• search
சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  

1.. 2.. 3.. ஜூட்.. நேரடியாக மோதும் திமுக அதிமுக.. ஷாக்கா இருக்கே.. இதெல்லாம் திட்டம் போட்டு நடந்ததா?

|

சென்னை: இதுக்கு முன்னாடி தமிழக அரசியலில் இவ்வளவு பெரிய போட்டியெல்லாம் நிலவியதே இல்லை... அந்த அளவிற்கு இந்த முறை திமுகவிற்கும் அதிமுகவிற்கும் இடையே மிக கடுமையான போட்டி களத்தில் நடக்க போகிறது. இரண்டு கட்சிகளும் மிக அதிக தொகுதிகளில் இந்த முறை நேருக்கு நேர் சந்திக்க உள்ளது!

மீண்டும் ஆட்சியில் அமர வேண்டிய கட்டாயத்தில் அதிமுகவும்.. வென்றே ஆக வேண்டும் என்ற இக்கட்டான சூழ்நிலையில் திமுகவும் உள்ளது. இரண்டு கட்சிக்கும் இருக்கும் இந்த கட்டாயம் காரணமாகவே தற்போது திமுக, அதிமுக இரண்டும் தங்கள் தரப்பிற்கு மிகப்பெரிய கூட்டணியை அமைத்து தேர்தலை எதிர்கொள்ள இருக்கிறது .

இதன் காரணமாக சட்டசபை தேர்தல் வரலாற்றில் இதுவரை இல்லாத அளவிற்கு மிகப்பெரிய போட்டியை தமிழகம் இந்த முறை சந்திக்க உள்ளது.

எத்தனை

எத்தனை

பொதுவாக கூட்டணி கட்சிகளுக்கு அதிக இடங்களை ஒதுக்கும் திமுக இந்த முறை கராறாகவே இருந்தது. நிறைய இடம் எல்லாம் கொடுக்க முடியாது.. எங்களுக்கு தனி மெஜாரிட்டி வேண்டும் என்று கூட்டணி கட்சிகளிடம் திமுக மிகவும் கண்டிப்பு காட்டியது. இதனால் கூட்டணி கட்சிகளுக்கு போக திமுக 173 இடங்களை தனக்காக வைத்துக்கொண்டது. காங்கிரசுக்கு திமுக வெறும் 25 இடம்தான் கொடுத்தது .

கூட்டணி போக உள்ள இடங்கள்

கூட்டணி போக உள்ள இடங்கள்

இதில் 187 இடங்களில் திமுகவின் உதய சூரியன் சின்னம் போட்டியிடுகிறது. இந்த பக்கம் திமுக இவ்வளவு கறாராக இருந்தால் இன்னொரு பக்கம் அதிமுகவும் கூட்டணி கட்சிகளிடம் கறார் காட்டியது. பாஜக போன்று தேசிய அளவில் பெரிதாக இருக்கும் கட்சிகளுக்கு அதிமுக அதிக இடங்களை கொடுக்கவில்லை. பாமக 23, பாஜக 20 என்று அதிமுக சுருக்கிக்கொண்டது.

தேமுதிக

தேமுதிக

அதிமுகவின் கண்டிப்பு காரணமாக தேமுதிக கூட்டணியில் இருந்தே விலகிவிட்டது. அதிமுக மொத்தம் 178 தொகுதியில் போட்டியிடுகிறது. இன்னும் 10 இடங்கள் குறித்த முடிவு வெளியாகவில்லை. தமிழ் மாநில காங்கிரசும் கூட அதிமுகவின் சின்னத்திலேயே போட்டியிடுகிறது.

போட்டி

போட்டி

இந்த நிலையில் இந்த முறை திமுகவிற்கும் அதிமுகவிற்கும் இடையே மிக கடுமையான போட்டி களத்தில் நடக்க போகிறது. இரண்டு கட்சிகளும் மிக அதிக தொகுதிகளில் இந்த முறை நேருக்கு நேர் சந்திக்க உள்ளது. இதுவரை எந்த தேர்தலிலும் இல்லாத அளவிற்கு அதிக இடங்களில் எதிர் எதிராக சந்திக்க உள்ளன.

கொங்கு

கொங்கு

கொங்கு மாவட்டங்கள், சென்னையில் இருக்கும் தொகுதிகளில் இரண்டு கட்சிகளும் அதிக தொகுதிகளில் மோதுகிறது. இந்த முறை கொங்கு மாவட்டங்களை திமுக குறி வைத்து உள்ளது. மதுரையிலும் இரண்டு கட்சிகளும் மிக அதிக அளவில் போட்டி போடுகிறது. முக்கிய தொகுதிகளில் எல்லாம் திமுக vs அதிமுக போட்டிதான் நிலவுகிறது.

தென் மாவட்டங்கள்

தென் மாவட்டங்கள்

தென் மாவட்டங்களில் இரண்டு கட்சிக்கும் இடையில் பெரிய போட்டி இல்லை. மொத்தமாக 123 தொகுதிகளில் இரண்டும் மோத உள்ளன. இரண்டு கட்சியும் திட்டமிட்டு இந்த முறை அதிக தொகுதிகளில் மோதுகிறது. இந்த 123 தொகுதிகள்தான் தேர்தல் முடிவுகளை தீர்மானிக்கும். இதனால் அதிமுக, திமுகவில் உண்மையில் எந்த கட்சிக்கு கூட்டணி தாண்டி மக்கள் ஆதரவு இருக்கிறதோ அந்த கட்சிதான் வெல்ல அதிக வாய்ப்புள்ளது.

போட்டியிடும் தொகுதிகளின் விவரம்

போட்டியிடும் தொகுதிகளின் விவரம்

திமுக அதிமுக போட்டியிடும் 123 தொகுதிகளின் மொத்த பட்டியல் இதோ!

திருத்தணி
திருவள்ளூர்
ஆவடி
மதுரவாயல்
அம்பத்தூர்
மாதவரம்
திருவொற்றியூர்
ராதாகிருஷ்ணன் நகர்
கொளத்தூர்
அண்ணா நகர்

விருகம்பாக்கம்
சைதாப்பேட்டை
தியாகராய நகர்
மயிலாப்பூர்
சோழிங்கநல்லூர்

ராயபுரம் அமைச்சர்
தாம்பரம்
செங்கல்பட்டு
ஆலந்தூர்
பல்லாவரம்

காட்பாடி
வேலூர்
அணைக்கட்டு
ஜோலார்பேட்டை
ஆம்பூர்

பர்கூர்
கிருஷ்ணகிரி
வேப்பனஹள்ளி
ஓசூர்
பாலக்கோடு

பாப்பிரெட்டிப்பட்டி
செங்கம்
கலசப்பாக்கம்
போளூர்
ஆரணி

செய்யாறு
திண்டிவனம்
வானூர்- சக்ரபாணி
விக்கிரவாண்டி
உளுந்தூர்ப்பேட்டை

ரிஷிவந்தியம்
கங்கவல்லி
ஆத்தூர்
ஏற்காடு
எடப்பாடி

சங்ககிரி
சேலம்
சேலம்
வீரபாண்டி
ராசிபுரம்ஜா

சேந்தமங்கலம்
நாமக்கல்
பரமத்திவேலூர்
குமாரபாளையம்
ஈரோடு மேற்கு

பெருந்துறை- ஜெயக்குமார்
பவானி
அந்தியூர்
திருப்பூர் தெற்கு
கோபிச்செட்டிப்பாளையம்

குன்னூர்
கூடலூர்
மேட்டுப்பாளையம்
கவுண்டம்பாளையம்
கோயம்புத்தூர் வடக்கு

தொண்டாமுத்தூர்
சிங்காநல்லூர்
கிணத்துக்கடவு
பொள்ளாச்சி
பழநி

ஒட்டன்சத்திரம்
நத்தம்
வேடசந்தூர்
கரூர்
கிருஷ்ணராயபுரம்
குளித்தலை

திருவரங்கம்
திருச்சிராப்பள்ளி மேற்கு
திருச்சிராப்பள்ளி கிழக்கு
திருவெறும்பூர்
லால்குடி
மண்ணச்சநல்லூர்

முசிறி
துறையூர்
குன்னம்
கடலூர்
குறிஞ்சிப்பாடி

புவனகிரி
சீர்காழி
மன்னார்குடி
திருவாரூர்
வேதாரண்யம்

பூம்புகார்
நன்னிலம்
திருவிடைமருதூர்
ஒரத்தநாடு
பேராவூரணி

விராலிமலை
புதுக்கோட்டை
திருமயம்
ஆலங்குடி
திருப்பத்தூர்

மானாமதுரை
மதுரை கிழக்கு
சோழவந்தான்
மதுரை தெற்கு
மதுரை மேற்கு

திருமங்கலம்
ஆண்டிப்பட்டி
பெரியகுளம்
கம்பம்
ராஜபாளையம்

அருப்புக்கோட்டை
பரமக்குடி
முதுகுளத்தூர்
விளாத்திகுளம்
திருச்செந்தூர்

ஓட்டப்பிடாரம்
சங்கரன்கோவில்
ஆலங்குளம்
அம்பாசமுத்திரம்
பாளையங்கோட்டை

ராதாபுரம்
கன்னியாகுமரி
போடி

English summary
DMK vs AIADMK: Both major parties will contest against each other in 123 seats in Tamilnadu.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X