதான் கடந்த சில ஆண்டுகளாக ஸ்டாலினின் நமக்கு நாமே உள்ளிட்ட நிகழ்ச்சிகள் அரங்கேறி வருகின்றன.

    அடுத்த சட்டசபை தேர்தலுக்கு பிரசாந்த் கிஷோரை திமுகதான் முதலில் அணுகியதாம். பிரசாந்த் கிஷோரும் ஒப்புக் கொண்டு பட்ஜெட் தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்தியிருக்கிறார்.

    அதிமுக மீது தொடரும் விமர்சனம்: துக்ளக் குருமூர்த்திக்கு அமைச்சர் ஜெயக்குமார் கடும் எச்சரிக்கைஅதிமுக மீது தொடரும் விமர்சனம்: துக்ளக் குருமூர்த்திக்கு அமைச்சர் ஜெயக்குமார் கடும் எச்சரிக்கை

    பிகே- முடிவெடுக்காத திமுக

    பிகே- முடிவெடுக்காத திமுக

    பிரசாந்த் கிஷோர் முன்வைத்த பட்ஜெட் குறித்து எந்த முடிவையும் திமுக தரப்பு தெரிவிக்காமல் இருந்தது. இதனையடுத்து திரிணாமுல் காங்கிரஸ் விடுத்த அழைப்பை ஏற்று மமதாவுடன் பேச்சுவார்த்தை நடத்தினார் பிரசாந்த் கிஷோர்.

    ஓபிஎஸ் எதிர்ப்பு

    ஓபிஎஸ் எதிர்ப்பு

    அதேநேரத்தில் அதிமுகவில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி தரப்பு, பிரசாந்த் கிஷோரை அணுகுவதற்கான பேச்சுகளை தொடங்கின. ஆனால் திமுகவுடன் நெருக்கமானவர் என்பதால் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் இதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்தார்.

    கமல்ஹாசனுடன் ஆலோசனை

    கமல்ஹாசனுடன் ஆலோசனை

    இதனால் அதிமுகவின் முயற்சியும் முட்டுக்கட்டையாகிப் போனது. இதனைத் தொடர்ந்தே நடிகர் கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யத்துக்காக செயல்படுவது குறித்து நேற்று சென்னையில் ஆலோசனை நடைபெற்றிருக்கிறது.

    மீண்டும் பேசும் திமுக?

    மீண்டும் பேசும் திமுக?

    எப்படியும் தங்களை விட்டு போய்விடமாட்டார் பிரசாந்த் கிஷோர் என திடமாக நம்புகிறது திமுக முகாம். அப்படியே எதிர்முகாமுக்குப் போனாலும் தங்களுக்கு எந்த பாதிப்பும் இல்லை என்பதிலும் திமுக தெளிவாக இருக்கிறது. இருப்பினும் எதிர்க்கட்சிகளுக்கு அப்படி ஒரு வாய்ப்பை நாமே ஏன் வலிய தர வேண்டும் என நினைத்து கிஷோருடன் மீண்டும் பேச்சுகளை திமுகவும் தொடங்கலாம் என்கின்றன அறிவாலய வட்டாரங்கள்.

    English summary
    Sources said that DMK may restart its talks with Prasanth Kishore for the Assembly Elections.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X