சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

தேதி குறிக்க போகும் தேர்தல் ஆணையம்.. பட்டையை கிளப்ப தயாராகும் திமுக.. திருப்பு முனை திருச்சி!

திமுக மாநாடு படுஜோராக நடந்து வருகின்றன

Google Oneindia Tamil News

சென்னை: திமுக திருச்சி மாநாடு பற்றிதான் இப்போ ஒரே பேச்சாக இருக்கிறது.. இந்த மாநாடு பல முக்கிய திருப்பங்களை ஏற்படுத்தக்கூடும் என்ற எதிர்பார்ப்பு எப்போதோ தமிழகத்தில் ஏற்பட்டும் விட்டது..!

Recommended Video

    திருச்சியில் 11வது மாநில மாநாடு... ஓ.பி.எஸ்- ஐ புட்டு புட்டு வைத்த ஸ்டாலின்... தேனியில் பரபரப்பு பேச்சு!

    திமுக மாநாட்டுக்கான ஏற்பாடுகள் பிரம்மாண்டமாக நடந்து வருகிறது.. வழக்கமாக தேர்தல் என்றாலே, அதற்கு முன்னதாக அதிமுகவும், திமுகவும் சரி ஒரு மாஸ் மாநாட்டை நடத்தி காட்டுவார்கள்..

    இந்த மாநாடுகள் தேர்தல் சமயங்களில் மிகுந்த கை கொடுக்ககூடியதாகவே இருக்கும்... தொண்டர்களின் வரவேற்பையும் ஏகமனதாக பெற்றுவிடும்.

    DMKs Trichy Conference and ADMKs Plan

    இப்போதும் அப்படிதான் ஏற்பாடாகி வருகிறது.. மார்ச் 14-ம் தேதி திமுக மாநாடு நடக்கிறது.. இது சம்பந்தமாக 2 விஷயங்கள் கசிந்து வருகின்றன.. மாநாட்டுக்கு முன்னதாகவே வேட்பாளர்கள் பரிசீலனை, கூட்டணிகளுடன் பேச்சுவார்த்தை, சீட் ஒதுக்கீடு இப்படி எல்லா விஷயத்தையும் முடித்துவிட வேண்டும் என்ற முடிவில் இருக்கிறதாம் திமுக தலைமை..

    எனவே அதற்கு முன்னதாகவே, அதிருப்தியில் உள்ள கட்சி தலைவர்களுடன் எல்லாம் சுமூகமாக பேசி முடிக்கும் வேலையில் இறங்க போகிறதாம்.. அப்படி எல்லாம் நல்லபடியாக முடிந்துவிட்டால், திருச்சி மாநாட்டில் இறுதி லிஸ்ட்டை வெளியிட்டுவிடுவாராம் ஸ்டாலின்.. அதற்கான மும்முரங்கள் திமுகவில் நடந்து வருகிறது.

    அதென்ன 3 இடங்கள்.. டாப் கியர் போட்டு தூக்கும் பாஜக.. அதிமுகவுக்கே டஃப் தந்து.. செம அதென்ன 3 இடங்கள்.. டாப் கியர் போட்டு தூக்கும் பாஜக.. அதிமுகவுக்கே டஃப் தந்து.. செம "மாஸ்டர் பிளான்"

    ஆனால், இந்த மாநாட்டுக்கு முன்பாகவே ஒருவேளை தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டு விட்டால், தேர்தல் விதிகளை கணக்கில் கொண்டு, மாநாட்டுக்கு செய்யப்பட்ட செலவுகளை முன்வைத்து, எதையாவது கிண்டி பிரச்சனையை கிளப்பலாம் என்று அதிமுக தரப்பு நினைக்கிறதாம்.

    ஆனால், தேர்தல் தேதி அறிவிப்புக்கு முன்பாகவே மாநாட்டு செலவுகளை திமுக தரப்பு செய்யப்பட்டு விட்டதாக சொல்கிறது.. எனவே தேர்தல் நடத்தை விதிகளில் அது வராது என்றும் தகவல்கள் கூறுகின்றன.. மாநாடு எப்போது நடக்கும் என்று திமுகவினர் ஆர்வமாக காத்து கிடக்கிறார்கள் என்றால், தேர்தல் தேதி எப்போது அறிவிக்கப்படும் என்று அதிமுக தரப்பு ஆர்வமாக காத்து கிடக்கிறதாம்..!

    English summary
    DMKs Trichy Conference and ADMKs Plan
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X