சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

ஈஸ்வரனைத் தொடர்ந்து.. பாஜகவிலிருந்து திமுக இழுத்த 2வது விக்கெட் பாரிவேந்தர்!

Google Oneindia Tamil News

Recommended Video

    திமுகவுக்கு ஆதரவு அளிக்க உள்ளதாக அக்கட்சி தலைவர் பாரிவேந்தர் பேட்டி -வீடியோ

    சென்னை: 2014 லோக்சபா தேர்தலில் பாஜக கூட்டணியில் இடம் பெற்று இந்த முறை திமுகவுக்கு வந்துள்ள 2வது கட்சி பாரிவேந்தரின் இந்திய ஜனநாயகக் கட்சி.

    முதல் கட்சி ஈஸ்வரனின் கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி ஆகும். இந்தக் கட்சிக்கு திமுக கூட்டணியில் ஒரு சீட் தரப்பட்டுள்ளது. அதுவும் அக்கட்சித் தலைவர் ஈஸ்வரன் விரும்பிக் கேட்ட நாமக்கல்லையே திமுக கொடுத்து விட்டதாக சொல்கிறார்கள்.

    கடந்த மக்களவைத் தேர்தலில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி சார்பாக பொள்ளாச்சியில் போட்டியிட்டு தோல்வியை தழுவினார் ஈஸ்வரன்.

    Also Read | பாஜக கூட்டணியிலிருந்து நாங்கள் விலகியதற்கு காரணம் பாமக.. பாரிவேந்தர் பரபர பேட்டி

    ஆர்வம் இல்லை

    ஆர்வம் இல்லை

    அதன் பின்னர் தன்னை தனித்து செயல்படத் தொடங்கிய ஈஸ்வரன், திமுக, அதிமுக ஆகிய இரண்டு கட்சிகளுடனும் இணக்கம் காட்டாமலேயே இருந்து வந்தார்.

    அதிமுகவின் பாரபட்சம்

    அதிமுகவின் பாரபட்சம்

    இதற்கு காரணம் தனியரசுவை அதிமுக வளர்த்து விடுவதாகவும், விசிகவுடன் திமுக நெருக்கம் காட்டுவதால், சாதிரீதியான வாக்குவங்கியை தான் இழக்க நேரிடும் எனவும் கருதினார் ஈஸ்வரன்.

    விலகினார்

    விலகினார்

    இந்தமுறையும் ஈஸ்வரனை இழுக்க தாமரை தரப்பில் பகீரதபிரயத்தனம் செய்யப்பட்டதாம். ஆனால் தமிழ் ஊடகத்தில் முக்கிய பொறுப்புகளில் உள்ள இருவர் மூலம் ஈஸ்வரனை கேட்டுக்குள் இழுத்து போட்டுவிட்டது திமுக.

    விரும்பாத எடப்பாடி

    விரும்பாத எடப்பாடி

    மேலும், எடப்பாடி பழனிசாமி, தங்கமணி போன்றோர் தங்களை மீறி கொங்கு மண்டலத்தில் ஈஸ்வரன் பலம் பெறுவதை விரும்பவில்லையாம். இதையெல்லாம் கூட்டி கழித்து பார்த்து தான் திமுக கூட்டணியில் நாங்கள் இணைந்தோம் என்கிறார் அந்தக் கட்சியின் முக்கிய நிர்வாகி ஒருவர்.

    இப்போது 2வது விக்கெட்

    இப்போது 2வது விக்கெட்

    இந்த வரிசையில் இப்போது பாரிவேந்தர் 2வது விக்கெட்டாக திமுக கூட்டணியில் இணைந்துள்ளா். இருப்பினும் இதுவரை பாரிவேந்தருக்கு திமுக டிக்கெட் கொடுத்துள்ளதாக தெரியவில்லை. பொறுத்திருந்து பார்க்க வேண்டும்.

    English summary
    DMK has snatched its 2nd wicket from NDA camp as it has pulled KDMK and IJK from there.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X