சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

நடந்தால் நடக்கட்டும்.. இல்லைன்னா மோதி பார்க்கலாம்.. வழக்கிற்கு இடையில் தேர்தலுக்கு தயாராகும் திமுக!

உள்ளாட்சி தேர்தலுக்கு எதிராக திமுக வழக்கு தொடுத்து இருக்கும் நிலையிலும் அக்கட்சி தேர்தலுக்காக தீவிரமாக தயாராகி வருகிறது.

Google Oneindia Tamil News

Recommended Video

    தமிழகத்தில் உள்ளாட்சி தேர்தல் தேதி அறிவிப்பு

    சென்னை: உள்ளாட்சி தேர்தலுக்கு எதிராக திமுக வழக்கு தொடுத்து இருக்கும் நிலையிலும் அக்கட்சி தேர்தலுக்காக தீவிரமாக தயாராகி வருகிறது. ஆம் ஒரு பக்கம் வழக்கு இருந்தாலும், இன்னொரு பக்கம் தேர்தலையும் எதிர்கொள்ள திமுக தயாராக உள்ளது.

    உள்ளாட்சி தேர்தல் பரபரப்பு சூடுபிடிக்க தொடங்கி உள்ளது. உள்ளாட்சி தேர்தலுக்கு எதிராக திமுக உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்துள்ளது. இதன் மீதான விசாரணை வரும் 5ம் தேதி நடக்க உள்ளது.

    தமிழகத்தில் டிசம்பர் 27 மற்றும் 30 தேதிகளில் தமிழகத்தில் உள்ளாட்சி தேர்தல் நடைபெறும் என்று மாநில தேர்தல் ஆணையர் பழனிசாமி அறிவித்துள்ளார். இரண்டு கட்டமாக தமிழகத்தில் தேர்தல் நடக்கிறது. வாக்கு எண்ணிக்கை ஜனவரி 2, 2020ல் நடக்கும்.

    உங்க திட்டம் புரிகிறது.. நடக்க விடமாட்டோம்.. தேர்தல் அறிவிப்பிற்கு எதிராக ஸ்டாலின் கொந்தளிப்பு!உங்க திட்டம் புரிகிறது.. நடக்க விடமாட்டோம்.. தேர்தல் அறிவிப்பிற்கு எதிராக ஸ்டாலின் கொந்தளிப்பு!

    இன்று ஆலோசனை

    இன்று ஆலோசனை

    இந்த நிலையில் உள்ளாட்சி தேர்தல் குறித்து திமுக இன்று மாலை இரண்டு ஆலோசனைகளை செய்ய இருக்கிறது. அதன்படி, உள்ளாட்சி தேர்தலை எப்படி நிறுத்துவது என்பது தொடர்பாக வழக்கறிஞர் குழுவுடன் ஆலோசனை செய்ய உள்ளனர். இப்போது நடக்கும் முறைப்படி தனித்தனியாக தேர்தல் நடந்தால் அதிமுகவிற்குதான் பலன்.

    உடனே செய்ய வேண்டும்

    உடனே செய்ய வேண்டும்

    அதாவது உள்ளாட்சி தேர்தலும், நகராட்சி தேர்தலும் ஒன்றாக நடந்தால் திமுக வெல்ல வாய்ப்புள்ளது. தனித்தனியாக நடந்தால் அப்படி நடக்க வாய்ப்பில்லை. அது அதிமுகவிற்கு சாதகமாக மாறும். அதனால் இதை உடனே நிறுத்த வேண்டும் என்று திமுக தனது வழக்கறிஞர்கள் குழுவுடன் ஆலோசனை செய்ய உள்ளது.

    வேறு வழி

    வேறு வழி

    அதே சமயம் இன்னொரு பக்கம் திமுக கட்சி தேர்தலை எதிர்கொள்வது தொடர்பாகவும் ஆலோசிக்க உள்ளது. உச்ச நீதிமன்றம் சமயத்தில் தேர்தலுக்கு தடை விதிக்கும். அல்லது அனைத்து தேர்தலையும் ஒன்றாக நடத்த சொல்லும். இல்லையெனில் தேர்தல் ஆணைய முடிவிற்கு தடை விதிக்காமல் போகும்.

    இன்று மாலை ஆலோசனை

    இன்று மாலை ஆலோசனை

    இதனால் உள்ளாட்சி தேர்தலுக்கு தீவிரமாக இன்னொரு பக்கம் தயாராக திமுக திட்டமிட்டுள்ளது. தீர்ப்பு சாதகமாக வந்தால் வரட்டும். இல்லையென்றால் தேர்தலில் மோதி பார்க்கலாம் என்று திமுக முடிவு செய்துள்ளது. இன்று மாலை இதற்காக திமுகவின் முக்கிய உறுப்பினர்கள் ஆலோசிக்க உள்ளனர்.

    கூட்டணி கட்சிகள்

    கூட்டணி கட்சிகள்

    தேர்தலை எதிர்கொள்வது தொடர்பாக திமுக தனது கூட்டணி கட்சிகளுடனும் ஆலோசனை செய்ய உள்ளது. விரைவில் மதிமுக, காங்கிரஸ், விசிக உடன் திமுக அமர்ந்து ஆலோசனை செய்யும். போட்டியிடும் இடங்கள் தொடர்பாக இவர்கள் ஆலோசிக்க உள்ளனர்.

    English summary
    DMK would plan to face the election even when it filed Case against it in Supreme Court.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X