சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

திருந்துங்கள்.. இல்லையெனில் திருத்தப்படுவீர்கள்.. நிர்வாகிகளிடம் பொங்கிய ஸ்டாலின்.. இதுதான் காரணமா?

திமுகவில் உள்ள சில மாவட்ட செயலாளர்கள் மற்றும் மூத்த நிர்வாகிகள் சரியான பணிகளை செய்வது இல்லையென்று திமுக தலைவர் ஸ்டாலினுக்கு புகார் சென்றுள்ளது.

Google Oneindia Tamil News

Recommended Video

    நிர்வாகிகளிடம் கடுமையாக பேசிய ஸ்டாலின். இதான் காரணமா ?| reason behind the angry speech of M K Stalin

    சென்னை: திமுகவில் உள்ள சில மாவட்ட செயலாளர்கள் மற்றும் மூத்த நிர்வாகிகள் சரியான பணிகளை செய்வது இல்லையென்று திமுக தலைவர் ஸ்டாலினுக்கு புகார் சென்றுள்ளது.

    திமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம் இன்று சென்னையில் நடக்கிறது. தி.மு.க பொதுக்குழுக் கூட்டம் நேற்று சென்னையில் நடந்தது. திமுகவின் மாவட்ட செயலாளர்கள், பொதுக்குழு உறுப்பினர்கள், சில எம்பிக்கள் ஆகியோர் இந்த கூட்டத்தில் கலந்து கொண்டனர்.

    நேற்று திமுக கட்சியின் இந்த பொதுக்குழு கூட்டத்தில் ஸ்டாலின் மிக கடுமையாக திமுக கட்சி நிர்வாகிகளை விமர்சித்தார். அவரின் பேச்சுக்கு பின் என்ன காரணம் என்று தற்போது விவரங்கள் வெளியாகி உள்ளது.

    திமுக, அதிமுக ஒழிய வேண்டும்.. அதுக்காக என்ன வேணுமானாலும் செய்வேன்.. தமிழருவி மணியன் ஆவேசம்திமுக, அதிமுக ஒழிய வேண்டும்.. அதுக்காக என்ன வேணுமானாலும் செய்வேன்.. தமிழருவி மணியன் ஆவேசம்

    ஸ்டாலின் பேச்சு

    ஸ்டாலின் பேச்சு

    நேற்று பொதுக்குழுவில் ஸ்டாலின் பின் வரும் வாக்கியங்களை பயன்படுத்தினார்:

    கட்சியில் சிலர் திருந்த வேண்டும். தங்களை திருத்தி கொள்ளாத திமுக நிர்வாகிகள், திருத்தப்படுவார்கள்.

    நிர்வாகிகள் எப்போதும் உழைப்பதற்கு தயாராக இருக்க வேண்டும். என்னுடைய சக்தியையும் தாண்டி நான் உழைத்து வருகிறேன்.

    யாரும் நம்மை கட்டுப்படுத்த முடியாது என்று திமுக நிர்வாகிகள் கருத கூடாது. நான் இருக்கிறேன்.

    சிலர் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அது மீண்டும் நடக்கும்.

    கட்சியின் வளர்ச்சிக்காக சர்வாதிகாரியாக மாறுவேன். தனிப்பட்டு எனக்காக அல்ல, கட்சி வளர்ச்சிக்காக என்று ஸ்டாலின் பேசி இருந்தார்.

    என்ன பிரச்சனை

    என்ன பிரச்சனை

    இந்த நிலையில் ஸ்டாலினின் பேச்சிற்கு என்னதான் காரணம். கட்சிக்குள் என்னதான் நடக்கிறது என்று விவரங்கள் வெளியாகி உள்ளது. உள்ளாட்சி தேர்தலில் திமுக எப்படியாவது வெற்றிபெற வேண்டும் என்று தீவிரமாக இருக்கிறது. ஆனால் இதற்காக இதுவரை திமுக நிர்வாகிகள் யாரும் வேலையே பார்க்கவில்லை என்று புகார் வந்துள்ளது.

    மாவட்ட செயலாளர் பேச்சை கேட்கவில்லை

    மாவட்ட செயலாளர் பேச்சை கேட்கவில்லை

    லோக்சபா தேர்தலில் தீவிரமாக பணியாற்றிய யாரும் இடைத்தேர்தலுக்கோ, உள்ளாட்சி தேர்தலுக்கோ வேலை பார்க்கவில்லை. மேலிடம் கொடுக்கும் பணத்தையும் சரியாக செலவு செய்வது கிடையாது. மாவட்ட செயலாளர்கள் அளவில் நிறைய முறைகேடுகள் நடக்கிறது என்று ஸ்டாலினுக்கு புகார் மேல் புகார் சென்றுள்ளது.

    புகார் வந்துள்ளது

    புகார் வந்துள்ளது

    இதனால் கோபம் அடைந்த ஸ்டாலின்தான் நேற்று இப்படி நிர்வாகிகளிடம் பொறிந்து தள்ளி இருக்கிறார். நேற்று திமுகவின் பொதுக்குழு கூட்டம் கூட்டப்பட்டதற்கு காரணமே இதுதான் என்று கூறுகிறார்கள். இந்த கூட்டம் முடிந்த பின் சில முக்கிய நிர்வாகிகளை ஸ்டாலின் அழைத்து தனியாக பேசி உள்ளார்.

    மாவட்ட செயலாளர்கள்

    மாவட்ட செயலாளர்கள்

    அதோடு இன்று மாவட்ட செயலாளர்களை மட்டும் தனியாக அழைத்தும் பேசியுள்ளார். கட்சியில் புதிதாக பதவி பெற்ற சிலர் இப்படி செய்கிறார்கள். அவர்கள்தான் 2 தொகுதி இடைத்தேர்தலில் திமுக தோல்வி அடையவும் காரணம் என்று புகார் வந்துள்ளது.

    அதிமுகவுடன் வரம்பை மீறி சேர்க்கை

    அதிமுகவுடன் வரம்பை மீறி சேர்க்கை

    அதேபோல் சில திமுக மாவட்ட செயலாளர்கள் ஆளும்கட்சி எம்எல்ஏக்களுடன் நெருக்கமாக இருக்கிறார்கள் . உள்ளூரில் சில ஆதாயங்களை பெற வேண்டும் என்று இப்படி செய்கிறார்கள். இதனால் திமுகவிற்குத்தான் பின்னடைவு ஏற்படுகிறது. அவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும். அவர்களை கட்டுப்படுத்த யாரும் இல்லை என்று நினைக்க வேண்டாம் என்று ஸ்டாலின் குறிப்பிட்டுள்ளார்.

    நீக்க போகிறார்

    நீக்க போகிறார்

    இதற்கு முன்பே ஸ்டாலின் லோக்சபா தேர்தலுக்கு முன் கட்சியில் முக்கிய உறுப்பினர்களை நீக்கியதுடன், பலரின் பதவிகளை மாற்றினார். தற்போது உள்ளாட்சி தேர்தலுக்கும் அதேபோல்தான் ஸ்டாலின் செயல்படுவார் என்று கூறுகிறார்கள். விரைவில் திமுகவில் பல மாவட்ட செயலாளர்களுக்கு அதிரடி செக் வைக்கப்படும் என்று கூறுகிறார்கள்.

    English summary
    DMK: What is the reason behind the angry speech of M K Stalin in the General Council Meeting yesterday?
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X