சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

காற்றழுத்த தாழ்வு மண்டலம் சென்னையிலிருந்து இப்போ எவ்வளவு தூரத்தில் இருக்கிறது தெரியுமா..?

Google Oneindia Tamil News

Recommended Video

    Fani cyclone: தாழ்வு மண்டலமாக வலுப்பெற்றது.. அடுத்தது ஃபனி புயல் தான்- வீடியோ

    சென்னை: வங்கக் கடலில் உருவாகி பலம் பெற்றுள்ள காற்றழுத்த தாழ்வு மண்டலம், சென்னைக்கு தென்கிழக்கே 1490 கி.மீ தொலைவில் தற்போது நிலை கொண்டுள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.

    காற்றழுத்த தாழ்வு மண்டலமாக பலம் பெற்றதையடுத்து, அடுத்த 36 மணி நேரத்தில் இது ஃபனி புயலாக மாற வாய்ப்பு உருவாகியுள்ளதாகவும் வானிலை மைய அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர்.

    Do you know Atmospheric inferior zone how far away from Chennai?

    தொடர்ந்து வடமேற்கு திசையில் நகர்ந்து, வரும் 30-ம் தேதி வடதமிழகம் மற்றும் தெற்கு ஆந்திர கடல்பகுதியை நெருங்கும். இதன் காரணமாக வடதமிழகம், தெற்கு ஆந்திராவில் கனமழை பெய்யும் என தெரிவிக்கப்பட்டுள்ளது

    கஜா பாதிப்பே இன்னும் அகலவில்லை.. அதற்குள் வந்துவிட்டது ஃபனி புயல்.. அரசு இப்போதாவது சுதாரிக்குமா? கஜா பாதிப்பே இன்னும் அகலவில்லை.. அதற்குள் வந்துவிட்டது ஃபனி புயல்.. அரசு இப்போதாவது சுதாரிக்குமா?

    ஏப்ரல் 30, மே 1-ம் தேதிகளில் வடதமிழகம், தெற்கு ஆந்திராவில் கனமழை முதல் மிக கனமழை பெய்யும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து மீனவர்கள் வரும் 28-ம் தேதிக்குள் கரை திரும்ப, வானிலை ஆய்வு மையம் அறிவுறுத்தியுள்ளது. இதனிடையே நாகை மற்றும் காரைக்கால் துறைமுகங்களில் 1-ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

    English summary
    Indian Meteorological Survey said that the atmospheric pressure in the Bay of Bengal has been in the range of 1490 kms south east of Chennai.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X