சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

கொரோனா தடுப்பூசி போட்டால்.. 28 நாட்களுக்கு "இந்த விஷயம்" செய்யவே கூடாது.. விஜயபாஸ்கர் முக்கிய தகவல்

Google Oneindia Tamil News

சென்னை: இந்தியாவில், வரும் 16ம் தேதி முதல், கொரோனா தடுப்பூசி அவசரகால பயன்பாட்டுக்கு அனுமதிக்கப்படும். ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்தின் கோவிஷீல்டு மற்றும், பாரத் பயோடெக் நிறுவனத்தின் கோவேக்சின் ஆகிய இரு தடுப்பூசிகளுக்கு அரசு அனுமதி வழங்கியுள்ளது.

Recommended Video

    சென்னை: தடுப்பூசி போட்டுக்கிட்டா.. தண்ணி அடிக்கக்கூடாது.. வார்னிங் தந்த சுகாதார அமைச்சர்..!

    இரு தடுப்பூசிகளுமே இரு டோஸ்களை கொண்டதாகும். ஒரு டோஸ் போட்டால் மட்டும் கொரோனா வராது என மெத்தனமாக இருந்துவிடக் கூடாது. முதல் டோஸ் போட்ட பிறகும், வெளியிடங்களுக்கு அனாவசியமாக போகக் கூடாது.

    தடுப்பூசியின் இரண்டு டோஸ் 28 நாட்கள் இடைவெளியில் எடுக்கப்பட வேண்டும்.

    கொரோனா தடுப்பூசி பெறுபவர்களின் பட்டியலில் உயிரிழந்த நர்ஸ்களின் பெயர்கள்... உபி-இல் பெரும் குழப்பம்கொரோனா தடுப்பூசி பெறுபவர்களின் பட்டியலில் உயிரிழந்த நர்ஸ்களின் பெயர்கள்... உபி-இல் பெரும் குழப்பம்

     28 நாட்கள்

    28 நாட்கள்

    ஆன்டிபாடிகளின் பாதுகாப்பு பொதுவாக இரண்டாவது டோஸுக்கு இரண்டு வாரங்களுக்குப் பிறகு உருவாகும். அமெரிக்காவில் போடப்படும் ஃபைசர் தடுப்பூசியும் கூட அப்படித்தான். 28 நாட்கள் இடைவெளியில், கொரோனா தடுப்பூசி போட்டுக் கொள்ள வேண்டியது கட்டாயமாகும்.

    மது அருந்தக் கூடாது

    மது அருந்தக் கூடாது

    இந்த நிலையில்தான், சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் இன்று அளித்த பேட்டியொன்றில், முக்கிய தகவல் ஒன்றைச் சொல்லியுள்ளார். திருச்சியிலிருந்து இதர மாவட்டங்களுக்கு அனுப்ப வேண்டிய கரோனா தடுப்பூசிகளை பாதுகாப்பு வாகனங்களுடன் அமைச்சர் விஜயபாஸ்கர், வழியனுப்பி வைத்தார். பின்னர் அவர் கூறுகையில், கொரோனா தடுப்பூசி போட்டுவிட்டு மது அருந்தக்கூடாது. தடுப்பூசி போட்ட 42 நாட்களுக்கு பிறகே நோய் எதிர்ப்பு சக்தி உண்டாகும் என்று கூறினார்.

     நோய் எதிர்ப்பு சக்தி

    நோய் எதிர்ப்பு சக்தி

    விஜயபாஸ்கர் செய்தியாளர்களிடம் மேலும் கூறியதாவது: கொரோனா தடுப்பூசியின் முதல் டோஸ் போட்ட பிறகு, மது அருந்தக்கூடாது. அதாவது 2வது டோஸ் போடும் வரையில், அடுத்த 28 நாட்களுக்கு மது அருந்தக்கூடாது. அப்படிச் செய்யும்போதுதான் நோய் எதிர்ப்பு சக்தி உருவாகும்.

    தனிமை தேவையில்லை

    தனிமை தேவையில்லை

    தடுப்பூசி போட்ட 42 நாட்களுக்கு பிறகே நோய் எதிர்ப்பு சக்தி உண்டாகும். எனவே, முதல் டோஸ் போட்டுவிட்டோ, அல்லது குறுகிய காலத்திலோ, அநாவசியமாக வெளியே போகக்கூடாது. கொரோனா தாக்குதலுக்கு உள்ளாகிவிடக் கூடாது. அதேநேரம், கொரோனா தடுப்பூசி போடுபவர்களை தனிமைப்படுத்த வேண்டாம்.
    இவ்வாறு விஜயபாஸ்கர் கூறி உள்ளார்.

    English summary
    In an interview today, Health Minister Vijayabaskar said an important piece of information. Do not drink alcohol after getting the corona vaccine. Vijayabaskar also said that immunity would be available 42 days after vaccination.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X