சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

இதுக்கு பகிரங்கமாகவே பாஜகவில் சேர்ந்து விடலாமே குக செல்வம்.. எது தடுக்கிறது?

குக செல்வம் கட்சி மாற தடையாக இருப்பது என்ன?

Google Oneindia Tamil News

சென்னை: டெல்லி போகிறார்.. அங்கு பாஜக தேசியத் தலைவர் நட்டாவுடன் அமர்ந்து பேசி விட்டு வருகிறார்.. சென்னை திரும்புகிறார்.. தமிழக பாஜக தலைமையகமான கமலாலயம் போகிறார்.. ஆனால் பாஜகவில் சேரவில்லை என்கிறார்.. அதேசமயம், திமுக தலைமையை கடுமையாக விமர்சிக்கிறார்.. பாஜகவில் சேராமலேயே தான் இருந்த திமுகவை விமர்சிக்கும் கு க செல்வம் ரொம்பவே வித்தியாசமானவராக இருக்கிறார்.

Recommended Video

    55 வயசாய்ருச்சா.. திமுகவில் இருக்கீங்களா.. பேசாம பாஜகவுக்கு வந்துருங்க - கு. க. செல்வம்

    இப்படி பாஜகவில் சேராமலேயே தன்னை சட்டசபைக்கு அனுப்பி வைத்த திமுகவை கடுமையாக விமர்சிக்கும் கு க செல்வத்தின் தற்போதைய நோக்கம் எம்எல்ஏ பதவியை விட்டு விடக் கூடாது, பத்திரமாக காத்துக் கொள்ள வேண்டும் என்பதாக மட்டுமே தெரிகிறது.

    கொள்கை அடிப்படையில் திமுகவை விட்டு செல்வம் போகவில்லை. அதை அவரே நிரூபித்தும் விட்டார்.. தனக்கு பதவி கேட்டேன்.. கொடுக்கவில்லை. போய் விட்டேன் என்று பச்சையாகவே சொல்லி விட்டார். எனவே கொள்கை பற்றிப் பேசுவதில் லாபம் இல்லை. அதேசமயம், பாஜகவில் அவருக்கு என்ன பதவி கிடைக்கும் என்று தெரியவில்லை.

    பாஜகவுக்குத் தாவும் கு.க... அதிர்ச்சியில் திமுக.. அறிவாலயத்தில் அவசர ஆலோசனை.. என்ன பேசினாங்க? பாஜகவுக்குத் தாவும் கு.க... அதிர்ச்சியில் திமுக.. அறிவாலயத்தில் அவசர ஆலோசனை.. என்ன பேசினாங்க?

    திமுக

    திமுக

    காரணம் இதற்கு முன்பு அதிமுகவிலிருந்து பாஜகவுக்குப் போய் பெரிய லெவலில் பதவி, அங்கீகாரம், தேர்தலில் நிற்க சீட் உள்ளிட்வடற்றை எதிர்பார்த்து எதுவும் கிடைக்காமல் ஏமாற்றத்தில் பலர் மூழ்கிப் போய்க் கிடக்கின்றனர். லேட்டஸ்டாக நயினார் நாகேந்திரன் கூட புலம்பியிருந்தார். அவருக்கு முன்பு நடிகர் ராதாரவியும் கூட அதிருப்தியைக் காட்டியிருந்தார்.

     செல்வாக்கு

    செல்வாக்கு

    ஓரளவு மக்கள் மத்தியில் செல்வாக்கு உள்ள இவர்களுக்கே இந்த நிலை என்றால் ஆயிரம் விளக்கு தொகுதியைத் தாண்டி யாருக்குமே தெரியாத ஒரு நபரை எப்படி பாஜக பெரிய அளவில் உட்காரவைக்கும் என்பது எதிர்பார்ப்புக்குரியது. காரணம் கு க செல்வத்தைப் பொறுத்தவரை சென்னையைத் தாண்டி எத்தனை பேருக்கு அவரைத் தெரியும் என்று தெரியவில்லை. நிச்சயம் சென்னைக்குள்ளேயே கூட பலருக்குத் தெரிந்திருக்க வாய்ப்பில்லை.

    வரலாறு

    வரலாறு

    சரி இவருக்கு ஏதாவது அரசியல் வரலாறு இருக்கிறதா என்று பார்த்தால், மூக்கை மூடிக் கொள்ளக் கூடிய அளவிலான நறுமணம் கமழக் கூடியதாக அவரது பின்னணி உள்ளது. அதற்குள் போக வேண்டாம்.. இப்போது திமுகவினர் கு க செல்வத்தை சஸ்பெண்ட் செய்துள்ளனர். அடுத்து டிஸ்மிஸ்ஸும் செய்வார்கள். ஆனால் எது நடந்தாலும் அவரது எம்எல்ஏ பதவிக்கு ஆபத்து நிச்சயம் இல்லை என்றே நம்பப்படுகிறது. காரணம், அத்தனை சீக்கிரம் அவர் மீது சட்டரீதியான நடவடிக்கை எதுவும் பாய வாய்ப்பில்லை என்று சொல்கிறார்கள்.

    பலம்

    பலம்

    ஆனால் ஒரு கட்சியை விட்டு வெளியேறினால் அடுத்த கட்சிக்குப் போவதாக இருந்தால் எந்தக் கட்சியால் தனக்கு பதவி கிடைத்தோ அதையும் உதறி விட்டுப் போவதுதான் நாகரீகம். முன்பு தேமுதிகவிலிருந்து வெளியேறிய சிலர் தங்களது எம்எல்ஏ பதவியை உதறி விட்டு பிற கட்சிகளில் இணைந்தனர். அந்த நாகரீகம் கு க செல்வத்திடமும் இருக்க வேண்டும். அதுதான் அவருக்கும் கெளரவமானதாக இருக்கும். ஆனால் அவர் பதவியை உதறுவாரா என்று தெரியவில்லை. இதுவரை அதுகுறித்து அவர் எதையும் உணர்த்தவும் இல்லை.

    அங்கீகாரம்

    அங்கீகாரம்

    வெறும் பதவி சுகத்திற்காக கட்சி மாறுவோருக்கு தமிழக மக்களிடம் அங்கீகாரம் கிடைத்ததில்லை. காரணம் அவர்களை வேறு லிஸ்ட்டில் வைத்து மக்கள் ஒதுக்கி விடுகிறார்கள். அதை விட முக்கியமாக நாளை திமுக - பாஜக கூட்டணி அமைந்தால் கு க செல்வத்தின் என்னாகும் என்பதும் ஆச்சரியமான எதிர்பார்ப்புக்குரியது. மொத்தத்தில் செல்வத்தின் செயலால் திமுகவுக்கு நஷ்டம் இருக்காது.. அதே போல செல்வத்திற்கும் இது பெரிய பலனைக் கொடுக்காது.. அதேசமயம்,, பாஜகவுக்கு என்ன மாதிரியான லாபத்தைக் கொடுக்கப் போகிறது என்பது எதிர்பார்ப்புக்குரியது. பலருக்கு செக் வைக்க செல்வம் பயன்படலாம்.. அவ்வளவே.

    English summary
    Dmk: Will Ku ka selvam join in BJP
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X