• search
சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  

புதிய "உதயம்".. நடு ராத்திரியில் வந்தாலும் கலையாத கூட்டம்.. அள்ளு கிளம்பும் "எதிர்" கட்சிகள்!

|

சென்னை: உதயநிதி போகும் இடமெல்லாம் மக்கள் கூட்டம் கூடுகிறதாம்.. இதுதான் இன்றைய ஹாட் டாப்பிக்!

திமுகவின் இளைஞரணி செயலாளர் உதயநிதி எதிர்பார்த்ததுபோல இல்லை.. ரொம்ப வேகமாக இருக்கிறார்.. இதைதான் கடந்த சில சம்பவங்கள் நிரூபித்து வருகின்றன.

உதயநிதி ஒரு சினிமா நடிகர்.. அவருக்கு என்ன அரசியல் அனுபவம் இருக்கிறது? எத்தனை போராட்டம் இதுவரை நடத்தி இருக்கிறார்? மக்களுக்காக அவர் இதுவரை என்னதான் செய்திருக்கிறார் என்ற கேள்விகளை பல தரப்பினர் முன்வைத்தனர்.

அதேபோல, திமுக சீனியர்கள் உதயநிதியின் வருகையால் அப்செட் ஆகிவிட்டனர் என்றும், யாரையுமே கலந்தாலோசிக்காமல் அவர் இஷ்டத்துக்கு பேட்டிகளை தந்து கொண்டிருப்பதாகவும் சொல்லப்பட்டது.

எங்கே போனாலும் கூட்டம் வருகிறது.. ராக்கெட் வேகத்தில் உயரும் உதயநிதி இமேஜ்.. திமுகவின் பக்கா பிளான்!

 வைரல்

வைரல்

ஆனால் எதெல்லாம் அன்று மைனஸாக சொல்லப்பட்டதோ, அவ்வளவையும் இன்று பிளஸ் ஆக்கி கொண்டு இருக்கிறார் உதயநிதி ஸ்டாலின்! அந்த வகையில் 2 விஷயங்களை கூர்ந்து இழுத்து வருகிறார்.. ஒன்று, உதயநிதிக்கான கூட்டம் பிரம்மிக்க வைக்கிறது.

கைது

கைது

மாணவர்களுக்கான இட ஒதுக்கீடு கேட்டு நடத்திய போராட்டமாகட்டும், கோவையில் இளைஞர் அணியினரை போலீசார் கைது செய்ததை கண்டித்து நடத்திய போராட்டம் ஆகட்டும் அதிமுகவை திரும்பி பார்க்க வைத்தது என்றே சொல்லலாம்.. இது போதாமல், இப்போது தேர்தலுக்கான பிரச்சாரத்தை மேற்கொண்டு வருகிறார்.. உதயநிதி எங்கு செல்கிறாரோ அங்கெல்லாம் கூட்டம் கூடுகிறது.. இது யாரும் எதிர்பாராத ஒன்று.

 நடுராத்திரி

நடுராத்திரி

ஒரு நடிகருக்காக கூடும் கூட்டம் போல இது தெரியவில்லை.. நடுராத்திரி ஒரு ஊருக்கு பிரச்சாரம் செய்ய போனாலும், அங்கேயும் தொண்டர்கள் குவிந்து விடுகிறார்களாம்.. உதயநிதியை போலவே மற்றொரு பக்கம் பாஜகவினர் வேல் யாத்திரை நடத்தி வருகின்றனர்.. அந்த யாத்திரைக்கும்தான் கூட்டம் வருகிறது.. ஆனால் அதை பல மடங்கு அதிகமாக திமுகவுக்கு கூடுவதால் கட்சியினர் மத்தியில் பெரும் உற்சாகம் நம்பிக்கை தழைத்தோங்கியுள்ளது. அதை விட முக்கியமாக உதயநிதி நடு ராத்திரி வரை பேசினாலும், அந்த கூட்டம் கலையாமல் காத்திருந்து அவர் பேசுவதை கேட்டு விட்டே செல்கிறது.

 போலீஸ்

போலீஸ்

கொரோனா கால கட்டுப்பாடு அமலில் உள்ளபோதே இப்படி என்றால் கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டால் இதை விட பலமடங்கு அதிக கூட்டம் வரலாம்.. மேலும் போலீஸார் கூட, கூட்டம் கூடுவதாக கூறியதாக உதயநிதி சொல்லியிருப்பதால் காவல்துறையினரும் கூட திமுக வுக்கு சாதகமாக மாரி வருகிறார்களா என்ற கேள்வியுிம் எழுகிறது. இதுவும் திமுக தரப்பை குஷியில் ஆழ்த்தியுள்ளது.

 கைது நடவடிக்கை

கைது நடவடிக்கை

எல்.முருகனும், உதயநிதியும் ஆளுக்கொரு பக்கம் தினமும் கைதாகி வந்தாலும், உதயநிதியின் எழுச்சியானது அபரிமிதமாகவே தென்படுகிறது.. இதற்கு காரணம், ஒவ்வொரு முறை கைதாகும்போது, அதிமுக, பாஜகவை உண்டு இல்லை என்று ஆக்கி பேட்டி தந்துவிடுகிறார் உதயநிதி.. அமித்ஷாவை ஏன் கைது செய்யல? என்னை மட்டும் ஏன் கைது செய்கிறீர்கள் என்ற கேள்விக்கு இதுவரை பதில் எந்த பக்கமிருந்தும் வரவில்லை.

 விபூதி விவகாரம்

விபூதி விவகாரம்

இதுபோக, ஸ்டாலினின் தேவர் ஜெயந்தி விபூதி விவகாரம் உள்ளிட்டவைகளை, வேறு ரூட்டில் சென்று அதை தவிடுபொடியாக்கி, இந்துக்களின் ஆதரவையும் பெற்று வருகிறார்.. போற போக்கை பார்த்தால், 'முருகனா & உதயநிதியா?' என்ற ரேஞ்ச் உருவாகி கொண்டிருக்கிறதாகவே தெரிகிறது.

 
 
 
English summary
DMK Udhanidhi Stalins Compaign all over Tamilnadu
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X