• search
சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  

வெற்றிமுகத்தில் திமுக... உற்சாகம் கரைபுரளும் அண்ணா அறிவாலயம்.. இனிப்புகள் பரிமாறி மகிழ்ச்சி..!

|

சென்னை: தமிழக சட்டமன்றத் தேர்தல் முடிவுகள் வெளியாகி வரும் சூழலில், திமுக வெற்றிமுகத்தில் உள்ளதால் அக்கட்சியை சேர்ந்த நிர்வாகிகளும், தொண்டர்களும் இனிப்புகள் பரிமாறி மகிழ்ச்சியை வெளிப்படுத்தி வருகின்றனர்.

    தொடர்ந்து முன்னிலை வகிக்கும் திமுக.. கொண்டாட்டத்தில் தொண்டர்கள்

    10 ஆண்டுகளுக்கு பிறகு தமிழகத்தில் திமுக ஆட்சி அமைப்பதற்கான சாதகமான சூழல் உருவாகியுள்ளதால் அக்கட்சியை சேர்ந்த தொண்டர்கள் மத்தியில் உற்சாகம் கரைபுரளத் தொடங்கியுள்ளது.

     முதல் பக்க விளம்பரம்.. மூன்றாவது இடத்தில் நாம் தமிழர்.. அதிமுக செம போட்டி கொடுக்கும் பின்னணி இதுதான் முதல் பக்க விளம்பரம்.. மூன்றாவது இடத்தில் நாம் தமிழர்.. அதிமுக செம போட்டி கொடுக்கும் பின்னணி இதுதான்

    வீதிகள் வெறிச்சோடட்டும் உள்ளங்கள் மகிழ்ச்சியால் பொங்கட்டும் என கடந்த 2 நாட்களுக்கு முன்னர் ஸ்டாலின் அறிக்கை விடுத்தும் கூட, ஆர்வமிகுதியில் அதனை தொண்டர்கள் கேட்டதாக தெரியவில்லை.

    தேர்தல் முடிவுகள்

    தேர்தல் முடிவுகள்

    பரபரப்பான அரசியல் சூழலுக்கு மத்தியில் தமிழக சட்டமன்றத் தேர்தல் முடிவுகள் வெளியாகி வருகின்றன. ஆட்சி அமைப்பதற்கு தேவையான எண்ணிக்கையில் திமுக தொடர்ந்து முன்னிலை வகித்து வருவதால் அக்கட்சியின் தலைமை அலுவலகமான அண்ணா அறிவாலயத்துக்கு தொண்டர்கள் குவியத் தொடங்கியுள்ளனர். ஸ்டாலினையும், கருணாநிதியையும் புகழ்ந்து வாழ்த்து முழக்கங்கள் எழுப்பிய அவர்கள் ஒருவருக்கு ஒருவர் இனிப்புகள் பரிமாறிக் கொண்டனர்.

     திமுக ஆட்சி

    திமுக ஆட்சி

    10 ஆண்டுகளாக எதிர்க்கட்சி வரிசையிலேயே இருந்த திமுக இப்போது ஆளுங்கட்சியாக மாறவுள்ளது. இதனால் இதனை கொண்டாடி தீர்க்கத் தொடங்கியுள்ளனர் திமுகவினர். சென்னையை போல் தமிழகத்தின் மற்ற இடங்களிலும் பட்டாசுகள் வெடித்து திமுகவினர் தங்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்தி வருகின்றனர்.

    வேண்டுகோள்

    வேண்டுகோள்

    இல்லங்களிலேயே இருந்து தேர்தல் முடிவுகளை ஊடகங்களின் மூலம் தெரிந்து கொள்வதும், வெற்றியடைந்த செய்தியைக் கேட்டு நம் இல்லத்திலேயே மகிழ்வதும்தான் பொருத்தமான போக்கு என இரண்டு நாட்களுக்கு முன்பு ஸ்டாலின் அறிக்கை மூலம் வேண்டுகோள் விடுத்திருந்தார். ஆனாலும் திமுகவுக்கு வெற்றிமுகம் என்ற செய்தி தொண்டர்களை நிலை கொள்ளச் செய்யவில்லை. தான் ஆடாவிட்டாலும் தன் சதை ஆடும் என்ற பழமொழிக்கு ஏற்ப, திமுக முன்னிலை என்ற செய்தி அவர்களை கொண்டாட வைத்துள்ளது.

     அண்ணா அறிவாலயம்

    அண்ணா அறிவாலயம்

    அண்ணா அறிவாலயத்திற்கு வரும் தொண்டர்களின் எண்ணிக்கை அதிகரித்ததால் அனைத்து நுழைவு வாயில்களும் பூட்டப்பட்டன. தேர்தல் ஆணையத்தின் அறிவுறுத்தலை சுட்டிக்காட்டி தொண்டர்களை திருப்பி அனுப்பும் பணிகளில் அண்ணா அறிவாலய ஊழியர்கள் ஈடுபட்டனர்.

    English summary
    DMK volunteers are happy and to exchange sweets
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X