"பச்சை சிக்னல்".. துண்டுபோடும் "தலைகள்".. எடப்பாடியை விடுங்க.. சிங்கிளா வந்த "சிங்கம்".. எகிறிய மவுசு
சென்னை: அதிமுகவில் 2 விஷயங்கள் தற்போது முக்கியமாக ஓடிக் கொண்டிருக்கிறது.. அந்த கட்சியின் கூடாரமே இரு தலைவர்களின் செயல்பாடுகளால் குழம்பி போயுள்ளதாக தெரிகிறது.
யார் அதிமுகவை கைப்பற்றப் போகிறார்கள் என்று தெரியவில்லை.. நாளுக்கு நாள் எடப்பாடி - ஓபிஎஸ் இரு தலைவர்களுக்குள் முட்டல் மோதல்கள் அதிகரித்து வருகின்றன.
அதிலும் நேற்றைய தினம், பாஜக ஜனாதிபதி வேட்பாளர் திரௌபதி முர்மு சென்னை வந்திருந்த நிலையில், இவர்கள் 2 பேரின் பிளவுகள், மேலும் அதிகரித்து அப்பட்டமாக தெரியவந்தது.
"தண்ணீர் பாட்டில்" எடப்பாடி பழனிசாமி.. "ஹோட்டல்" பாலிட்டிக்ஸ்.. மொத்த அதிமுகவை அலற விட்ட டி.ஆர்.பாலு

ஜெர்க் - எடப்பாடி
எடப்பாடி ஆதரவாளர்களுடன் காட்சியளிக்க, சில ஆதரவாளர்களுடன் மட்டுமே, சிங்களாக வந்து திரௌபதிக்கு ஆதரவு தெரிவித்து விட்டு போனார்.. எப்படியும் பொதுக்குழுவை நடத்திவிடுவது என்று எடப்பாடி தரப்பு மும்முரம் காட்டி வருகிறது.. பொதுக்குழுவை நடத்த விட மாட்டேன் என்று ஓபிஎஸ் ஆர்வம் காட்டி வருகிறார்.. ஓபிஎஸ் கோர்ட்டுக்கே போய்விட்டார்.. இந்திய தேர்தல் ஆணையத்தின் வாசலையும் மிதித்துள்ளார்.. இதனால் எடப்பாடி பழனிசாமி சற்று ஜெர்க் ஆகி காணப்படுவதாக தெரிகிறது..

காய் நகர்த்தல்
ஒருவேளை இரட்டை இலையை ஓபிஎஸ் முடக்கிவிட்டால், அதை எப்படி மீட்பது? இலை இல்லாமல் எப்படி அரசியல் செய்வது என்ற இரட்டிப்பு குழப்பத்திலும், கலக்கத்திலும் ஆழ்ந்துள்ளதாக கூறப்படுகிறது. பொதுக்குழு நடத்தப்பட்டால், பொருளாளர் பதவி யாருக்கு என்ற சிக்கல் அதிமுக சீனியர்களிடம் எழுந்துள்ளது.. கிட்டத்தட்ட 10க்கும் மேற்பட்ட சீனியர்கள் துண்டை விரித்து வரும் நிலையில், வேலுமணி அல்லது கேபி முனுசாமி இருவரில் ஒருவருக்குதான் அந்த பதவி கிடைக்கும் என்றும் சலசலப்புகள் எழுந்துள்ளன..

எடப்பாடி
அப்படியானால், மற்ற சீனியர்கள் எடப்பாடிக்கான ஆதரவை விலக்கி கொள்வார்களா? அல்லது வேறு கட்சிக்கு தாவுவார்களா? அல்லது ஓபிஎஸ்ஸுக்கு ஆதரவு தருவார்களா என்ற பீதியும் எடப்பாடிக்கு எழுந்துள்ளதாம். மற்றொரு பக்கம், சில சீனியர்கள் இப்போதே ஓபிஎஸ் பக்கம் தாவ ரெடியாகியும் வருகிறார்களாம்.. காரணம், ராஜ்ய சபா எம்பி சீட்டும் கிடைக்கவில்லை. பொருளாளர் பதவியும் கிடைக்கவில்லை. எடப்பாடி எப்படியும் நம்மை ஒதுக்கிவைக்கத்தான் போகிறார் என்பதாலேயே, ஓபிஎஸ் பக்கம் மறைமுக ஆதரவு தந்து வருவதாகவும், ஒரு செய்தி உள்ளுக்குள் ஓடிக் கொண்டிருக்கிறது...

டெல்லி ஆதரவு
அதுவும் இல்லாமல், எடப்பாடி பழனிசாமியின் மீதான நம்பிக்கையும் இவர்களுக்கு குறைந்து வருவதாகவே தெரிகிறது. ஆனானப்பட்ட சசிகலாவையே தூக்கி எறிந்தவர், நம்மை எல்லாம் கழட்டிவிட ரொம்ப காலம் ஆகாது என்பதே ஆழ்மனது எண்ணமாக உள்ளதாம்.. எம்எல்ஏக்களின் ஆதரவு நிறைய வைத்திருந்தாலும், டெல்லி ஆதரவு யாருக்கு கிடைக்கும் என்பதுதான் இங்கு முக்கியமாக பார்க்கப்படுகிறது.. ஒருவேளை ஓபிஎஸ்ஸுக்கு பச்சை சிக்னலை மேலிடம் காட்டிவிட்டால், எடப்பாடியுடன் ஒட்டிக் கொண்டு இருப்பதில் எந்தவிதமான பிரயோஜனமும் கிடையாது என்றும் யோசிக்கிறார்களாம்..

பச்சை சிக்னல்
அதுமட்டுமல்ல, சமீபத்தில் டெல்லி சென்றபோது, சில முக்கிய காய்நகர்த்தலை ஓபிஎஸ் மேற்கொண்டதாகவும், அங்கு முக்கியஸ்தர்களை சந்தித்து பேசியபோது, அதற்கு பாஜக மேலிடம் க்ரீன் சிக்னல் காட்டிவிட்டதாகவும் தகவல்கள் கூறுகின்றன.. இதன் காரணமாகவும், ஓபிஎஸ் பக்கம் சிலர் தாவ முயற்சிகளை மேற்கொண்டுள்ளதாக கூறப்படுகிறது.. ஆக மொத்தம், அதிமுகவின் குழப்பம் இன்னும் நீங்கவில்லை..!

ஆன்லைன் முறை
இதனிடையே இன்னொரு தகவலும் கசிந்து வருகிறது.. தமிழகத்தில் கொரோனா தொற்று தற்போது அதிகமாகி கொண்டே வருவதால், ஆன்லைன் முறையில் அதிமுக பொதுக்குழுக் கூட்டத்தை நடத்தலாமா என்று யோசித்து வருகிறார்களாம் எடப்பாடி தரப்பில்.. 11ம் தேதி திட்டமிட்டபடி பொதுக்குழுக் கூட்டத்தை நடத்த முடியாவிட்டால், கவுரவ பிரச்சனையாகிவிடும் என்றும் நினைக்கிறார்களாம்.. இருந்தாலும், பொதுக்குழு உறுப்பினர்களுக்கு ஏற்கனவே அழைப்பிதழ் அனுப்பப்பட்டு உள்ள நிலையில், ஆன்லைன் வாயிலாக கூட்டத்தை நடத்தலாமா என்பது குறித்து தீவிர ஆலோசனை நடைபெற்று வருவதாக கூறப்படுகிறது.