சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

காஷ்மீர் விவகாரத்தை கையில் எடுத்தது திமுக.. டெல்லியில் 22ம் தேதி போராட்டம்

Google Oneindia Tamil News

சென்னை: காஷ்மீரில் வீட்டுக்காவலில் உள்ள தலைவர்களை விடுவிக்கக்கோரி டெல்லி ஜந்தர்மந்தரில் 22ஆம் தேதி திமுக உள்ளிட்ட அனைத்துக்கட்சி எம்பிக்கள் பங்கேற்கும் ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.

காஷ்மீர் விவகாரம் தொடர்பாக டெல்லியில் ஆகஸ்ட் 22ம் தேதி, திமுக, கூட்டணி எம்.பிக்கள் போராட்டம் நடத்த உள்ளதாக அவர் மேலும் கூறியுள்ளார்.

DMK will do a demonstration in Delhis Jantar Mantar to free Kashmir leaders

ஜம்மு காஷ்மீரில் ஜனநாயகத்தை பாதுகாக்க வலியுறுத்தி டெல்லியில் போராட்டம் நடைபெறும், டெல்லி ஜந்தர் மந்தரில் திமுக, கூட்டணி எம்.பிக்கள் போராட்டம் நடக்கும். காஷ்மீரில் கைது செய்யப்பட்ட தலைவர்களை விடுதலை செய்ய வேண்டும். அங்கு ஜனநாயகத்தை மீட்டெடுக்க வேண்டும் என்பது இந்த ஆர்ப்பாட்டத்தின் நோக்கமாகும். இவ்வாறு ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

காஷ்மீரில் முன்னாள் முதல்வர்கள் மெகபூபா முப்தி, உமர் அப்துல்லா உள்ளிட்ட பல அரசியல் தலைவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். இன்று அங்கு பள்ளி, கல்லூரிகள் திறக்கப்பட்டுள்ளன. மாணவர்கள் எண்ணிக்கை குறைவாக இருப்பதாக பள்ளி வருகைப் பதிவேடு குறிப்புகள் சொல்கின்றன. ஆனால் இன்னும் அரசியல் தலைவர்கள் விடுதலை செய்யப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

English summary
All alliance party MPs under DMK will do a demonstration in Delhi's Jantar Mantar to free Kashmir leaders.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X