சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

என்ன விஷயம்னே தெரியாமல் அறிக்கை விட்ட விஜயகாந்த்.. தமிழக மக்கள் ஷாக்!

விஜயகாந்த் வெளியிட்ட அறிக்கையினால் குழப்பம் ஏற்பட்டுள்ளது

Google Oneindia Tamil News

Recommended Video

    Vijayakanth | என்ன விஷயம்னே தெரியாமல் அறிக்கை விட்ட விஜயகாந்த்- வீடியோ

    சென்னை: விஷயமே தெரியாமல் ஒரு அறிக்கை வெளியிட்டிருக்கிறார் தேமுதிக தலைவர் விஜயகாந்த். இதை பார்த்துவிட்டு, கூட்டணி கட்சிகள் மட்டுமல்ல, தமிழக மக்களே ஜர்க் ஆகி கிடக்கின்றனர்.

    விஜயகாந்த்க்கு கொஞ்ச காலமாகவே உடம்பு சரியில்லை. அதனால் ஓய்வில் இருக்கிறார். எந்த நிகழ்ச்சி, கூட்டங்களுக்கும் வர முடிவதில்லை. ஆனால் திடீர் திடீர் என்று அவர் பெயரில் ஒரு அறிக்கை வரும். அப்படி வந்த ஒரு அறிக்கைதான் இது.

    "இந்தியா முழுவதும் நதிநீர் இணைப்புக்காக நேற்று நாடாளுமன்றத்தில் ஒற்றைத் தீர்ப்பாயம் மசோதாவை நிறைவேற்றம் செய்யப்பட்டிருப்பது வரவேற்கத்தக்கது. அனைத்து பிரச்சனைகளுக்கும் ஒரே தீர்வு நதிநீர் இணைப்பு மட்டுமே. இந்தியா மிகச்சிறந்த ஒரு விவசாயநாடு, இன்றைக்கு இந்தியாவில் இருக்கின்ற அனைத்து மாநிலங்களும் விவசாயத்தை நம்பி தான் உள்ளது.

    கண்டுகொள்ளவேயில்லை.. எடியூரப்பாவை கைவிட்ட மோடி? கண்டுகொள்ளவேயில்லை.. எடியூரப்பாவை கைவிட்ட மோடி?

    மசோதா

    மசோதா

    இன்றைக்கு நீர் என்பது மிக, மிக அத்தியாவசியமான ஒன்றாக அனைத்து மக்களாலும் எதிர்பார்க்கப்படுகிறது. குடிநீருக்கும், விவசாயத்திற்கும், தொழிலுக்கும் அனைத்து தேவைகளுக்கும் தீர்வுகண்டு இந்தியாவில் உள்ள அனைத்து மாநிலங்களும் தண்ணீரில் தன்னிறைவு பெறவேண்டும். அதற்கு ஒற்றைத் தீர்ப்பாயம் என்ற மசோதா வரவேற்கத்தக்கது.

    அவதி

    அவதி

    நாடாளுமன்றத்தில் மசோதா நிறைவேற்றப்பட்டது என்று விட்டுவிடாமல், இந்தியாவில் உள்ள நதிகளை ஒன்றாக இணைத்து, அனைத்து மாநிலங்களுக்கும் தண்ணீர் தங்குதடையில்லாமல் கிடைக்க செய்ய வேண்டும். மேலும் மிக முக்கியமாக தமிழ்நாட்டிற்கு காவேரி, கோதாவரி இணைப்பு உடனடியாக செயல்படுத்தி, காவிரி கடைமடை வரை தண்ணீர் சென்றடைய இந்த நதி நீர் இணைப்பு மிக மிக அவசியம். அது மட்டுமில்லாமல் தமிழ்நாட்டில் இன்றைக்கு பல பகுதிகளில் குடிக்க கூட தண்ணீர் இல்லாமல் மக்கள் அவதிப்படக்கூடிய சிரமமான சூழ்நிலையை நாம் பார்க்க முடிகிறது.

    வரவேற்கிறேன்

    வரவேற்கிறேன்

    எனவே இதை உடனடியாக மத்திய, மாநில அரசுகள் அதிக கவனம் செலுத்தி மழைக்காலங்களில் வரும் பெருவெள்ளம் வீணாக கடலில் சென்று கலப்பதை தடுத்து, மழைநீரை சேமித்து வைத்தாலே தமிழகம் செழிக்கும். அதேபோல் அனைத்து பகுதிகளுக்கும் தண்ணீரை பகிர்ந்து அளிக்க கூடிய அளவு நதிகளை இணைத்து, அதன் மூலம் ஆறுகள், ஏரி, குளம், குட்டை எல்லாவற்றிலும் நீர் நிலைகளை உயர்த்துவதற்கு நதிநீர் இணைப்பு மிக அவசியம். நதிநீர் இணைப்புக்காக ஒற்றைத் தீர்ப்பாயம் மசோதாவை தேமுதிக சார்பாக வரவேற்கிறேன்" என்று சொல்லி உள்ளார்.

    கிருஷ்ணா, காவிரி

    கிருஷ்ணா, காவிரி

    இதில் முக்கியமான சமாச்சாரம் என்னவென்றால், நாட்டில் தண்ணி பிரச்சனை இன்னும் இருக்கிறது. பல்வேறு மாநிலங்களுக்கு இடையே ஒரு பிரச்சனை இருக்கிறது என்றால் அது நதிநீரை பங்கீட்டு கொள்வதில்தான்! இதற்காகத்தான் காவிரி, கிருஷ்ணா உள்ளிட்ட 9 ஆணையங்கள் உள்ளன. ஆனால் 9 தீர்ப்பாயங்கள் அமைக்கப்பட்டும் இந்த பிரச்சனை தீரவே இல்லை. அதனால் தண்ணி பிரச்சனையும் இன்னும் நாட்டில் இருக்கத்தான் செய்கிறது.

    தீர்ப்பாயம்

    தீர்ப்பாயம்

    அதனால்தான், இதுக்கெல்லாம் தீர்வு காணும் வகையில், 9 தீர்ப்பாயங்களையும் ஒரேடியாக கலைத்துவிட்டு, ஒரே தீர்ப்பாயத்தை அமைக்க மத்திய அரசு முடிவு செய்தது. ஒரே நாடு, ஒரே தேர்தல், ஒரே ரேஷன் கார்டு என்ற ரேஞ்சில், ஒரே தீர்ப்பாயம் என்பதையும் வலியுறுத்தி பாஜக லோக்சபாவில் தீர்மானம் நிறைவேற்றியது. இந்த தீர்மானத்தை முழுசா தேமுதிக படிக்கவே இல்லை. இதுதான் விஷயமே.. மசோதாவை முழுசா தெரிந்து கொள்ளாமல், நதி நீர் இணைப்புக்காகத்தான் மசோதா நிறைவேற்றப்பட்டுள்ளதாகவும், அதை வரவேற்பதாகவும் இந்த அறிக்கை சொல்கிறது.

    அறிக்கை

    அறிக்கை

    ஆனால் ஒன்று.. தேமுதிகவில் இருந்து இந்த அறிக்கை ஆகட்டும் அல்லது, வேறு எந்த அறிக்கை வந்தாலும் சரி.. விஜயகாந்த் பெயரை அதில் போட்டு கெடுக்காமல் இருந்தாலே போதும்.. ஏனெனில் கண்டிப்பாக விஜயகாந்த் இப்படி ஒரு அறிக்கையை விஷயம் தெரியாமல், அரைகுறையாக, வெளியிட்டிருக்கவே மாட்டார்!

    English summary
    Public and TN Political parties got a confusion about the DMDK President Vijayakanths Statement
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X