சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

திமுக- விடுதலை சிறுத்தைகள் கூட்டணியில் விரிசல்..?

By
Google Oneindia Tamil News

Recommended Video

    DMK upset on vck | திமுக- விடுதலை சிறுத்தைகள் கூட்டணியில் விரிசலா?யார் காரணம்?- வீடியோ

    சென்னை: திமுக விடுதலைச் சிறுத்தைகள் கூட்டணியில் விரிசல் ஏற்பட்டுள்ளதாக பேச்சு அடிபடுகிறது.

    மக்களைவைத் தேர்தலில் திமுக கூட்டணியில் இருந்த விடுதலை சிறுத்தைகள் கட்சி 2 தொகுதிகளில் போட்டியிட்டு வெற்றி பெற்றது. தேர்தல் முடிவு வெளியாகி சுமார் 2 மாதங்கள் ஆகும் நிலையில், திமுக விடுதலை சிறுத்தைகள் கட்சி இடையேயான உறவில் விரிசல் ஏற்பட்டுள்ளது.

    dmk upset over vck for its stand on nia issue

    இதற்கு பல காரணங்கள் கூறப்பட்டாலும், குறிப்பிட்டு கூறப்படுவது, ஆளுந் ஷாநவாஸ் பேச்சு தான். விடுதலை சிறுத்தைகள் கட்சித் துணை பொதுச்செயலாளர் ஆளூர் ஷாநவாஸ் கடந்த வாரம் யூ டியூப் சேனல் ஒன்றுக்கு அளித்த பேட்டியில் திமுகவை விமர்சிக்கும் தொனியில் வெளிப்படையாக பேசியிருந்தார்.

    என்.ஐ.ஏ.மசோதா விவகாரத்தில் திமுகவின் செயல்பாடு ஏற்கத்தக்கதல்ல என்பதுடன் அதுபற்றி விமர்சிக்காமல் கள்ளமவுனம் காக்க முடியாது என பேசியிருந்தார். இத்தோடு விட்டிருந்தால் பரவாயில்லை, என்.ஐ.ஏ.மசோதாவுக்கு திமுக ஆதரவளித்ததால் அந்தக் கட்சி காலத்திடம் பதில் சொல்ல வேண்டும் என பேசினார்.

    உயிரை காப்பாத்தீட்டீங்க.. முதல்வர் பழனிச்சாமியை நெகிழ வைத்த இதய அறுவை சிகிச்சை செய்த குழந்தைகள் உயிரை காப்பாத்தீட்டீங்க.. முதல்வர் பழனிச்சாமியை நெகிழ வைத்த இதய அறுவை சிகிச்சை செய்த குழந்தைகள்

    அப்படியென்றால் திமுக தோற்கும் எனக் கூறுகிறாரா இவர், யாருடைய கருத்தை ஷா நவாஸ் தெரிவித்திருக்கிறார் என வி.சி.க.தலைமையிடம் திமுக கேள்வி எழுப்பியதாம்.

    ஷா நவாஸ் பேச்சு, திமுகவுக்கு எதிராக இஸ்லாமியர்களை தூண்டி விடும் வகையில் அமைந்துவிட்டதால் திருமா மீது ஸ்டாலின் அதிருப்தியில் உள்ளாராம். இந்தக்காலத்தில் யாருக்கு என்ன உதவி செய்தாலும் நன்றி என்பது இல்லையே என்ற குரல் அறிவாலய வட்டாரத்தில் ஒலிக்கிறது. ஆனால் என்ஐஏ திருத்த மசோதாவுக்கு ஆதரவாக திமுக வாக்களித்த விவகாரத்தில் இஸ்லாமியர்கள் மட்டுமல்லாமல் பொதுவாகவே திமுக மீது அதிருப்தி நிலவுகிறது என்பதையும் மறுக்க முடியாது.

    English summary
    DMK is not happy over the speech of Alur Shahnawaz on NIA bill issue.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X