• search
சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  

சசிகலா குறித்து பேசுவதில் பயம் இல்லை.. சோனியா காலில் விழுந்து கிடந்தவர்கள் திமுகவினர்.. வைகைசெல்வன்

|

சென்னை: சசிகலா குறித்து பேட்டியளிப்பதில் எவ்வித பயமும் இல்லை என்றும் சோனியா காந்தி காலில் விழுந்து கிடந்தவர்கள் தான் திமுகவினர் என்றும் முன்னாள் அமைச்சர் வைகைசெல்வன் கடுமையாக விமர்சித்துள்ளார்.

  ADMK மீதான DMKவின் குற்றச்சாட்டு மற்றும் சசிகலா உள்ளிட்ட பல்வேறு விவகாரங்கள் - வைகைச்செல்வன் பேட்டி

  கடந்த 2011ஆம் ஆண்டு தேர்தலில் அருப்புக்கோட்டை சட்டமன்ற தொகுதியிலிருந்து போட்டியிட்டு வெற்றிபெற்றவர் வைகைசெல்வன் ஜெயலலிதா அமைச்சராக இருந்தபோது, இவர் அமைச்சர் பதவியிலும் சிறிது காலம் இருந்துள்ளார்.

  முன்னாள் அமைச்சர் வைகைசெல்வன் ஒன் இந்தியா தளத்திற்கு அளித்த நேர்காணலில், திமுக பிரச்சனை, சசிகலா விஷயம் என பலவற்றைப் பகிர்ந்துகொண்டுள்ளார். அதிமுக தனது ஆட்சியின் சாதனைகளை முன்வைத்தே பிரச்சாரத்தை மேற்கொண்டு வருவதாக தெரிவித்த அவர், திமுக அதிகார பசியுடன் அலைந்து கொண்டு இருப்பதாகக் கூறினார். மேலும், பிரியாணி கடை முதல் செய்திகள் திரிப்பு வரை அதிகார போதை திமுகவை ஆட்டிப்படைப்பதாகவும் அவர் குற்றஞ்சாட்டினார்.

  DMK will do anything to come into power, slams Vaigaiselvan

  தொடர்ந்து அமமுக குறித்துப் பேசிய அவர், முன்னாள் முதல்வர் ஜெயலலிதா தான் மறைந்த பின்னரும் 100 ஆண்டுகளுக்கு அதிமுக மக்களுக்குச் சேவையாற்றும் என்று கூறினார். அவர் கூறியதைப் போல அதிமுக என்ற மாபெரும் இயக்கம் மக்களுக்குச் செழுமையாகச் சேவை செய்து வருகிறது. அமமுக ஏற்கனவே தள்ளாட்டத்தில், தடுமாற்றத்துடன் உள்ளது. அந்தக் கட்சி அதிமுகவை மீட்டெடுக்கும் என சொல்வது வேடிக்கையானது என்றார்.

  சசிகலாவை அனைவரும் நட்பு ரீதியிலேயே சந்தித்துள்ளனர் என்றும் இதனால் அரசியல் மாற்றங்கள் நிகழாது என்றும் கூறினார். சசிகலா குறித்து போட்டி கொடுக்க வேண்டாம் என்றும் துறை ரீதியாகச் செய்யப்பட்ட சாதனைகளை மக்களிடம் சென்று சேருங்கள் என்று முதல்வர் கேட்டுக் கொண்டதாலேயே அவர் பற்றிப் பேசுவது இல்லை என்றும் சசிகலா குறித்துப் பேசுவதில் எவ்வித அச்சமும் இல்லை என்றும் வைகைசெல்வன் குறிப்பிட்டார்.

  கட்சி துவங்கிய அர்ஜுன மூர்த்தி.. ரஜினிகாந்த் அசத்தல் "வாழ்த்து.." மக்கள் மன்றம் வேறு மாதிரி சொன்னதே!

  அரசு பள்ளி மாணவர்களுக்கு உள் ஒதுக்கீடு, டெல்டா பகுதியைப் பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவித்து, காவிரி பிரச்சனைக்கு நிர்ந்திர தீர்வு என பல்வேறு சாதனைகளை அதிமுக அரசு செய்துள்ளது என்றும் திமுக தனது சாதனை என சொல்ல ஒன்றும் இல்லை என்பதாலேயே செய்திகளை திரித்துப் பேசி வருவதாகக் குற்றஞ்சாட்டினார்.

  அதிமுக-பாஜ கூட்டணி குறித்து திமுகவின் விமர்சனத்திற்குப் பதிலளித்த அவர், கூட்டணி வைப்பதால் காலில் விழுந்துவிட்டோம் என திமுக சொல்வது பச்சைப் பொய். இலங்கையில் போர் உச்சத்திலிருந்தபோது முள்ளி வாய்க்காலில் 1.5 லட்சம் தமிழர்கள் கொல்லப்பட்டபோது, அதைத் தடுக்க தவறி, சோனியா காந்தி காலில் விழுந்து கிடந்தவர்கள் தான் திமுகவினர் என்று குற்றஞ்சாட்டினார்.

   
   
   
  English summary
  ADMK spokesperson vaigaichelvan interview about DMK and Sasikala.
  உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
  Enable
  x
  Notification Settings X
  Time Settings
  Done
  Clear Notification X
  Do you want to clear all the notifications from your inbox?
  Settings X