• search
சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  

"இளைய சூரியன்".. உதயநிதியின் இன்னொரு நச்.. எதிர்க்கட்சிகளை வாயடைக்க செய்த "சந்திப்பு".. செம்ம..!

Google Oneindia Tamil News

சென்னை: மறைந்த அனிதாவின் குடும்பத்தினரை, உதயநிதி ஸ்டாலின் சந்தித்து பேசிய விவகாரம், மிக முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்பட்டு வருகிறது.

உதயநிதிக்கும், அனிதா குடும்பத்துக்கும் என்ன சம்பந்தம் என்று அவ்வளவு சுலபமாக கேட்டுவிட முடியாது.. கடந்த எம்பி தேர்தலின்போதும்சரி, இந்த முறை சட்டமன்ற தேர்தலின்போதும் சரி, அனிதாவின் பெயரை தமிழகமெங்கும் உச்சரித்து கொண்டே வந்தவர்தான் உதயநிதி.

உலகப் புகழ் பெற்ற 100 மருத்துவக் கல்லூரிகள்.. 6 இந்தியாவில்.. அதில் 2 தமிழ்நாட்டில்..1 புதுவையில்.. மாஸ்! உலகப் புகழ் பெற்ற 100 மருத்துவக் கல்லூரிகள்.. 6 இந்தியாவில்.. அதில் 2 தமிழ்நாட்டில்..1 புதுவையில்.. மாஸ்!

"அனிதாவை ஞாபகம் இருக்கா? அனிதாவை கொன்றவர்கள்தான் மோடி, இபிஎஸ், ஓபிஎஸ்.. இவங்களுக்கு தண்டனை வேண்டுமா? வேண்டாமா?" என்று பகிரங்கமாகவே பொதுமக்களிடம் கேள்விகளை எழுப்பி வந்தனர்.

 அனிதா

அனிதா

அதுமட்டுமல்ல, டாக்டராக வேண்டிய அனிதா மரணமடைந்து விட்டார்... அதற்கு காரணமாக இருந்த எடப்பாடி பழனிசாமிக்கு டாக்டர் பட்டமா? என்றும் ஓபனாக கேள்வி எழுப்பியவர். அதுமட்டுமல்ல, அரியலூர் எப்போது சென்றாலும் சரி, செந்துறையை அடுத்த குழுமூரில் அனிதாவின் நினைவு நூலகத்திற்கு சென்றுவிடுவார்.. அங்கு அவரது சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்துவார்..

 புத்தகங்கள்

புத்தகங்கள்

மேலும், தனக்கு அன்பளிப்பாக வழங்கப்பட்ட புத்தகங்களை அனிதா நினைவு நூலகத்துக்கு தினசரி வரும் மாணவர்களுக்கு பரிசாக வழங்குவார்.. அந்த நூலகத்திற்கு அருகில் ஒருமுறை தென்னங்கற்றையும் நட்டுவிட்டு சென்றார்... பிறகு அனிதாவின் வீட்டுக்கும் சென்றதை மறக்க முடியாது.. அதைவிட முக்கியம், அனிதாவின் வீடு பற்றி இவர் ட்வீட் ஒன்றும் அந்த சமயம் போட்டிருந்தார்.

வீடு

வீடு


அதில், "தலையைத் தட்டும் தாழ்வான ஓட்டு வீடு.. இன்றும் அப்படியே உள்ளது அனிதாவின் வீடு... அதன் அருகிலேயே நேர்த்தியாக கட்டப்பட்டுள்ள அவரின் பெயரிலான நூலகம். அனிதாவின் லட்சியம்தான் நிறைவேறவில்லை. பல அனிதாக்களை உருவாக்கும் அவரின் குடும்பத்தாரின் லட்சியம் நிறைவேறட்டும் .நானும் துணை நிற்பேன்'' என்று உணர்வுபெருக்குடன் உதயநிதி சொன்னதை மறக்க முடியாது.

 உதயநிதி

உதயநிதி

இந்நிலையில்தான், அனிதாவின் சகோதரர் உதயநிதியை தனது குடும்பத்துடன் சந்தித்துள்ளார்.. அவர்களுடன் பேசியுள்ளார்.. போட்டோ எடுத்துக் கொண்டுள்ளார்.. அனிதாவின் சகோதரர் குழந்தையை, உதயநிதி தூக்கி கொஞ்சி உள்ளார்.. இந்த போட்டோவெல்லாம் தன்னுடைய ட்வீட்டரில் ஷேர் செய்துள்ளார் உதயநிதி..

 நூலகம்

நூலகம்

அத்துடன், 'நீட்'டால் உயிரிழந்த தங்கை அனிதாவின் சகோதரர் மணிரத்னம் அவர்கள் குடும்பத்தாருடன் இன்று என்னை சந்தித்தார். அவர்களது சொந்தஊரில் தங்கை அனிதாவின் பெயரில் இயங்கி வரும் நூலகத்தை திறன் மேம்பாட்டு மையமாக தரம்உயர்த்த கோரினார். அப்பணியை இணைந்து செய்வோம் என உறுதியளித்தேன். அன்பும் நன்றியும்" என்று பதிவிட்டுள்ளார்.

 சலசலப்பு

சலசலப்பு

கடந்த சில தினங்களாகவே நீட் விவகாரம் தமிழகத்தில் தலைதூக்கி உள்ளது.. நீட் தேர்வை ஆட்சிக்கு வந்ததும் ரத்து செய்துவிடுவோம் என்று சொன்ன திமுக, அதிமுக அரசால் கொண்டுவரப்பட்ட நீட் பயிற்சி மையங்களை தொடர்ந்து நடத்த போவது தற்போது விவாதமாக உருவெடுத்தும் வருகிறது.. அதிமுக, பாமக போன்ற கட்சிகள் இதை சுட்டிக்காட்டி வருகின்றன.. அதிலும் பாஜக இந்த விஷயத்தை லேசில் விடுவதாக இல்லை.. தொடர்ந்து திமுகவை சாடி வருகிறது.. திமுக என்றில்லை, நீட் தேர்வுக்கு ஆதரவாக பேசும், சூர்யாவை கூட விட்டு வைக்கவில்லை...

 நீட் விவகாரம்

நீட் விவகாரம்

2 நாட்களுக்கு முன்புகூட, அமைச்சர் அன்பில் மகேஷ் ஒரு பேட்டி தந்திருந்தார்.. அதில், தமிழகத்தில் எந்த காலகட்டத்திலும் நீட் தேர்வை நுழைய விடமாட்டோம். வருகின்ற பட்ஜெட் கூட்டத்தொடரின் போது முதல்வர், நீட் குறித்து முக்கிய முடிவுகளை அறிவிப்பார்" என்று நம்பிக்கை வார்த்தைகளை சொல்லி இருந்தார்.. இப்படிப்பட்ட சூழலில்தான், அனிதாவின் அண்ணனை உதயநிதி சந்தித்தது மிக முக்கியத்துவம் வாய்ந்த ஒன்றாக கருதப்படுகிறது.. நீட் குறித்து திமுகவை விமர்சித்தவர்களும் இப்போது இதை பார்த்து வாயடைத்து போயுள்ளனர்.. பார்ப்போம்..!

English summary
DMK Udhayanidhi Stalin met NEET Anithas brother
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X