சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

அப்டி போடு.. "180".. ஸ்ட்ரைட்டா மோத போகிறதாம் திமுக.. அப்படியே மிரண்டு பார்க்கும் தமிழக கட்சிகள்..!

180 இடங்களில் திமுக போட்டியிட முடிவு செய்து வருகிறதாம்

Google Oneindia Tamil News

சென்னை: மிக முக்கியமான தகவல் ஒன்று அரசியலை வட்டமடித்து கொண்டிருக்கிறது.. 180 இடங்களில் திமுக போட்டியிட தயாராகி வருகிறதாம்..!

வடக்கில் இருந்து ஐபேக் டீம் வந்ததில் இருந்தே ஒரே ஒரு முடிவில் உறுதியாக இருக்கிறது.. இந்த முறை பெரும்பாலான இடங்களில் திமுகவே போட்டியிட வேண்டும் என்பதுதான்.. இதில் ஏகப்பட்ட குளறுபடிகள் உள்ளன.

சில நாட்களுக்கு முன்பே, எந்தெந்த தொகுதிகளில் போட்டியிட்டால் திமுக வெற்றி பெறும் என்ற லிஸ்ட்டையும் ஐபேக் தயார் செய்தது.. அதேபோல, திமுக கூட்டணி கட்சிகள் எந்தெந்த தொகுதிகளில் போட்டியிட்டால் வெற்றி பெறலாம் என்கிற இன்னொரு லிஸ்ட்டையும் தயார் செய்து மேலிடத்துக்கு தந்தது.

கூட்டணி

கூட்டணி

அந்த லிஸ்ட்டில் கூட்டணி கட்சிகளுக்கு குறைவான தொகுதிகளே ஒதுக்கப்படும் என்று சொல்லப்பட்டிருந்தது.. இதுதான் கூட்டணிகளுக்கு கிடைத்த முதல் ஷாக் தகவல்.. அப்போது ஆரம்பித்த இழுபறி, சீட் ஒதுக்கீடு இன்னும் முடிவாகவில்லை.

போட்டி

போட்டி

இதற்கு நடுவில் இன்னொரு தகவலும் கசிந்தது.. திமுக இந்த முறை 180 தொகுதிகளில் மோத போகிறது என்றார்கள்.. அப்படியானால் மீதமிருக்க கூடிய 54 தொகுதிகள் மட்டுமே கூட்டணி கட்சிக்கு ஒதுக்கும் என்றும், அப்படி ஒதுக்கினால் அதனை கூட்டணி கட்சிகள் எப்படி எதிர்கொள்ளும், ஒருவேளை சீட் ஒதுக்கீடுகளுக்கு ஒப்புக் கொண்டாலும், தொகுதி பிரச்சனைகளை அவை எவ்வாறு எதிர்கொள்ளும் என்ற கேள்விகள் மளமளவென எழுந்தன.

 புது தகவல்

புது தகவல்

ஆனால், வந்த வேகத்தோடு அந்த தகவலும் மறைந்துபோனது.. இப்போது மறுபடியும் திமுகவின் தேர்தல் கணிப்பு குறித்த செய்திகள் சோஷியல் மீடியாவில் வேகமாக பரவி வருகிறது.. அதன்படி 180 தொகுதிகளில் திமுக களமிறங்க முடிவு செய்து வருகிறதாம்..

 ஜாக்கிரதை

ஜாக்கிரதை

இதற்கு காரணம், சென்ற முறையாவது வெறும் 4 முனை போட்டி இருந்தது.. ஆனால், இந்த முறை திமுக, அதிமுக, மநீம, நாம் தமிழர், அமமுக என ஏகப்பட்ட முனைகளில் இருந்து போட்டி உருவாகியுள்ளது.. 4 முனை போட்டிக்கே ஆட்சியை நூலிழையில் இழந்தது திமுக.. அதுவும் ஒரே ஒரு சதவீத வித்தியாசத்தில் தவறவிட்டுவிட்டது.. இப்போது பல்முனை போட்டி என்பதால், இந்த முறையும் ஆட்சியை நழுவ விட்டுவிடக்கூடாது என்பதில் படுஜாக்கிரதையாக காய்களை நகர்த்தி வருகிறது. அதனால்தான் 180 தொகுதிகளில் மோத தயாராகி வருகிறது.

 சாமர்த்தியம்

சாமர்த்தியம்

மிச்சமுள்ளதை கூட்டணிகளுக்கு பிரித்து தந்து அவர்களை சமாதானப்படுத்தும் முயற்சியிலும் இறங்கும் என தெரிகிறது. அதில் காங்கிரஸுக்கு 20, சிபிஎம் 8, சிபிஐ 8, மதிமுகவுக்கு 8 முதல் 10க்குள், விடுதலைச் சிறுத்தைகளுக்கு 6, முஸ்லீம் லீக் கட்சிக்கு 2, மனிதநேய மக்கள் கட்சிக்கு 2, கொங்கு மக்கள் தேசியக் கட்சிக்கு 2 (சூரியன் சின்னத்தில்), தமிழக வாழ்வுரிமைக் கட்சிக்கு 2 (சூரியன் சின்னத்தில்) என்று ஒதுக்கப் போவதாக ஒரு செய்தி கூறுகிறது.

 தனித்து களம்

தனித்து களம்

அதிமுகவும் இப்படித்தான், 180 என்று டார்கெட் செய்து வருகிறார்கள்.. 180-ல் நின்றால் 130 வாங்க முடியும் என்று இந்த கட்சிகள் நம்புவதாக தெரிகிறது...அதேசமயம் கூட்டணியில் இருந்து, யாராவது பிரிந்து செல்ல வாய்ப்புள்ளதாகவும் தெரிகிறது.. வெளியில் இருந்து கமல் போன்றோர் உள்ளே வரவும் சான்ஸ் இருக்கிறது.. எப்படி பார்த்தாலும் சரி, யார் கூட்டணிக்கு உள்ளே வந்தாலும் வெளியே போனாலும் சரி, திமுக 180 இடங்களில் போட்டியிட வேண்டும் என்று அக்கட்சியின் நிர்வாகிகள், தொண்டர்கள் பலரும் விருப்பம் தெரிவித்தும் வருகின்றனர்.. என்ன நடக்கிறது என்று பார்ப்போம்!

English summary
DMK will contest 180 seats in TN Assembly Election 2021, says sources
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X