சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

ஒரே ரூட்டில் திமுக - பாஜக.. திடீரென வெடித்து கிளம்பும் "அந்த" விவகாரம்.. பலன் தருமா.. பரபர அரசியல்

திமுகவும் பாஜகவும் கிரானைட் குவாரி தொழிலாளர்களின் ஓட்டுக்களை குறி வைத்துள்ளனராம்

Google Oneindia Tamil News

சென்னை: ஒரே ரூட்டை திமுகவும் - பாஜகவும் பிடித்திருக்கிறார்கள் என்றால் நம்ப முடிகிறதா.. அப்படித்தான் ஒரு நம்பத்தகாத செய்தி ஒன்று பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.

தமிழகத்தையே அன்று அதிர வைத்தது கிரானைட் கனிமவள கொள்ளை விவகாரம்.. இதனால, 2012 முதல், அந்த குவாரிகள் செயல்பட, மத்திய அரசு தடை விதித்தது.

DMK urges to open non controversial granite quarries

2014ல், சென்னை ஐகோர்ட் இதில் தலையிட்டு, கிரானைட் கொள்ளை குறித்து விசாரிக்க சகாயம் தலைமையிலான குழுவை அமைத்து விசாரணை நடத்தியது.

ஒரு வருடம் நடந்த விசாரணைக்கு பிறகு, இது சம்பந்தமாக அறிக்கையும் தாக்கல் செய்யப்பட்டது. சட்டவிரோத கிரானைட் கொள்ளை காரணமாக தமிழக அரசுக்கு ரூ.1.11 லட்சம் கோடி இழப்பு என்றும், இதற்கு திமுக, திமுகவுக்கும் தொடர்பு இருப்பதாகவும் பரபரப்பாக பேசப்பட்டது.

இப்போது இந்த கிரானைட் குவாரி விவகாரம்தான் வேறு ரூபத்தில் மறுபடியும் சூடுபிடிக்க ஆரம்பித்துள்ளது.. கிரானைட் குவாரியை திறக்க வேண்டும் என்று பல தரப்பினர் குரல் கொடுக்க ஆரம்பித்துள்ளனர்.. இதை முதலில் ஆரம்பித்துள்ளது திமுக என்று தெரிகிறது..

அதாவது, வழக்கில் சிக்காத, மற்ற கிரானைட் குவாரிகளை செயல்பட அனுமதிக்க வேண்டும் என்று திமுக தரப்பு அன்று கோரிக்கை விடுத்திருந்தது.. அதுபோலவே ஒரு கோரிக்கையை இப்போது பாஜகவும் விடுக்க போகிறதாம்.. இதற்கு காரணம் எல்லாமே பாஜகவை தமிழகத்தில் மலர வைக்கதானாம்.

கூடிய சீக்கிரம் தேர்தல் வர போகிறது.. இந்த குவாரியால் வேலையிழந்த தொழிலாளர்கள் சுமார் 40 ஆயிரக்கும் பேருக்கு மேல் இருக்கிறார்கள்.. இவர்கள் அனைவருமே குவாரி செயல்படாததால், வேலையும் இன்றி உள்ளனர்.

கோட்டையில் ஈபிஎஸ் அணி... முதல்வருடன் 6 அமைச்சர்கள் தீவிர ஆலோசனை.. 'உளவாளி'கள் களையெடுப்பா? கோட்டையில் ஈபிஎஸ் அணி... முதல்வருடன் 6 அமைச்சர்கள் தீவிர ஆலோசனை.. 'உளவாளி'கள் களையெடுப்பா?

அதனால், இந்த நேரத்தில், இது சம்பந்தமாக போராட்டம் நடத்தினால், பாதிப்பில் உள்ள 40 ஆயிரம் தொழிலாளர்களின் ஓட்டுகளும் தங்களுக்கு அப்படியே லட்டு மாதிரி விழும் என்று பாஜக தரப்பும் கணக்கு போடுகிறதாம்.. இதெல்லாம் எந்த அளவுக்கு உண்மை என்று தெரியவில்லை.. ஒருவேளை உண்மையாகும் இருக்கும் பட்சத்தில், இது எந்த அளவுக்கு ஒர்க் அவுட் ஆகும் என்றும் தெரியவில்லை.. ஆனால், பாஜகவும் - திமுகவும் ஒரே ரூட்டை பிடித்துள்ளதுதான் விசேஷமாக பேசப்பட்டு வருகிறது

English summary
DMK urges to open non controversial granite quarries
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X