சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

நேர்மையின்றி பணம் சம்பாதிப்பவர்களுக்கு சிறைகளை தயார் செய்து வருகிறார் மோடி.. வெங்கையா நாயுடு

Google Oneindia Tamil News

சென்னை: இளைஞர்கள் தான் நாட்டின் கலாச்சாரத்தை பாதுகாக்க வேண்டும் என்று துணை குடியரசு தலைவர் வெங்கையா நாயுடு கூறியுள்ளார்.

சென்னை அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் நடைபெற்ற நூல் வெளியீட்டு விழா நிகழ்ச்சியில் பேசிய அவர், அனைவரும் தாய்மொழிக்கு முக்கியத்துவம் தர வேண்டும் என்றார்.

Do not impose any language, do not protest .. Venkaiah Naidu

திருச்சி ஸ்ரீ ரங்கநாதர் சுவாமி திருக்கோவிலின் பாரம்பரியத்தை அதன் பழமை மாறாமல் புனரமைக்கப்பட்டது பற்றிய நூலை, துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு வெளியிட்டார். பின்னர் தொடர்ந்து பேசிய அவர் இளம் தலைமுறையினர் நாட்டிலுள்ள புராதான, வரலாற்று சின்னங்களை பாதுகாக்கவும், பராமரிக்கவும் முன்வர வேண்டும் என்றார்.

இந்து என கூற பலரும் ஏன் தயங்குகின்றனர் என கேள்வி எழுப்பிய வெங்கையா நாயுடு, நாட்டில் வாழும் 80 சதவீத மக்கள் இந்துக்கள் தானே பின் எதற்கு தயக்கம் என்றார்.

நம் புராதானங்கள், இதிகாசங்களை குழந்தைகளுக்கு கற்று தர வேண்டும். அது மட்டுமல்லாமல் வரலாற்றை அறியும் ஆர்வத்தையும் குழந்தைகளுக்கு ஏற்படுத்த வேண்டும். நம் நாடு வளம் நிறைந்த நாடு, வெளிநாட்டு அறிஞர்கள் கூட நம் நாட்டின் பெருமைகளை பற்றிய நிறைய எழுதி உள்ளனர்.

நம்பிக்கை வாக்கெடுப்பில் தோற்றால் புதிய அரசு அமைய குமாரசாமி வழி விட வேண்டும்.. எடியூரப்பா நம்பிக்கை வாக்கெடுப்பில் தோற்றால் புதிய அரசு அமைய குமாரசாமி வழி விட வேண்டும்.. எடியூரப்பா

தமிழ் மொழி மிகவும் இனிமையான மொழி. தாய்மொழியை மறக்காமல் இருக்க வேண்டும். தாய்மொழிக்கு மிகுந்த முக்கியத்துவம் தர வேண்டும், எந்த மொழியையும் யார் மீதும் கட்டாயப்படுத்தக் கூடாது. அதே போல எந்த மொழியையும் யாரும் எதிர்க்கவும் கூடாது என வலியுறுத்தினார்.

நாட்டில் நேர்மையின்றி பலர் பணம் சம்பாதித்து வருகின்றனர். அவர்களுக்கெல்லாம் மோடி, சிறைகளை தயார் செய்து வருவதாக பேசினார் வெங்கையா நாயுடு.

English summary
Vice President of the Republic, Venkaiah Naidu has said that it is the youths who should protect the country's culture.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X