சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

டெல்டாவில் பெட்ரோலிய ஆராய்ச்சி வேண்டாம்.. இயக்குனர் யார் கண்ணன் வலியுறுத்தல்!

கஜா புயலில் பாதிக்கப்பட்ட தஞ்சை மாவட்டத்தில் பெட்ரோலிய பொருட்களுக்கான ஆராய்ச்சியை நிறுத்த வேண்டும் என இயக்குனர் யார் கண்ணன் வலியுறுத்தி உள்ளார்.

Google Oneindia Tamil News

சென்னை: கஜா புயலில் பாதிக்கப்பட்ட தஞ்சை மாவட்டத்தில் பெட்ரோலிய பொருட்களுக்கான ஆராய்ச்சியை நிறுத்த வேண்டும் என இயக்குனர் யார் கண்ணன் வலியுறுத்தி உள்ளார்.

கஜா புயல் பாதித்த பகுதிகளை நேரில் ஆய்வு செய்த இயக்குனர் யார் கண்ணன், அங்கு ஏற்பட்டுள்ள பாதிப்புகள் குறித்து சென்னை பத்திரிகையாளர் மன்றத்தில் செய்தியாளர்களை சந்தித்து பகிர்ந்து கொண்டார்.

Do not research petroleum products in Cauvery Delta areas says Director Yaar Kannan

அப்போது அவர் பேசியதாவது, கஜா புயல் பாதித்த பகுதிகளில் தென்னை விவசாயிகள் எதிர்காலம் கேள்விகுறியாகியுள்ளது. அந்த மாவட்டங்களில் மக்கள் சொந்த தேசத்திலேயே அகதிகளாக உள்ளனர். கஜா புயல் பாதித்த மாவட்டங்களில் உள்ள கல்லூரிகளில் கல்வி கட்டணம் ரத்து செய்யப்பட வேண்டும்.

புயலால் பாதிக்கப்பட்டுள்ள பகுதிகளில் மின் வாரிய ஊழியர்கள் பணி சிறப்பாக உள்ளது என்று பாராட்டினார்.

தஞ்சை மாவட்டத்தில் பெட்ரோலிய பொருட்களுக்கான ஆராய்ச்சியை நிறுத்த வேண்டும். அரசு வழங்கும் நிவாரணம் முறையாக மக்களுக்கு சென்று சேர வேண்டும் என்றார். அதோடு, மத்திய அமைச்சர்கள் கஜா புயல் பாதித்த மாவட்டங்களை வந்து பார்க்க வேண்டும் எனவும் கேட்டுக்கொண்டார்.

English summary
Director Yaar Kannan emphasis to stop research of petroleum products in Tanjore district
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X