சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

தேர்தல் ரத்தா.. வீட்டு வாசல் நிலைப்படியை ஒரு கையால் ஸ்டைலாக பிடித்தபடி பேட்டி தந்த தில் துரைமுருகன்

வேலூர் தொகுதி தேர்தல் ரத்து குறித்து துரைமுருகன் கேஷுவலாக பதிலளித்தார்.

Google Oneindia Tamil News

Recommended Video

    தேர்தல் ரத்ததான நிலையிலும் ஸ்டைலாக பேட்டி தந்த துரைமுருகன்-வீடியோ

    சென்னை: வீட்டு வாசற்படி உத்திரத்தில் நின்று கொண்டு துரைமுருகன் அளித்த கேஷூவல் பேட்டி பெரும் வியப்பை தருகிறது.

    பொதுவாக, அறிவாலயம், கோபாலபுரம் போன்ற இடங்களில் சிரிப்பு சத்தம் வெடித்து கேட்கிறது என்றால் அங்கே துரைமுருகன்தான் பேசிக் கொண்டிருக்கிறார் என்று அர்த்தம். கருணாநிதிக்கு துரைமுருகன் பேச்சு என்றால் ரொம்பவே பிடிக்கும். சில சமயங்களில் உட்கார வெச்சு அவரை பேச சொல்லி கேட்பாராம்.

    சட்டமன்றத்தில் கூட துரைமுருகனுக்கு ஒரு தனி ரசிகர் கூட்டமே உள்ளது. அடுத்தவர் போன்று மிமிக்ரி செய்வதும், முகபாவனை செய்வதும், கவுண்ட்டர் அடிப்பதிலும் கலக்குவார் துரைமுருகன். அதனால் கட்சிபேதமின்றி எல்லா எம்எல்ஏக்களும் இவரது பேச்சுக்கு விழுந்து விழுந்து சிரிப்பார்கள்.

    வேகமா வந்தாங்க.. பேசும் போதே சுட்டாங்க.. ஆண்டிபட்டி துப்பாக்கி சூடு குறித்து அமமுகவினர் விளக்கம் வேகமா வந்தாங்க.. பேசும் போதே சுட்டாங்க.. ஆண்டிபட்டி துப்பாக்கி சூடு குறித்து அமமுகவினர் விளக்கம்

    மிஸ்டர் துரைமுருகன்

    மிஸ்டர் துரைமுருகன்

    இப்படித்தான் ஒருமுறை சட்டசபையில் ஜெயலலிதா எதிரே வந்த துரைமுருகன் வணக்கம் கூற, அப்போது ஜெயலலிதாவோ, "மிஸ்டர் துரைமுருகன்... உங்களுக்கு நல்ல ஹ்யூமர் சென்ஸ் இருக்கு. அரசியலுக்கு வராமல் சினிமாவில் வந்திருந்தால் நீங்க ஒரு நல்ல நடிகனா வந்திருப்பீங்க" என்று கலாய்த்தார்.

    தமிழகத்தில் நாளை லோக்சபா தேர்தல்.. என்ன சிறப்பம்சம் தெரியுமா?

    பொறுமை

    பொறுமை

    ஆனால் எவ்வளவு காமெடியா பேசினாலும் துரைமுருகனிடம் உள்ள திறமையே தனி. அரசியல், வரலாறு உள்ளிட்ட நிலவரங்களை விரல் நுனியில் வைத்திருப்பார். அதிகம் உணர்ச்சிவசப்படக்கூடியவர் என்றாலும் ரெய்டு நடந்ததில் இருந்து துரைமுருகனிடம் ஒரு பொறுமை தென்பட்டு வருகிறது.

    ரெய்டு

    ரெய்டு

    இப்படித்தான் அன்றைக்கு விஜயபாஸ்கர் வீட்டில் ரெய்டு நடந்தபோது, ஃபைலை தூக்கி கொண்டு ஓடியதும், செய்தியாளர்கள் முன்னிலையில் பதறி பேசியதையும் நாடறியும். ஆனால் துரைமுருகன் வீட்டில் ரெய்டு நடத்தப்பட்ட அன்றே, அவரது முகத்தில் துளியும் டென்ஷன் இல்லை. பொறுமையான அணுகுமுறை, நிதானமான செயல்பாடு என அசராமல் நிற்கிறார் மனுஷன்!

    கலர் கலர் தேர்தல் அறிக்கைகள்.. எது பெஸ்ட்.. எது வேஸ்ட்.. வாங்க பார்க்கலாம்!

    ஜனநாயக படுகொலை

    ஜனநாயக படுகொலை

    இந்த ரெய்டு காரணமாக, இத்தனை வருடமாக கட்சியில் கட்டிக்காத்த இமேஜ் நொறுங்கியதுடன், மன உளைச்சல், அவமானமும் கண்டிப்பாக வந்திருக்கவே செய்யும். நேற்று இரவு வேலூரில் தேர்தல் இல்லை என்றவுடன், "ஜனநாயக படுகொலை" என்ற தடித்த வார்த்தைகளுடன் விமர்சனத்தை முன்வைத்தாலும், துரைமுருகன் அளித்த பேட்டி அநாயசமாக இருந்தது.

    எம்ஜிஆர், கருணாநிதி

    எம்ஜிஆர், கருணாநிதி

    வீட்டு வாசற்படியில், உத்திரத்தில் ஒரு கையை பிடித்து கொண்டு, துரைமுருகன் மீடியாவுக்கு பதில் அளித்தார். அப்போது கூட அவர் கெத்து குறையவில்லை. என்ன வேணும்னாலும் பண்ணிக்கோங்க.. என்னை யாராலும் எதுவுமே செய்ய முடியாது என்ற துணிவும், நம்பிக்கையும் துரைமுருகன் பேச்சிலும், நின்ற ஸ்டைலிலும் தெரிந்தது. இது ஆணவமோ,அளவுக்கு அதிகமான தன்னம்பிக்கையோ இல்லை.. அவ்வளவும் எம்ஜிஆர், கருணாநிதியிடமிருந்து கற்று கொண்ட நேரடி பாடங்கள், அனுபவங்கள்! துரைமுருகன் இஸ் ஆல்வேஸ் துரைமுருகன்!

    English summary
    DMK Treasurer Durai murugan casually replied about Vellore Constituency Election cancelled
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X