சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

மின் கட்டண உயர்வு புகார் - திமுக சார்பில் ஜூலை 21ல் கறுப்புக்கொடி ஆர்ப்பாட்டம்

மின்கட்டண உயர்வை கண்டித்து வரும் 21ஆம் தேதி தமிழகம் முழுவதும் திமுக சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெறும் என அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

Google Oneindia Tamil News

சென்னை: மின்சார கட்டண உயர்வை கண்டித்து வரும் தமிழகம் முழுவதும் திமுக சார்பில் வரும் 21ஆம் தேதி ஆர்ப்பாட்டம் நடைபெறும் என அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. திமுகவினர் அவரவர் வீடுகளின் முன்பு கறுப்புக்கொடி ஏந்தி சமூக இடைவெளியுடன் ஆர்பாட்டம் நடத்த திமுக தலைவர் ஸ்டாலின் அறிவுறுத்தியுள்ளார்.

தமிழகத்தில் கொரோனா பாதிப்பு காரணமாக லாக்டவுன் அறிவிக்கப்பட்டுள்ளது. வீட்டு செலவுகளை விட மின்கட்டணத்தை பார்த்துதான் பலருக்கும் ஷாக் அடிக்கிறது. நான்கு மாதங்களுக்கு மின் கட்டணம் வழக்கத்தைவிட அதிகமாக வசூலிப்பதாக பல புகார்கள் எழுந்தது. இதையடுத்து, மின்சாரா வாரியம் சார்பில் அளிக்கப்பட்ட விளக்கத்தில் , ஊரடங்கால் மக்கள் வீடுகளிலேயே இருந்ததால் மின்கட்டணம் உயர்ந்துள்ளது என்றும் பயன்படுத்தப்பட்ட மின்சாரம் யூனிட் அடிப்படையில் கட்டணம் கணக்கிட முடியாது, பழைய மின் கட்டண தொகையை அடிப்படையாக கொண்டே புதிய மின் கட்டணம் கணக்கிடப்படும் என மின்சார வாரியம் விளக்கம் கொடுத்தது.

DMK workers protest on July 21st against EB bill hike in TamilNadu

இதனிடையே மின்கட்டண உயர்வு உள்ளிட்ட விவகாரம் குறித்து இன்று காணொளி மூலம் திமுக மாவட்ட செயலாளர், எம்பிக்கள், எம்எல்ஏக்களுடன் கட்சி தலைவர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை நடத்தினர். இந்நிலையில் மின்சார கட்டண உயர்வை கண்டித்து வரும் 21ஆம் தேதி தமிழகம் முழுவதும் திமுக சார்பில் ஆர்ப்பாட்டம் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.

கொரோனா வைரஸ் வுகான் ஆய்வுக் கூடத்தில் இருந்து வெளியானது: அமெரிக்கா திட்டவட்டம்!! கொரோனா வைரஸ் வுகான் ஆய்வுக் கூடத்தில் இருந்து வெளியானது: அமெரிக்கா திட்டவட்டம்!!

திமுகவினர் அவரவர் வீடுகளின் முன்பு 3 மணி நேரம் கறுப்புக்கொடி ஏந்தி சமூக இடைவெளியுடன் ஆர்பாட்டம் நடத்த திமுக தலைவர் ஸ்டாலின் அறிவுறுத்தியுள்ளார்.

கொரோனா வைரஸ் வுகான் ஆய்வுக் கூடத்தில் இருந்து வெளியானது: அமெரிக்கா திட்டவட்டம்!!

English summary
DMK party workers will hold protest against the decision to hike power tariff in Tamilnadu.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X