சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

முதல் ரவுண்டில் கறார்.. திமுக மீட்டிங் முடிந்த கையோடு கேஎஸ் அழகிரி சொன்ன அந்த விஷயம்.. என்ன நடந்தது?

Google Oneindia Tamil News

சென்னை: திமுக காங்கிரஸ் இடையே நடந்த கூட்டணி பேச்சுவார்த்தையில் முதல் சுற்றில் என்ன பேசப்பட்டது என்பது குறித்து தகவல்கள் வெளியாகி உள்ளன. இந்த மீட்டிங்கிற்கு பின் காங்கிரஸ் நிர்வாகிகளுடன் தமிழக காங்கிரஸ் தலைவர் கே. எஸ் அழகிரி என்ன பேசினார் என்பது குறித்த விவரங்கள் வெளியாகி உள்ளன.

திமுக காங்கிரஸ் இடையிலான தொகுதி பங்கீட்டு பேச்சுவார்த்தை இன்னும் முடிவிற்கு வரவில்லை. கிட்டத்தட்ட ஒருவாரமாக அதிகாரபூர்வமாகவும், அதிகாரபூர்வமற்ற முறையிலும் மாறி மாறி கூட்டணி குறித்து பேச்சுவார்த்தைகள் நடந்து வருகின்றன.

ஆனால் இரண்டு கட்சிகளும் இது வரை எந்த விதமான உடன்படிக்கையும் எட்டவில்லை. காங்கிரஸ் வைக்கும் கோரிக்கை எதையும் திமுக ஏற்கவில்லை. இதனால் தொடர்ந்து பேச்சுவார்த்தையில் இழுபறி நீடித்து வருகிறது.

காங்கிரஸ்

காங்கிரஸ்

காங்கிரசின் கோரிக்கையின் படி திமுகவிடம் 40 தொகுதிகள் வரை முதலில் கேட்டது. ஆனால் திமுக 20 தொகுதிகள் மட்டுமே கொடுப்பதாக கூறியது. இதையடுத்து அடுத்தடுத்த பேச்சுவார்த்தைகளில் இறங்கி வந்த காங்கிரஸ் தற்போது 30 வரை கொடுத்தாலே போதும் என்ற நிலைக்கு வந்துவிட்டது. திமுகவும் இதில் கொஞ்சம்தான் இறங்கி வந்துள்ளது.

திமுக

திமுக

24 தொகுதிகள் மட்டும்தான் கொடுப்போம். அதற்கு மேல் கொடுக்க முடியாது என்பதில் திமுக இறங்கி வந்து இருக்கிறது. இந்த நிலையில் திமுக காங்கிரஸ் இடையே நடந்த கூட்டணி பேச்சுவார்த்தையில் முதல் சுற்றில் என்ன பேசப்பட்டது என்பது குறித்து தகவல்கள் வெளியாகி உள்ளது. தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ் அழகிரி, காங்கிரஸ் மேலிட உறுப்பினர்கள் கலந்து கொண்ட இந்த மீட்டிங்கில் திமுக மிகவும் கறாராக பேசி இருக்கிறது.

20 தொகுதிகள்

20 தொகுதிகள்

முதலில் 20 தொகுதிகள் கொடுக்க முடியாது என்று கூறும் அளவிற்கு மிகவும் கண்டிப்புடன் பேசி இருக்கிறது. திமுகவின் அணுகுமுறை மிகவும் கண்டிப்புடன் இருந்துள்ளது. காங்கிரஸ் கட்சி இதற்கு முன் பெற்ற வெற்றி, வாக்கு சதவிகிதம் எல்லாம் குறித்து திமுக பேசி உள்ளது. காங்கிரஸ் கட்சிக்கு அதிக இடம் கொடுப்பதில் விருப்பமே இல்லை என்பதை போல திமுக பேசி இருக்கிறது.

அழகிரி

அழகிரி

இந்த முதல் கட்ட ஆலோசனைக்கு பின் வெளியே வந்த கே. எஸ் அழகிரி மீட்டிங்கில் என்ன நடந்தது என்று சில மூத்த நிர்வாகிகளிடம் பேசி இருக்கிறார். பேச்சுவார்த்தையின் போது என்ன நடந்தது என்பது குறித்து சக
நிர்வாகிகளிடம் விளக்கி இருக்கிறார். திமுக எப்படி உறுதியாக இருந்தது, கறாராக இருந்தது என்பது குறித்து இவர்கள் விவாதம் செய்துள்ளனர். இதற்கு பின்பே அடுத்தடுத்து இரண்டு காங்கிரஸ் கட்சி மீட்டிங்குகள் நடந்தன.

மீட்டிங் நடந்தது

மீட்டிங் நடந்தது

இந்த மீட்டிங்கில்தான் திமுக கூட்டணி குறித்து காங்கிரஸ் நிர்வாகிகள் சென்னையில் ஆலோசனை செய்துள்ளனர். இதற்கு பின் காங்கிரஸ் மேலிட உறுப்பினர்கள் தொகுதி பங்கீடு தொடர்பான திமுக மீட்டிங் எதிலும் கலந்து கொள்ள ஆர்வம் காட்டவில்லை என்று கூறப்படுகிறது. தேசிய தலைவர்களும் இதில் பெரிய அளவில் தலையிட்டுக்கொள்ளவில்லை.

முடிவு

முடிவு

திமுகவும் இன்னும் தனது முடிவில் இருந்து இறங்கி வரவில்லை. அதிகபட்சம் 27 வரை திமுகவை சம்மதிக்க வைக்கலாம் என்று காங்கிரஸ் நம்புகிறது. ஆனால் அதற்கு மேல் திமுக இறங்கி வராது. இதனால் காங்கிரஸ் கட்சி திமுக கொடுக்கும் இடங்களை கடைசி கட்டத்தில் பெற்றுக்கொள்ள வாய்ப்புள்ளது என்கிறார்கள்.

English summary
DMK was strict on the alliance talks with Congress ahead of the Tamilnadu Assembly elections.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X