• search
சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  

"இங்கே பாருங்க".. திமுகவினர் என்னை கொலை செய்து விடுவதாக மிரட்டறாங்க.. நடிகை பரபரப்பு குற்றச்சாட்டு

Google Oneindia Tamil News

சென்னை: "திமுக இளைஞரணியினர் தன்னையும் தனது மகனையும் வீட்டில் நுழைந்து மிரட்டுவதாகவும், கொன்றுவிடுவேன் என்று மிரட்டுகிறார்கள் என்றும் நடிகை ஆதிரா பாண்டிலட்சுமி பரபரப்பு குற்றச்சாட்டு தெரிவித்துள்ளார்.. இங்கே பாருங்க என்று வீடியோ ஆதாரங்களையும் காட்டி, இது தொடர்பாக அவர் முதல்வர் ஸ்டாலினிடம் நியாயம் கேட்டிருக்கிறார் ஆதிரா.

தமிழில் "ஒரு குப்பை கதை", "அப்பா", "மருது" உள்ளிட்ட படங்களில் நடித்தவர் ஆதிரா பாண்டியலட்சுமி.. சென்னை வளசரவாக்கத்தில் வசித்து வருகிறார்..

சில தினங்களுக்கு முன்பு இவருடைய வீட்டின் அருகே திமுக பிரமுகர்கள் என்று சொல்லி கொண்டு சிலர் தகராறு செய்துள்ளதாக தெரிகிறது.. எனவே, இது குறித்து ஆதிரா கடந்த 7-ம் தேதி போலீசில் புகார் தந்தார்.. ஆனால், அதற்கு பிறகும், அந்த நபர்கள் மறுபடியும் வந்து இவர் வீட்டின் அருகில் பிரச்சனை செய்துள்ளனர் போலும்.

திமுக எம்பிக்களுக்கு.. டெல்லியில் இருந்து பறந்த உத்தரவு.. ரெடியாகும் திமுக எம்பிக்களுக்கு.. டெல்லியில் இருந்து பறந்த உத்தரவு.. ரெடியாகும்

சுவர்

அதனால், நடந்த சம்பவம் குறித்து, ஆதிரா தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டார்.. அதில், "சந்தேகத்திற்கிடமான சிலர் எதிர் வீட்டில் சுவர் ஏறுவதை தட்டிக்கேட்ட என்னையும், மகனையும் அப்பகுதி திமுக இளைஞர் அணியினருடன் சேர்ந்து சுற்றிவளைத்து தாக்கி, வீட்டில் நுழைந்து என் மகனை அடித்து கொலை மிரட்டல் விட்டார்கள். பெண்களுக்கு பாதுகாப்பு அரசு கொடுக்குமா? என்று கேள்வி எழுப்பினார்.

கட்சி பெயர்

இன்னொரு ட்வீட்டில், "என் சொந்த வீட்டிலிருந்து எங்களை விரட்ட தொடர்ச்சியாக ஈடுபடுகிறார்கள்.. திமுகவின் நல்லாட்சிக்கு களங்கம் விளைவிக்க கட்சிப்பெயரை தவறாக பயன்படுத்தி பல தவறுகளை செய்கிறார்கள். அதில் ஒன்றுதான் இது" என்று பதிவிட்டார்.. அந்த பதிவுடன், ஏற்கனவே தான் போலீசில் தந்த புகாரின் நகலையும் ஷேர் செய்திருந்தார்.

சிகிச்சை

சிகிச்சை

இதற்கு பிறகு இன்னொரு ட்வீட் பதிவிட்டார்.. அதில், "நம்மாழ்வார் அக்குப்பஞ்சர் சிகிச்சை மையத்துக்கு வந்த கர்ப்பிணி பெண்ணை "இங்கு வந்தால் கொன்று விடுவேன்!" என்று மிரட்டி அங்கிருந்த பைக்குகளை அவர் மீது தள்ளும் மதுரவாயல் தொகுதி வளசரவாக்கம் திமுக இளைஞர் அணி நபர்கள். அரசின் நடவடிக்கை தேவை" என்று பதிவிட்டார்.. இந்த பதிவுடன், அந்த நபர்கள் மிரட்டுவது தொடர்பான வீடியோவையும் ஷேர் செய்திருந்தார்.

 உதயநிதி ஸ்டாலின்

உதயநிதி ஸ்டாலின்

ஆதிரா இந்த ட்வீட்டுகள் அனைத்தையும் முதல்வர் ஸ்டாலின் மற்றும் உதயநிதி ஸ்டாலின் ஆகியோரின் ட்விட்டர் ஹேண்டில்களை மென்ஷன் செய்துள்ளார்... இதனால், இந்த ட்வீட்கள் அனைத்தும் பரபரப்பாக பேசப்பட்டு வருகின்றன.. இதை பார்த்த பலரும், முதல்வர் நிச்சயம் நடவடிக்கை எடுப்பார், கவலைப்பட வேண்டாம் என்று நம்பிக்கை தெரிவித்து வருகின்றனர்.

ஆபாசம்

ஆபாசம்

இதைதொடர்ந்து இன்னொரு ட்வீட்டும் ஆதிரா போட்டுள்ளார்.. அதில், "லாக் டவுனில் மளிகை கடை திறந்து வைத்து வியாபாரம் பார்த்த நபரின் கடையை ஸ்குவாடு வந்து மூடினார்கள். வீட்டின் மாடியிலிருந்து வேடிக்கை பார்த்த என்னை ஆபாசமாக திட்ட தொடங்கினார். அதை வீடியோ எடுத்தேன். ஆபாசமாக செய்கையுடன் மிரட்டினார். இதை பாருங்கள் @mkstalin @Udhaystalin @KanimozhiDMK" என்று பதிவிட்டு எம்பி கனிமொழியையும் அதில் டேக் செய்துள்ளார்.

 அம்மா உணவகம்

அம்மா உணவகம்

திமுக ஆட்சி அமைந்தவுடன், ஒருசிலர் இப்படி ஆங்காங்கே பிரச்சனை ஏற்படுத்தி வருகிறார்கள்.. இப்படித்தான் அம்மா உணவகம் ஒன்றை அடித்து நொறுக்கிய திமுகவினர்மீதே முதல்வர் ஸ்டாலின் கடுமையான நடவடிக்கையை அன்றைய தினமே எடுத்தார்.. கட்சி பொறுப்பு மற்றும் அடிப்படை உறுப்பினர் என்பதிலிருந்து நீக்கி உத்தரவிட்டார்.. திமுகவின் இந்த நடவடிக்கையை பலரும் வரவேற்றிருந்தனர்.. இப்போதும் ஆதாரத்துடன் ஆதிரா புகார்களை பதிவிட்டுள்ளதால், இதன் உண்மைதன்மையை கண்டறிந்து, நிச்சயம் இதன் மீதும் முதல்வர் நடவடிக்கை எடுப்பார் என்று நம்பப்படுகிறது.

English summary
DMK Youth wing functionaries are threatening to kill, says Actress Aadhira Pandialakshmi
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X