சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

உதயநிதி பிறந்தநாள்... ஆடம்பரமின்றி எளிமையாக நடந்த விழா

Google Oneindia Tamil News

சென்னை: திமுக இளைஞரணிச் செயலாளர் உதயநிதி ஸ்டாலின் பிறந்தநாள் விழா எந்த ஆடம்பரமும் இல்லாமல் எளிமையான முறையில் சென்னையில் நடைபெற்றது.

திமுக இளைஞரணி தலைமையகமான அன்பகத்தில் உதயநிதி ஸ்டாலினை சந்தித்து நிர்வாகிகளும், தொண்டர்களும் வாழ்த்து தெரிவித்துச் சென்றனர்.

முன்னதாக அண்ணா நினைவிடம், கருணாநிதி நினைவிடம், பெரியார் நினைவிடத்திற்கு சென்ற உதயநிதிஸ்டாலின் மலர்வளையம் வைத்து மரியாதை செலுத்தினார்.

பாத்திமாவோட அன்லாக் செல்போன், லேப்டாப்.. தந்தையின் கண் முன்பாகவே.. தடயவியல் துறை ஆய்வு பாத்திமாவோட அன்லாக் செல்போன், லேப்டாப்.. தந்தையின் கண் முன்பாகவே.. தடயவியல் துறை ஆய்வு

நிர்வாகிகள் வாழ்த்து

நிர்வாகிகள் வாழ்த்து

உதயநிதி ஸ்டாலினின் 42-வது பிறந்தநாள் இன்று கொண்டாடப்பட்டது. திமுக இளைஞரணிச் செயலாளர் பதவியேற்ற பின்பு உதயநிதி கொண்டாடும் முதல் பிறந்தநாள் என்பதால், ஏராளமான தொண்டர்களும், நிர்வாகிகளும் அவரை நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவித்தனர்.

வலியுறுத்தல்

வலியுறுத்தல்

பிறந்தநாளை கொண்டாட முதலில் உதயநிதி ஸ்டாலின் திட்டவட்டமாக மறுத்துள்ளார். பிறந்தநாள் கொண்டாட்டம் வேண்டாம் என்பது தான் நேற்றிரவு வரை அவரது நிலைப்பாடாக இருந்தது. இதனிடையே திமுக மாநில இளைஞரணி நிர்வாகிகள் அவரிடம் பேசி பிறந்தநாளை கொண்டாட சம்மதிக்க வைத்துள்ளனர்.

நிபந்தனை

நிபந்தனை

திமுக இளைஞரணி நிர்வாகிகள் கேட்டுக்கொண்டதால், வேறுவழியின்றி பிறந்தநாள் விழாவுக்கு ஒ.கே.சொன்ன உதயநிதி ஸ்டாலின், ஆனால் எந்த விளம்பரமும் இருக்கக்கூடாது என திட்டவட்டமாக தெரிவித்துள்ளார். மேலும், தன்னைக் காண வெளியூரில் இருந்து நிர்வாகிகள் சென்னை வந்துள்ளதால் அவர்கள் ஏமாற்றம் அடையக் கூடாது எனவும் அவர் நினைத்துள்ளார்.

உற்சாகம்

உற்சாகம்

உதயநிதி ஸ்டாலினின் பிறந்தநாள் விழாவை திமுக இளைஞரணியினர் தமிழகம் முழுவதும் உற்சாகமாக கொண்டாடினர். ஏழை எளியோருக்கு நல உதவிகள் வழங்குவது, அன்னதானம் செய்வது என உதயநிதி ஸ்டாலின் ரசிகர் மன்றத்தினரும் பல நல்ல காரியங்களில் ஈடுபட்டனர்.

English summary
dmk youthwing secretary udhayanidhi stalin 42-th birthday celebration in chennai
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X