சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

திமுகவின் ரகசிய மூவ்கள்.. ஆக்டிவ் ஆகும் ஸ்லீப்பர் செல்கள்.. தூக்கமிழக்க போகும் அதிமுக!

எடப்பாடி ஆட்சியை கவிழ்க்க திமுக, அமமுக தீவிரமாக இறங்கி உள்ளது.

Google Oneindia Tamil News

Recommended Video

    6 பேரை நம்பும் ஸ்டாலின்.. ஸ்லீப்பர் செல்களை களமிறக்கும் தினகரன்..

    சென்னை: என்னதான் 9 தொகுதிகளில் வெற்றி பெற்றாலும், இன்னும் நிம்மதியாக அதிமுகவால் மூச்சுகூட விட முடியவில்லை. அதேபோல, நூலிழையில் ஆட்சி கவிழ்ப்பு செய்ய முடியாமல் போனதால், திமுக அடுத்தடுத்த மூவ்களை வேகமாக எடுத்து வருகிறது.

    சட்டமன்றத்தில் மொத்தம் 234 உறுப்பினர்களில் 233 பேர் இருக்கிறார்கள். அதிமுகவில் இப்போது வெற்றி பெற்ற 9 பேர் + சபாநாயகருடன் சேர்த்து அதிமுகவுக்கு 123 பேர் உள்ளனர்.

    அதேபோல, திமுக சார்பில் 13 பேர் வெற்றி பெற்றிருக்கிறார்கள். அதாவது ஏற்கனவே 88 உறுப்பினர்கள் இருந்த நிலையில், இப்போது புதிதாக வெற்றி பெற்றவர்களோடு சேர்த்து 101 உறுப்பினர்கள் உள்ளனர். கூட்டணியை சேர்த்து கொண்டோமானால், காங்கிரஸ் 7, முஸ்லீம் லீக் 1 என மொத்தம் 109 பேர் அதிகரித்துள்ளனர்.

    அடடா.. என்னமா பேசியிருக்கார் பாருங்க..! மோடியை புகழந்த கேரள காங்கிரஸ் மூத்த தலைவர்! அடடா.. என்னமா பேசியிருக்கார் பாருங்க..! மோடியை புகழந்த கேரள காங்கிரஸ் மூத்த தலைவர்!

    நம்பிக்கை இல்லா தீர்மானம்

    நம்பிக்கை இல்லா தீர்மானம்

    ஆட்சி கவிழ்ப்பு நிச்சயம் நடக்கும் என்று சொல்லிதான் பிரச்சாரத்தை கையில் எடுத்தது திமுக. அதற்கேற்றார்போல், ஏற்கனவே சபாநாயகரிடம் நம்பிக்கையில்லா தீர்மானத்தை கொண்டு வர வேண்டும் என பேரவைச் செயலாளரிடம் மனு கொடுக்கப்பட்டுள்ளது. இப்போது முதல் சந்தேகமே இந்த தீர்மானம் எடுத்து கொள்ளப்படுமா என்பதுதான்.

    6 பேர் முடிவு?

    6 பேர் முடிவு?

    அதற்கான வேலைகளைதான் திமுக இப்போது கையில் எடுத்துள்ளது. இதில், எம்எல்ஏக்கள் தனியரசு, தமீமுன் அன்சாரி, கருணாஸ், அமமுக ஆதரவு எம்எல்ஏக்கள் கலைச்செல்வன், ரத்தினசபாபதி, பிரபு ஆகியோரின் நிலைப்பாடுதான். இந்த 6 பேரும் ஆதரவா, எதிர்ப்பா என்று வெளிப்படையாக சொல்லாமல் இதுவரை மண்டை காய வைத்து வருகின்றனர்.

    ஸ்லீப்பர் செல்கள்

    ஸ்லீப்பர் செல்கள்

    இந்த தேர்தல்லில் அமமுக பெரும் தோல்வியை சந்தித்துள்ளதால், பிரபு, கலைச்செல்வன், ரத்தினசபாபதி மூன்று பேருமே அதிமுகவுக்கே ஆதரவு அளிப்பார்கள் என தெரிகிறது. ஆனால் இன்னொரு பக்கம், "சபாநாயகருக்கு எதிராக நம்பிக்கை இல்லா தீர்மானம் நிச்சயம் வரும். அப்போது ஸ்லீப்பர் செல்கள் வெளியே வருவார்கள்" என்று டிடிவி தினகரன் பொடி வைத்து பேசி உள்ளார். அப்படியானால் அமமுக ஆதரவு எம்எல்ஏக்கள் தவிர, வேறு யாராவது தினகரனுடன் கை கோர்க்க தயாராகிறார்களா என தெரியவில்லை.

    நெருக்கடிகள்

    நெருக்கடிகள்

    அதேபோல, இடைத்தேர்தலில் எதிர்பார்த்த வெற்றியை பெறாததால், எப்படியும் ஆளும் தரப்புக்கு நெருக்கடியை தர திமுக முடிவு செய்துள்ளது. சபாநாயகருக்கு எதிராக கொண்டுவந்திருக்கும் நம்பிக்கை இல்லா தீர்மானத்தை வெற்றி பெற வைக்கவும், அதன்மூலம் அதிமுக அரசுக்கு கடுமையான நெருக்கடி தரவும் பல பிளான்கள் போடப்பட்டுள்ளன.

    பசை உள்ள நபர்

    பசை உள்ள நபர்

    முதலாவதாக, அதிமுக எம்எல்ஏக்களை வளைத்து போடும் வேலை ஆரம்பமாகி உள்ளது. அதிருப்தி எம்எல்ஏக்கள், முக்கிய இரட்டை இலை சின்னத்தில் நின்று ஜெயித்த அந்த இரண்டு எம்எல்ஏக்கள் என வலையை பெரிதாக விரித்துள்ளதாம் திமுக. அன்று அதிமுகவில் இருந்து இன்று திமுகவுக்கு வந்த பசை உள்ள பார்ட்டியிடம்தான் இந்த அசைன்மென்ட் தரப்பட்டுள்ளதாம். அதனால் எப்படியும் அதிமுக எம்எல்ஏக்களை திமுகவுக்கு அவர் தனது செல்வாக்கால் கொண்டு வந்துவிடுவார் என்றே நம்பப்படுகிறது.

    வெயிட் அண்ட் சீ

    வெயிட் அண்ட் சீ

    இப்படி எல்லாம் அன்டர்கிரவுண்ட் வேலைகள் துரிதமாக நடப்பதால்தான் நேற்று ஸ்டாலின், வெயிட் அண்ட் சீ என்று சொன்னாரா தெரிவில்லை. ஆனால் சட்டமன்றத்தில் என்னமோ, ஏதோ சீக்கிரமாகவே வெடித்து கிளம்ப போகிறது என்பது மட்டும் புரிகிறது.

    English summary
    The DMK is seeking to bring a resolution No confidence motion. Similarly, the AMMK has come down to the anti-govt moves
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X