சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

புளித்த மாவை கொடுத்ததோடு ஜெயமோகனையும் அடித்தவர்.. திமுகவை சேர்ந்தவராம்!

எழுத்தாளர் ஜெயமோகனை தாக்கியது திமுக பிரமுகர் என்பது தெரியவந்துள்ளது

Google Oneindia Tamil News

சென்னை: தோசை மாவு பாக்கெட் விவகாரத்தில் திமுகவின் பெயர் அடிபட்டுள்ளது. .. எழுத்தாளர் ஜெயமோகனை தாக்கியது திமுக நிர்வாகி என்ற அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.

நேத்து ஜெயமோகன் தோசை மாவு ஏன் புளிச்சு போச்சு என்று கடைக்காரர் கீதாவிடம் கேட்க.. அதற்கு கீதாவின் கணவர் செல்வம் ஜெயமோகனை தாக்கினார்.

இது போலீஸ் ஸ்டேஷன் வரை விவகாரமாக போய்விட்டது. நேசமணி நகர் போலீசார் சம்பவம் குறித்து விசாரித்து, செல்வத்தை கைது செய்தனர். இதற்கு பிறகுதான் விஷயமே ஆரம்பமாகி உள்ளது

எழுத்தாளர் ஜெயமோகனை தாக்கியவர்கள் அரசியல் தலையீடு இல்லாமல் தண்டிக்கப்பட வேண்டும்.. எச் ராஜா ஆவேசம்! எழுத்தாளர் ஜெயமோகனை தாக்கியவர்கள் அரசியல் தலையீடு இல்லாமல் தண்டிக்கப்பட வேண்டும்.. எச் ராஜா ஆவேசம்!

மகேஷ்

மகேஷ்

அதாவது கீதாவின் கணவர் செல்வம் திமுகவைச் சேர்ந்தவராம். திமுக 17வது வட்டப் பிரதிநிதியாக இருக்கிறாராம். இதனால் காவல் நிலையத்துக்கு செல்வத்தை கூட்டிக் கொண்டு வந்த பிறகு கட்சிக்காரர்கள் படையெடுத்துள்ளனர். வக்கீல்களும் வந்துள்ளனர். திமுக நகரச் செயலாளர் மகேஷ் என்பவரும் வந்து ஜெயமோகனிடம் பேசியுள்ளார். ஆனால் அடி வாங்கியது பிரபல எழுத்தாளர் என்பதால் மகேஷ் மூச்சுக் காட்டாமல் திரும்பி விட்டாராம்.

செல்வம்

செல்வம்

அடித்தவர் திமுகவைச் சேர்ந்தவர் என்பதால்தான் பாஜகவைச் சேர்ந்த எச். ராஜா டிவீட் போட்டு கண்டனம் தெரிவித்துள்ளார். இந்த தாக்குதல் சம்பந்தமாக செல்வம் சொல்லும்போது,"நேத்து கொஞ்சம் போதையில் இருந்துட்டேன்.."என்று காரணம் சொன்னாலும், கை நீட்டி அடிப்பது என்பது ஏற்க முடியாத ஒன்று. இந்த செல்வம் மீது அப்பகுதி மக்களும் கூட அதிருப்தியா உள்ளனராம். வாய் ஜாஸ்தி, கை நீளம் என்று சொல்கிறார்கள்.

ஆபாசமாக பேசினர்

ஆபாசமாக பேசினர்

அதுமட்டுமில்லை.. இதுபோன்ற அராஜகங்களில் ஈடுபட்டு வருவது திமுகவுக்கு கெட்ட பெயரையே சம்பாதித்து தருகிறது. தோசை மாவு விஷயத்துக்குகூட ஒரு பிரபலமான எழுத்தாளரை கை நீட்டி அடிப்பது, அவர் வீட்டுக்குப் போய் பெண்களை ஆபாசமாக பேசுவது, இப்படி கேடு கெட்டத்தனமாக நடந்து கொண்ட ஒருவருக்கு ஆதரவாக திமுக பிரமுகர் சப்போர்ட்டுக்கு வருகிறார் என்றால் கட்சித் தலைமை கடுமையான நடவடிக்கை எடுத்தாக வேண்டிய கட்டாயம் உருவாகியுள்ளது.

அடிதடிகள்

அடிதடிகள்

ஆட்சி கவிழ்ப்பு, அடுத்த ஆட்சி நாமதான் என்று திமுக தலைவர் ஸ்டாலின் ஒரு பக்கம் சொல்லிக் கொண்டிருந்தாலும், இன்னொரு பக்கம் பியூட்டி பார்லர், பிரியாணி கடை தாக்குதல்களும், தோசை மாவுக் கடை அடிதடிகளும் தொடர்ந்து கொண்டுதான் இருக்கிறது.

கெட்ட பெயர்

கெட்ட பெயர்

மாநிலத்தின் ஏதோ ஒரு மூலையில், அவ்வப்போது, திமுகவை சேர்ந்த ஒருசில நபரால்தான் கட்சிக்கு கெட்ட பெயர் ஏற்படுகிறது என்றாலும், இவையெல்லாம் ஒரு நாள் ஒட்டுமொத்தமாக வியாபித்து விஸ்வரூபம் எடுத்து நின்று நடுத்தர வர்க்க மக்களிடையே பெரும் கெட்ட பெயரை ஏற்படுத்தி விடும். செல்வத்தை உடனடியாக கட்சியை வீட்டு நீக்குவதோடு கடுமையான கண்டனத்தையும் திமுக தலைமை தெரிவித்தால் நல்லது.

English summary
The violence Activities continues in the DMK and this should be done to control MK Stalin
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X