சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

நேராக அவரையே போய் பார்த்துவிட்டாரே.. உதயநிதி கையில் எடுத்த அந்த அஸ்திரம்.. ஆட்டம் சூடுபிடிக்கிறது!

Google Oneindia Tamil News

சென்னை: விடியலை நோக்கி ஸ்டாலின் குரல் பிரச்சாரத்தில் திமுகவின் உதயநிதி ஸ்டாலின் தீவிரமாக பிரச்சாரம் செய்து வருகிறார். நேற்று நடந்த பிரச்சாரத்தில் இவரின் யுக்தி பெரிய அளவில் கவனம் ஈர்த்தது.

Recommended Video

    மடாதிபதியுடன் மீட்டிங்.. நெற்றியில் விபூதி.. உதயநிதியின் வேஷம்…? கடுப்பில் நெட்டிசன்ஸ்..!

    தமிழகத்தில் தேர்தல் களம் சூடுபிடிக்க தொடங்கி உள்ளது. அதிமுக ஒரு பக்கம் முதல்வர் வேட்பாளராக முதல்வர் எடப்பாடி பழனிசாமியை அறிவித்துவிட்டு தேர்தலை சந்திக்க உள்ளது.

    பாஜக ஒரு பக்கம் வேல் யாத்திரை மூலம் தமிழகத்தில் அஸ்திரத்தை அமைத்துக் கொண்டு இருக்கிறது. இது போக நேற்று உள்துறை அமைச்சர் அமித் ஷா தமிழகத்தில் பாஜக - அதிமுக இடையிலான கூட்டணியை உறுதி செய்துவிட்டார்.

    வல்லரசு நாடுகளை ஆட்டி படைக்கும் கொரோனா வைரஸ்.. ஸ்தம்பித்த உலக பொருளாதாரம்.. கிலி கிளப்பும் 2020!வல்லரசு நாடுகளை ஆட்டி படைக்கும் கொரோனா வைரஸ்.. ஸ்தம்பித்த உலக பொருளாதாரம்.. கிலி கிளப்பும் 2020!

    எப்படி

    எப்படி

    இந்த நிலையில்தான் திமுகவின் இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் தற்போது டெல்டா மாவட்டங்களில் பிரச்சாரம் செய்து வருகிறார். விடியலை நோக்கி ஸ்டாலின் குரல் என்ற பிரச்சாரத்தை தொடங்கி உதயநிதி தீவிரமாக நடத்தி வருகிறது. முதல்நாள் நாகையில் உள்ள திருக்குவளையில் இவர் பிரச்சாரத்தை தொடங்கினார்.

    பிரச்சாரம்

    பிரச்சாரம்

    ஆனால் முதல்நாள் பிரச்சாரத்தின் போதே உதயநிதி கைது செய்யப்பட்டு பின் விடுவிக்கப்பட்டார். இந்த நிலையில் நேற்று மீண்டும் உதயநிதி ஸ்டாலின் நாகையில் பிரச்சாரம் மேற்கொண்டார். நாகையில் மீனவர்களை சந்தித்து அவர்களின் குறைகளை கேட்டறிந்தார். அதன்பின் மீண்டும் உதயநிதி ஸ்டாலின் கைது செய்யப்பட்டு பின் விடுவிக்கப்பட்டார்.

    விடுவிப்பு

    விடுவிப்பு

    இந்த நிலையில் மீண்டும் பிரச்சாரத்தை தொடங்கிய உதயநிதி, தருமபுரம் ஆதீனம் 27-வது குருமகா சந்நிதானம் ஸ்ரீலஸ்ரீ மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பரமாசாரிய சுவாமிகளை நேற்று சந்தித்தார். நேராக மடத்திற்கு சென்று உதயநிதி ஆதினத்தை சந்தித்தார். தேர்தல் பிரச்சாரத்தின் ஒரு பகுதியாக தருமபுரம் ஆதீனத்தை சந்தித்து ஆசி பெற்றார். அதோடு தமிழ்க்கடவுள் சேயோன் என்ற புத்தகத்தை ஆதினத்திடம் இருந்து உதயநிதி பெற்றுக்கொண்டார்.

    உதயநிதி ஸ்டைல்

    உதயநிதி ஸ்டைல்

    தருமபுரம் ஆதீனம் கொடுத்த விபூதியையும் உதயநிதி வைத்துக் கொண்டார். இதற்கு பின் வேளாங்கண்ணி பேராலயத்தின் அதிபர் பிரபாகர் அடிகளாருடன் காணொளி மூலம் உதயநிதி உரையாடினார். வேளாங்கண்ணி பேராலயத்தின் அதிபர் பிரபாகரின் வைத்த கோரிக்கைகளை உதயநிதி கேட்டறிந்தார். உதயநிதி இப்படி அடுத்தடுத்து இரண்டு மத தலைவர்கள் உடன் பேசியது பெரிய அளவில் வரவேற்பை பெற்றுள்ளது.

    எப்படி

    எப்படி

    இதுதான் உதயநிதியின் ஸ்டைல் என்றும் அவருக்கு அளிக்கப்பட்டு இருக்கும் டாஸ்க் என்றும் கூறுகிறீர்கள். அனைத்து தரப்பு வாக்குகளையும் பெற வேண்டும், அனைத்து மத, இன குழுக்களையும் கவர வேண்டும் என்பதில் உதயநிதி முனைப்பாக இருக்கிறார். பாஜக கட்சி வேல்யாத்திரை தொடங்கி உள்ள நிலையில் இந்த பக்கம் உதயநிதி தமிழ்க்கடவுள் சேயோன் புத்தகத்தை வெளியிட்டு பெற்றுக்கொள்கிறார்.

    செம

    செம

    இந்த நிகழ்வு முடிந்ததும் வேளாங்கண்ணி பேராலயத்தின் அதிபர் உடன் பேசி உள்ளார். எந்த மதத்திற்கும் திமுக எதிரி அல்ல என்பதை உணர்த்தும் வகையில் உதயநிதி செயல்பட தொடங்கி உள்ளார்.மொத்தத்தில் அனைத்து தரப்புகளையும் கவரும் வகையில் உதயநிதி களமிறங்கி உள்ளார். தேர்தல் களம் தமிழகத்தில் சூடுபிடிக்க தொடங்கி உள்ள நிலையில், தற்போது உதயநிதியின் அரசியல் வியூகம் பெரிய அளவில் கவனம் பெற்றுள்ளது.

    English summary
    DMK youth wing sec Udhayanidhi Stalin follows a strong strategy for DMK Campaign in Delta.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X